புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது!
வரும் ஆகஸ்ட் மாதம் புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. அ
புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் சொகுசு செடான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த ஏப்ரல் மாதம் புதிய தலைமுறை லெக்சஸ் இஎஸ்300எச் சொகுசு செடான் கார் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. டொயோட்டா டிஎன்ஜிஏ பிளாட்ஃபார்மை தழுவிய லெக்சஸ் ஆர்க்கிடெக்ச்சர்-கே என்ற புதிய கட்டமைப்பில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

லெக்சஸ் கார்களுக்கு உரித்தான பிரம்மாண்ட க்ரில் அமைப்பு முகப்பை ஆக்கிரமித்துள்ளது. ஹெட்லைட்டின் அளவும் க்ரில் அமைப்புக்கு தக்கவாறு பெரிதாக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், பிரம்மாண்டமான அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் 12.3 அங்கு தொடுதிரையு"ன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. டச்பேடு மூலமாகவும், வாய்ஸ் கமாண்ட் மூலமாகவும் கட்டுப்படுத்த முடியும். 19 ஸ்பீக்கர்கள் கொண்ட மார்க் லெவின்சன் மியூசிக் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. உட்புறம் மிக அதிக இடவசதி கொண்ட காராக இருக்கிறது.

இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாரில் இயங்கும் ஹைப்ரிட் எரிநுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினும், மின்மோட்டாரும் சேர்ந்து அதிகபட்சமாக 216 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கின்றன.

வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனால், விலை நிர்ணயமும் போட்டியாளர்களைவிட சற்று அதிகமாக இருக்கும்.

ரூ.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய லெக்சஸ் இஎஸ் 300எச் ஹைப்ரிட் சொகுசு காரானது மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








