அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

அமெரிக்கா - ஈரான் இடையே நடக்கும் ஆயில் அரசியலில் இந்தியா தற்போது சிக்கலில் மாட்டி கொண்டுள்ளது. ஈரானிடம் இருந்து வரும் நவம்பர் முதல் கச்சா எண்ணெய்யை வாங்க கூடாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் இ

By Balasubramanian

அமெரிக்கா - ஈரான் இடையே நடக்கும் ஆயில் அரசியலில் இந்தியா தற்போது சிக்கலில் மாட்டி கொண்டுள்ளது. ஈரானிடம் இருந்து வரும் நவம்பர் முதல் கச்சா எண்ணெய்யை வாங்க கூடாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை மேலும் உயரலாம். இது குறித்த முழு செய்திகளை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

அமெரிக்கா ஈரான் இடையேயான அனு ஒப்பந்தம் ரத்தானது. இது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. தற்போது ஈரானின் அனு ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள அமெரிக்கா, ஈரானை தனிமைப்படுத்த விரும்புகிறது.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

ஈரான் நாட்டின் பெரும் வளமே எண்ணெய் வளம் தான். அந்நாட்டில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

இந்தியாவை பொருத்தவரை ஈராக் மற்றும் சவுதியை அடுத்து 3வதாக அதிக கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடு ஈரான் தான். இந்நிலையில் அனு ஒப்பந்தம் ரத்தானது காரணமாக அமெரிக்கா ஈரான் மீது விதித்திருந்த தடை முடிவை கடுமையாக்க விரும்புகிறது.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

அதன் படி வரும் நவம்பர் 4ம் தேதிக்குள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் எல்லா நிறுவனங்களும் அதை நிறுத்தி கொள்ள வேண்டும் என தற்போது அறிவித்துள்ளுது.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

அப்படி நவம்பர் மாதத்திற்கு பின்பும் ஈரானில் இருந்து சில நிறுவனங்கள் எண்ணெய் வாங்குவதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் அமெரிக்காவில் தொடர்ந்து வரும் உறவில் பாதிப்பு ஏற்படும். இவ்வாறாக மிரட்டி ஈரானில் இருந்து ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய விட கூடாது என அமெரிக்கா முடிவு செய்துள்ளுது.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

தற்போது ஈரானில் மட்டும் ஒரு நாளைக்கு 1.3 மில்லியன் அதாவது 13 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதை இன்னும் 6 மாதத்தில் 6.3 மில்லியனாக உயர்த்த அந்நாடு முடிவு செய்தது. இதற்கிடையில் அமெரிக்கா இந்த தடை உத்தரவை போட்டிருக்கிறது.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

உலகளவில் மொத்தம் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் ஈரானின் தயாரிப்பு பெரிய எண்ணிக்கை இல்லை என்றாலும் இந்த உற்பத்தி ஒட்டு மொத்த கச்சா எண்ணெய் விலையில் 5-15 டாலர் வரை விலையை குறைக்க உதவும்.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

இந்தியாவில் தற்போது நிலவி வரும் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த இது பெரும் உதவியாக இருக்கும். மேலும் ஈரான் உடனான அனு ஒப்பந்த ரத்திற்கு ஈரான் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக அறிவித்தது தான் காரணம் எனவும் பரவலாக பேசப்படுகிறது.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

அதிக உற்பத்தியானால் விலை குறையும் என்பதை கணக்கில் கொண்டு அவர்கள் உற்பத்தியை தடுக்க அவர்கள் மீது தடை விதித்து, ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தி அரசியல் செய்கிறது அமெரிக்கா என பலர் பேசி வருகின்றனர்.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

இந்தியாவை பொருத்தவரை தற்போது 80 சதவீதமான கச்சா எண்ணெய் வெளி நாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால் ஈரானில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது நமக்கு மிகவும் தேவையான ஒன்று. சமீபத்தில் ஒப்பக் குழுமம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாக அறிவித்த இந்த அறிவிப்பு ஈரான் உற்பத்தியும் அடங்கும்.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

தற்போது அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டு அந்நாட்டின் மூலம் நமக்கு கிடைக்கும் பொருளாதாரம் பாதிக்ககூடாது என கருதி ஈரானிடமிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யாமல் இருந்தாலும் அதிலும் சிக்கல் இருக்கிறது.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

தற்போது இந்தியா - ஈரான் இடையே நல்ல உறவு இருக்கிறது. எம்ஆர்பிஎல், மற்றும் ஐஓசி ஆகிய நிறுவனங்கள் தற்போது இந்தியா - ஈரானிற்கு 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான மதிப்பிற்கு பாக்கி வைத்திருக்கிறது.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

இந்தியா அமெரிக்காவின் உத்தரவை ஏற்று ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக அறிவித்தால் ஈரான் பாக்கி உள்ள பணத்தை நெருக்கி கேட்கும். மேலும் ஈரான் இந்தியவிடம் இருந்து 45 சதவீத பணத்தை இந்திய மதிப்பிலேயே வாங்குகிறது. அதையும் நிறுத்தி அமெரிக்க டாலர் கணக்கில் அந்த பாக்கி பணத்தை எதிர்பார்க்கும்.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

தற்போது இந்தியா அமெரிக்கா பக்கமும் சாயமுடியாமல், ஈரான் பக்கமும் சாய முடியாமல் சிக்கி தவிக்கிறது. எந்த பக்கம் சாய்ந்தாலும் நஷ்டம் நமக்கு தான். இந்திய போலவே அதிகமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாட்டில் சீனாவும் ஒன்று அதுவும் தற்போது இந்த சிக்கலில் மாட்டி கொண்டது.

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மூலமாக பல்வேறு நிறுவனங்கள் பயன்பெற்று வருகின்றனர். முக்கியமாக பெட்ரோல் தயாரிக்கும் எச்பிசிஎல், பிபிசிஎல், ஐஓசி, ஓஎன்ஜிசி, ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களும்,

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

எல்லா ஆட்டோமொபைல் நிறுவனங்களும், 45 சதவீத செயல்பாட்டு செலவை கொண்டுள்ள ஏவியேஷன் நிறுனங்களான ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்களும்

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

கார்பன் பிளாக், சிந்தட்டிக் ரப்பர் என கச்சா எண்ணெய்யில் இருந்து கிடைக்கும் பொருட்களை மூல பொருட்களாக கொண்டு நடந்து வரும் டயர் நிறுவனங்களாக அப்பல்லோ, சியட், டிவிஎஸ், எம்ஆர்எப் ஆகிய நிறுவனங்களும்,

அமெரிக்கா- ஈரான் ஆயில் அரசியலால் பந்தாடப்படும் இந்தியா ; பெட்ரோல் விலை விரைவில் சதம் போடலாம்

கச்சா எண்ணெய்யை ஒரு மூல பொருளாக கொண்டுள்ள பெயிண்ட் நிறுனவனங்கள் , பிளாஸ்டிக் பிவிசி தயாரிக்கும் நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் இதனால் பெரும் பாதிப்பிற்குள்ளாக வுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கிங் யமஹா R15.. ஜிக்ஸர், கேடிஎம் எல்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா!
  2. டிரம்பின் முட்டாள் தனமான முடிவால் அமெரிக்காவை காலி செய்கிறது ஹார்லி
  3. எம்ஜி ஆர்எக்ஸ்5 எஸ்யூவி இந்தியாவில் சோதனை: ஸ்பை படங்கள்!!
  4. ரூ.1.20 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!.
  5. என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!
Most Read Articles
English summary
From November, we will sanction all companies, including Indian ones, that buy Iranian crude oil: US. Read in Tamil
Story first published: Wednesday, June 27, 2018, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X