மாருதி பிரெஸ்ஸாவை விட 2.50 லட்சம் குறைவான விலையில் பிரான்ஸ் நிறுவனத்தின் கார்! மார்க்கெட்டை மிரள விடுது!
இந்தியாவில் சப்-4 மிட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும், இந்த செக்மெண்ட்டில் தங்கள் தயாரிப்புகளை விற்பனைக்கு களமிறக்கியுள்ளன. இதில், பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனமும் ஒன்றாகும்.
ரெனால்ட் நிறுவனம் இந்த செக்மெண்ட்டில் கைகர் (Renault Kiger) காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 701 ரெனால்ட் கைகர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 433 ரெனால்ட் கைகர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 268 ரெனால்ட் கைகர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரெனால்ட் கைகர் கார் விற்பனையில் 61.89 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
இது இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். இருப்பினும் 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 17.74 செமீ இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகள் (Features) எல்லாம், ரெனால்ட் கைகர் காரில் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ரிமோட் கீலெஸ் எண்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் போன்ற வசதிகளும், ரெனால்ட் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ரெனால்ட் கைகர் காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சம் இல்லை. இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 21 பாதுகாப்பு வசதிகளை ரெனால்ட் நிறுவனம் வாரி வழங்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதில், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் பிரேக் அஸிஸ்ட் போன்ற மிகவும் முக்கியமான பாதுகாப்பு வசதிகள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ரெனால்ட் கைகர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது மிக முக்கியமான போட்டி மாடலான மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவை (Maruti Suzuki Brezza) விட மிகவும் குறைவான விலை ஆகும்.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.26 லட்ச ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதாவது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை விட ரெனால்ட் கைகர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் 2.50 லட்ச ரூபாய் குறைவு ஆகும்.
அதே நேரத்தில் ரெனால்ட் கைகர் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 10.33 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே ரெனால்ட் மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) ஆகிய கார்களுக்கு எல்லாம் ரெனால்ட் கைகர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








