இமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இமயமலை பயணத்தை மேற்கொண்டது. வெற்றிகரமாக லே பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்வளவு உயரத்தை எட்டிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை

By Balasubramanian

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இமயமலை பயணத்தை மேற்கொண்டது. வெற்றிகரமாக லே பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்வளவு உயரத்தை எட்டிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

இமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்

இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பது அதிகமாகிவிட்டது. பல புதிய நிறுவனங்கள் தங்களே வாகனங்களை தயாரித்து விற்பனை செய்ய துவங்கிவிட்டனர். இப்படியான ஒரு நிறுவனம் தான் ஒகினவா.

இமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்

இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் தான் உலகின் மிக அதிக உயரத்திற்கு பயணம் செய்த முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த பிரெய்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் குர்ஹானில் இருந்து லே வரை பயணம் செய்துள்ளது.

இமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்

10 நாட்கள் நடந்த இந்த பயணத்தில் இந்த ஸ்கூட்டர் மொத்தம் 1350 கிமீ பயணம் செய்துள்ளது. இதில் வரலாற்ற சிறப்பு மிக்க விஷயம் என்னவென்றால் 18,000 அடி உயரத்தை கடக்க முயற்சிக்கு முதல் எலெக்ட்ரிக் வாகனம் இது தான். அதையும் வெற்றி கரமாக முடித்துள்ளது.

இமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்

"பிரெய்ஸ் தி ஹிமாலயா" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த பயணம் குர்கானில் ஓஹினாவா நிறுவனம் நிர்வாக இயக்குநர் ஜிடென்டர் ஷர்மா மற்றும் சேர்மன் ருபாலி சர்மா ஆகியோர் துவங்கி வைத்தனர்.

இமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்

இந்த பயணம் அம்பாலா, ஜலந்தர், பதான்கோட், பனிஹல், கந்தர்பால், சோனாமார்க், ஸ்ரீநகர், பிம்பத், லாமாயுரு, லே, வழியாக இறுதியாக கார்துங் லா என்ற பகுதிக்கு பயணம் செய்தது. இந்த பகுதி முழுவதும் மலைகள், கரடுமுரடான ரோடுகள் அமைந்த பகுதிகளாகும்.

இமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்

இந்த பயணத்தை மேற்கொண்வட ஒகினவா பிரெய்ஸ் ஸ்கூட்டரில் லித்தியம் இயான் பேட்டரி பொருத்தப்பட்டிருந்தது. பயணத்தின்போது மிக அதிக குளிர் கரடு முரடனா சாலைகள் என பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளன. இவ்வளவை சமாளிக்கும் வகையில் ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இன்ஜினியரிங் மற்றும் ஹார்டுவேர் குவாலிட்டி அமைந்துள்ளது.

இமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்

இந்த ஒகினவா ஸ்கூட்டர் அதிகபட்சமாக 55-75 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இதில் பல்வேறு டிரைவிங் மோடுகள் உள்ளது. அதன் படி 170-200 கி.மீ. வரை ஒரு முழு சார்ஜில் பயணம் செய்யலாம். மேலும் இந்த பேட்டரியை நாமளே அகற்றி வேறு பேட்டரியை பொருத்தி கொள்ள முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்

இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள டெலெஸ்கோபிக் சஸ்பென்ஸன் கரடு முரடனா ரோடுகளிலும் ஸ்மூத் ரைடிங் அனுபவத்தை நமக்கு வழங்குகிறது.

இமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்

இந்த பயணம் குறித்து ஓகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கூறுகையில் : பிரெய்ஸ் தி ஹிமாலயா பயணம் மிக கடினமான ஒரு டாஸ்க் ஆக இருந்தது. அதிகமான உயரத்தை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இது வரை யாரும் எட்டியதில்லை. ஒகினவா தான் முதல் ஸ்கூட்டர். " என கூறினார்.

இமயமலை ஏறிய முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகினவா பிரெய்ஸ்

ஒகினாவை பொருத்தவரை மார்கெட்டில் உள்ள வேகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது தான். தற்போது கரடு முரடான பாதைகளில் பயணித்து லே வையும் அடைந்துள்ளது. இதன் மூலம் இந்த ஸ்கூட்டர் நல்ல பாடி பில்ட் குவாலிட்டியை பெற்றுள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற தரமான தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் எப்பொழுதும் நல்ல வரவேற்ப்பு இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் அறிமுக விபரம்!!
  2. அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்
  3. பிஎஸ்-6 மாசு உமிழ்வு கருவிகளுடன் ஹூண்டாய் ஐ30 கார்!!
  4. டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!!
  5. என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!
Most Read Articles
English summary
Okinawa Praise Becomes The First Electric Two-Wheeler To Complete A Successful Trip To Leh.Read in Tamil
Story first published: Wednesday, June 27, 2018, 13:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X