டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!!

By Saravana Rajan

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 சூப்பர் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!!

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்கின் ஸ்டான்டர்டு மற்றும் மல்டிஸ்ட்ரேடா எஸ் மாடல்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளன. இந்த நிலையில், ரேஸ் பைக் ஸ்டிக்கர் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்ஸ் பீக் எடிசன் என்ற சிறப்பு பதிப்பு மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!!

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்ஸ் பீக் எடிசன் பைக் மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஆனால், எத்தனை பைக்குகள் என்ற விபரத்தை டுகாட்டி வெளியிடவில்லை.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!!

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்ஸ் பீக் எடிசன் மாடலில் 1,262சிசி எல்-ட்வின் டிவிடி டெஸ்ட்டாஸ்ட்ரெட்டா எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 129.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த சூப்பர் பைக்கில் டெஸ்மோட்ரோமிக் வேரியபிள் டைமிங் தொழில்நுட்பத்தில்ல இயங்குவதால், குறைவான சுழல் வேகத்தில் எஞ்சின் மிகச் சிறப்பான டார்க் திறனை வெளிப்படுத்தும்.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!!

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்ஸ் பீக் பைக்கில் ஓலின்ஸ் சஸ்பென்ஷன், டெர்மிக்னோனி புகைபோக்கி அமைப்பு, கார்னரிங் ஏபிஎஸ், பை- டைரக்ஷனல் குயிக் ஷிஃப்ட் வசதிகள் உள்ளன. மேலும், கார்பன் ஃபைபர் விண்ட் ஸ்க்ரீன், முன்புற மட்கார்டு மற்றும் ஏர் இன்டேக் கவர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!!

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்ஸ் பீக் மாடலில் புதிய வடிவமைப்பிலான சேஸீ, அதிக நீளமுடைய ஸ்விங் ஆர்ம் மற்றும் முன்புறத்தில் புதிய பரிமாணம் கொண்ட உதிரிபாகங்கள் பயன்படுத்துள்ளன. ஆனால், வீல் பேஸ் ஸ்டான்டர்டு மாடலை ஒத்திருக்கிறது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!!

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1260 பைக்ஸ் பீக் எடிசனில் ரேஸ் பைக்குகள் போன்ற ஸ்டிக்கர் அலங்காரம் கொடுக்கப்பட்டுட இருப்பது மிக முக்கிய அம்சம். ஃபோர்ஜ்டு அலுமினியம் சக்கரங்கள், பேக்லிட் வசதியுடன் சுவிட்ச் கியர்ர, 4 டிரைவிங் மோடுகள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், வீலி கன்ட்ரோல் சிஸ்டம், ஹேண்ட்ஸ் ஃப்ரீ வசதியை அளிக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளன.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!!

இந்த சூப்பர் பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட், கார்னரிங் லைட்டுகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!!

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா ஸ்டான்டர்டு 1260 பைக் 232 கிலோவும், 1260 எஸ் மாடல் 235 கிலோ எடையும் கொண்டது. ஆனால், கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இந்த பைக்ஸ் பீக் எடிசன் மாடல் 229 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா1260 பைக்ஸ் பீக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்!!

டுகாட்டடி மல்டிடஸ்ட்ரேடா 1260 சூப்பர் பைக்கின் விலை உயர்ந்த மாடலாக பைக்ஸ் பீக் எடிசன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரூ.21.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்த மாதம் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Multistrada 1260 Pikes Peak Launched In India: Ducati has introduced the Multistrada 1260 Pikes Peak in the country. Ducati has already launched the standard Multistrada 1260 and the 1260 S in India. The Ducati Multistrada 1260 Pikes Peak is priced at Rs 21.42 lakh ex-showroom (India).
Story first published: Wednesday, June 27, 2018, 11:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X