தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

இந்தியாவின் புதிய கார் மார்கெட்டை காட்டிலும் யூஸ்டு கார் மார்க்கெட் இரண்டரை மடங்கு பெரியது. புதிய காரை காட்டிலும், செகண்ட் ஹேண்ட் காரை வாங்குவதற்குதான் இந்தியர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.

By Arun

இந்தியாவின் புதிய கார் மார்கெட்டை காட்டிலும் யூஸ்டு கார் மார்க்கெட் இரண்டரை மடங்கு பெரியது. அதாவது புதிய காரை காட்டிலும், செகண்ட் ஹேண்ட் காரை வாங்குவதற்குதான் இந்தியர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் பல நன்மைகள் இருந்தாலும், ஒரு சில அபாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இதுகுறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

திருடப்பட்ட கார்கள்

செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது, அதிக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இதுதான். ஏனெனில் திருடப்பட்ட காரை நம் தலையில் கட்டிவிடும் அபாயம் உண்டு. திருடப்பட்ட காரின் இன்ஜின், சேஸிஸ் நம்பரை மாற்றி போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் எளிதாக விற்பனை செய்து விடுகின்றனர்.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

சில யூஸ்டு கார் டீலர்கள் கூட கார் கொள்ளையர்களுடன் கூட்டு வைத்திருக்கின்றனர். நாம் யூஸ்டு கார் டீலர்களிடம் என்ன கார் கேட்கிறோமோ, அந்த காரை திருடி தரும்படி யூஸ்டு கார் டீலர்களிடம் இருந்து கொள்ளையர்களுக்கு உத்தரவு செல்லும்.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

அப்படி கொள்ளையர்கள் திருடி தரும் கார்களை நம்மிடம் விற்பனை செய்து விடுவார்கள். இதற்குரிய கமிஷனை கொள்ளையர்களுக்கு, யூஸ்டு கார் டீலர்கள் வழங்கி விடுகின்றனர். இப்படியான ஒரு கும்பல் டெல்லியில் சமீபத்தில் பிடிபட்டது. எனவே இந்த விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

விபத்தில் சிக்கிய கார்கள்

பெரிய அளவிலான விபத்தில் சிக்கிய கார்களை, விற்பனை செய்து விட அந்த காரின் உரிமையாளர் விரும்புவார். மிகப்பெரிய விபத்தானது, சரி செய்ய முடியாத அளவிற்கான பிரச்னைகளை காரின் சேஸிஸிற்கு உண்டாக்கி விடும்.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

ஆனால் பேனலை சரி செய்து, ரீ பெயிண்ட் அடித்து, புதிய கார் போன்ற தோற்றத்தை கொண்டு வந்து விடுவார்கள். எனவே விபத்தில் சிக்கியிருக்குமா? என்ற சந்தேகமே எழாத அளவிற்கு காரை புத்தம் புதிதாக அலங்கரித்து, நம் தலையில் கட்டி விடக்கூடிய அபாயம் உள்ளது.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

எனவே செகண்ட் ஹேண்டில் கார் வாங்கும்போது, அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள் மூலமாக சோதனை செய்து கொள்வது நல்லது. அத்துடன் கடந்த காலங்களில் இன்சூரன்ஸ் க்ளைம் செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் பார்த்து கொள்ளலாம். இதன்மூலம் கார் விபத்தில் சிக்கியிருக்கிறதா? என்பது தெரிந்து விடும்.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

குற்ற வழக்குகளில் சிக்கிய கார்கள்

மிகப்பெரிய அளவிலான குற்றங்களில் சிக்கிய கார்களுடனான உறவை கைவிட அந்த காரின் உரிமையாளர் விரும்புவார். விபத்து, போதை பொருள் கடத்தல் போன்ற குற்ற வழக்குகளில் சிக்கிய கார்களை உடனடியாக விற்று விடவே அந்த காரின் உரிமையாளர் நினைப்பார்.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

அத்தகைய கார்கள் மிகுந்த கண்காணிப்பின் கீழ் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு காரை வாங்கி விட்டு, பின்னர் சிரமப்பட கூடாது. எனவே செகண்ட் ஹேண்டில் கார் வாங்குவதாக இருந்தால், அந்த காரின் போலீஸ் வெரிபிகேஷனையும் வாங்கி கொள்வது மிக மிக முக்கியமானது.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

துருப்பிடித்த கார்கள்

கார் துருப்பிடித்திருக்கிறதா? என்பதை கண்டறிவது கடினமானது. குறிப்பாக கண்ணுக்கு தெரியாத இடத்தில் துருபிடித்திருந்தால் கண்டுபிடிக்கவே முடியாது. எனினும் காரின் கண்டிஷனை நன்றாக சோதனையிடுங்கள். சிறிய அளவில் துரு இருந்தாலும், அந்த காரை வாங்கும் எண்ணத்தை கைவிட்டு விடுவது நல்லது.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

தவறாக கையாளப்பட்ட கார்கள்

கார்களை பராமரிப்பது என்பது ஒரு தனிக்கலை. ஒரு சிலர் காரை வாங்கிய ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் விற்பனை செய்து விடுவார்கள். மிக நீண்ட நாட்களுக்கு காரை வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் காரை பராமரித்திருக்க மாட்டார்கள்.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

எப்படியும் விற்றுவிடுவோம் என்பதற்காக காரை மிக மோசமாக கையாண்டிருப்பார்கள். அத்தகைய கார்களை பார்த்தவுடன் கண்டறிய முடியாது. நாம் வாங்கிய சில மாதங்களுக்கு பிறகு வேலையை காட்ட தொடங்கி விடும். இதையும் தேர்ந்த மெக்கானிக் மூலமாக பரிசோதித்து கொள்வது சிறந்தது.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காத பழைய கார்கள்

செகண்ட் ஹேண்டில் கார் வாங்கும்போது, என்ன நிறுவனம்? எந்த மாடல்? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த காரின் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்குமா? என்பதையும் சோதித்து கொள்ளலாம். உற்பத்தி நிறுத்தப்பட்ட மாடலை வாங்கி வைத்து விட்டு, ஸ்பேர் பார்ட்ஸ்களுக்கு அலைந்து கொண்டிருக்க முடியாது.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

அதேபோல் நாம் வாங்கிய காரின் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறி விட்டாலும் சிரமம்தான். இதுபோன்ற கார்களை பராமரிக்க அதிக அளவிலான தொகையை செலவிட வேண்டியிருக்கும். ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்க காலதாமதம் ஆவதுடன், அதன் விலையும் மிக அதிகமாக இருக்கும்.

தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்... செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவதில் இத்தனை அபாயங்களா?

ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் உள்ள கார்கள்

ஆயுட்காலம் முடிவடையும் நிலையில் உள்ள கார்களையும் தவிர்த்து விடலாம். உதாரணத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் கார்களை டெல்லியில் சட்டபூர்வமாக ஓட்ட முடியாது. இதேபோன்ற சட்டம் 15 ஆண்டுகள் ஆன பெட்ரோல் காருக்கும் உள்ளது. எனவே இத்தகைய கார்களை வாங்கும் எண்ணத்தில் இருந்து விலகி இருப்பதே நல்லது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
The big dangers of buying a second hand car in india
Story first published: Wednesday, June 27, 2018, 19:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X