சென்னை அருகே சியட் டயர் தொழற்சாலை; 1000 பேருக்கு வேலை

ரூ 4000 கோடி முதலீட்டில் சென்னையில் டயர் தொழிற்சாலையை துவங்குகிறது சியட் நிறுவனம். சுமார் 1000 பேருக்கு நேரடியாக வேலை கிடைக்க வாய்ப்புஉருவாகவுள்ளது.

By Balasubramanian

ரூ 4000 கோடி முதலீட்டில் சென்னையில் டயர் தொழிற்சாலையை துவங்குகிறது சியட் நிறுவனம். சுமார் 1000 பேருக்கு நேரடியாக வேலை கிடைக்க வாய்ப்பு
உருவாகவுள்ளது.

சென்னை அருகே சியட் டயர் தொழற்சாலை; 1000 பேருக்கு வேலை

ஆர்பிஜி குழுமத்தின் முக்கிய நிறுவனமான சியட் டயர் நிறுவனம் சென்னையில் ரூ 4000 கோடி முதலீட்டில் டயர் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. அதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீ பெரும்புதுார் அருகே அந்நிறுவனம் 150 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது.

சென்னை அருகே சியட் டயர் தொழற்சாலை; 1000 பேருக்கு வேலை

இந்த திட்டம் குறித்து ஏற்கனவே தமிழக அரசிடம் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது தமிழக அரசு கடந்த் புதன் அன்று அனுமதியளித்த நிலையில் இந்நிறுவனம் தமிழகத்திற்கு வருவது உறுதியாகியுள்ளது.

சென்னை அருகே சியட் டயர் தொழற்சாலை; 1000 பேருக்கு வேலை

தமிழகத்திற்குள் கடந்த சில ஆண்டுகளாக வரும் முதலீடுகளின் அளவு குறைவாகவுள்ளது. தமிழகத்தை குறிவைத்து வந்த கியா மோட்டார்ஸ் நிறுவனமும் ஆந்திராவை நோக்கி சென்றது. இந்நிலையில் சியட் நிறுவனத்தின் முடிவு தமிழக அரசிற்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

சென்னை அருகே சியட் டயர் தொழற்சாலை; 1000 பேருக்கு வேலை

இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் 1000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. சென்னை அருகே ஏற்கனவே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகமாக இருக்கிறது அந்நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய வசதியாக இருக்கும் என்பதால் இந்த இடத்தை தேர்வு செய்துள்ளது சியட் நிறவனம்.

சென்னை அருகே சியட் டயர் தொழற்சாலை; 1000 பேருக்கு வேலை

தற்போது சென்னையில் அமைக்கப்படும் தொழிற்சாலை மூலம் சில்லறை வர்த்தகத்திற்காக அல்லாமல் நேரடியாக கார் பைக் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

சென்னை அருகே சியட் டயர் தொழற்சாலை; 1000 பேருக்கு வேலை

இதன் படி சென்னையை சுற்றியுள்ள ஹூண்டாய், ரெனால்ட் மற்றும் நிஸான், ஃபோர்டு போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள், கமர்ஷியல் வாகன தயாரிப்பாளர்களான அசோக் லேலேண்ட், பாரத் பென்ஸ் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்டு மற்றும் யமஹா ஆகிய நிறுவனங்களுக்கு டயர் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் வெளி மாநிலங்களுக்கு வர்த்தகம் செய்யும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னை அருகே சியட் டயர் தொழற்சாலை; 1000 பேருக்கு வேலை

தற்போது இந்த டயர் தொழிற்சாலைக்காக அரசு தடையில்லாத மின் வசதி, சென்னை கோயம்பேடு அருகே உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரில் இந்த நிறுவனத்திற்கு ஒரு தண்ணீர் கனெக்ஷன் இதன் மூலம் அந்நிறுவனத்திற்கு இடைவிடாத தண்ணீர் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த தண்ணீரை கொண்டு அந்நிறுவனம் டயர் உற்பத்தியை மேற்கொள்ளவுள்ளது.

சென்னை அருகே சியட் டயர் தொழற்சாலை; 1000 பேருக்கு வேலை

ஏற்கனவே இந்நிறுவனம் இருக்கும் பகுதியை சுற்றி ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் வழங்ககூடி நிறுவனங்கள் அதிமாக இருக்கிறது. பேரிங் தயாரிப்பவர்கள், டயர் பேங்க் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் தற்போது சென்னை ஆட்டேமொபைல் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?
  2. ஸ்கூட்டர் விலையில் கார் வேண்டுமா? வாங்க வாங்கலாம்....
  3. புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!
  4. ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.. தன் நிறுவனத்தின் காரை பாராட்டியவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்
  5. EXPAND

    டிரைவ் ஸ்பார்க் bredcrumbஇரு சக்கர வாகனங்கள் bredcrumbஇமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்

    இமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்

Most Read Articles
English summary
CEAT plans to set up Rs 4,000 crore tyre unit near Chennai. Read in Tamil
Story first published: Thursday, June 28, 2018, 11:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X