டிரம்பின் முட்டாள் தனமான முடிவால் அமெரிக்காவை காலி செய்கிறது ஹார்லி

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற அடிப்படையில் வெளிநாடு பொருட்களுக்கான வரியை அதிகரித்தன் காரணமாக அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் வரியை அதிகரித்தது.

By Balasubramanian

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க பொருட்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற அடிப்படையில் வெளிநாடு பொருட்களுக்கான வரியை அதிகரித்தன் காரணமாக அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் வரியை அதிகரித்தது. இதன் காரணமாக ஹார்லிடேவிட்சன் பைக் நிறுவனம் தற்போது அமெரிக்காவின் தங்கள் உற்பத்தியை நிறுத்தி ஐரோப்பா செல்வதாக முடிவு செய்துள்ளது.

டிரம்பின் முட்டாள் தனமான முடிவால் அமெரிக்காவை காலி செய்கிறது ஹார்லி

அமெரிக்கர்களுக்கே அமெரிக்காவில் முன்னுரிமை, அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கே அமெரிக்காவில் முன்னுரிமை உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்தே அமெரிக்க அதிபர் ஆனவர் டிரம்ப்

டிரம்பின் முட்டாள் தனமான முடிவால் அமெரிக்காவை காலி செய்கிறது ஹார்லி

இவர் ஆட்சிக்கு வந்த பின்பு இந்த கொள்கையை செயல்படுத்த துவங்கினார். முதல் வெளிநாட்டினவருக்காக வழங்கப்படும் விசாவில் ஆரம்பித்து சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பு வரை பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.

டிரம்பின் முட்டாள் தனமான முடிவால் அமெரிக்காவை காலி செய்கிறது ஹார்லி

விசா பிரச்னையில் இந்தியர் தப்பினாலும், பொருட்கள் மீதான வரியில் இந்திய வர்த்தகம் சற்று பாதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யும் பொருட்களின் வரியை கூட்டி இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது நமக்கு எல்லோருக்கும் தெரியும்.

டிரம்பின் முட்டாள் தனமான முடிவால் அமெரிக்காவை காலி செய்கிறது ஹார்லி

இதே போல தான் ஐரோப்பா நாடுகளும் நடந்து கொண்டன. அதாவது. ஐரோப்ப நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விதிப்பு அதிகமாக்கியதன் காரணத்தால் ஐரோப்பாவில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்தனர்.

டிரம்பின் முட்டாள் தனமான முடிவால் அமெரிக்காவை காலி செய்கிறது ஹார்லி

இதில் முக்கியமாக ஹார்லி டேவிட்சன் பைக்கும் அடங்கும். ஹார்லி நிறுவனத்தை பொருத்தவரை பெரிய மார்கெட்டே ஐரோப்ப நாடுகள் தான் அங்கு தான் அதிகமான ஹார்லி பைக்குகள் விற்பனையாகி வருகிறது.

டிரம்பின் முட்டாள் தனமான முடிவால் அமெரிக்காவை காலி செய்கிறது ஹார்லி

தற்போது ஐரோப்பா விதித்துள்ள வரியால் ஹார்லி நிறுவனம் அந்நாட்டிற்கே மாற முடிவு செய்துள்ளது அமெரிக்க அரசிற்கு ஆண்டிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இழப்பு ஏற்படும்

டிரம்பின் முட்டாள் தனமான முடிவால் அமெரிக்காவை காலி செய்கிறது ஹார்லி

இவ்வாறு செய்வதால் அந்நிறுவனம் இறக்குமதி வரியில் இருந்து தப்பிக்கலாம் என முடிவு செய்தது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் " ஹார்லியின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.முதலில் அமெரிக்காவில் அமெரிக்க பொருட்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு அந்நிறுவனம் ஆதரவளித்தது. தற்போது பின்வாங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அந்த டுவீட்டை நீங்கள் கீழே படிக்கலாம்.

ஹார்லி நிறுவனத்தின் இந்த முடிவால் அமெரிக்க பங்கு சந்தையான வால் ஸ்டிரீட்டில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. அந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 6 சதவீதம் வரை குறைந்தன. மேலும் டோவ் ஜோன்ஸ் ஒட்டு மொத்த நிறுவனத்தின் புள்ளிகள் சுமார் 500 வரை இறங்கி முடியும் போது 300 புள்ளிகள் இறக்கத்துடன் முடிந்தது. இது அந்நிறுவனத்தினற் 1.3 சதவீத நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பின் முட்டாள் தனமான முடிவால் அமெரிக்காவை காலி செய்கிறது ஹார்லி

ஐரோப்பாவில் தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பின் படி பைக்கின் விலை போக வரியாக மட்டும் 2200 அமெரிக்க டாலரை வரியாக செலுத்த வேண்டியது வரும் இது அந்நாட்டில் பைக் விற்பனையை முழுமையாக குறைந்து விடும் இதனால் அந்நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

டிரம்பின் முட்டாள் தனமான முடிவால் அமெரிக்காவை காலி செய்கிறது ஹார்லி

தற்போது ஆண்டிற்கு 40 ஆயிரம் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் ஐரோப்பா நாடுகளில் விற்பனையாகி வருகிறது. இந்த அந்நிறுவனம் இழந்தால் மொத்த நிறுவனத்தையும் மூடிவிட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை தான் ஏற்படும்.

டிரம்பின் முட்டாள் தனமான முடிவால் அமெரிக்காவை காலி செய்கிறது ஹார்லி

தற்போது ஹார்லி டேவிட்சன் எடுத்த இந்த முடிவு ஆட்டோமொபைல் துறையில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேலும் வரும் காலங்களில் சில நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்தால் எதிர்காலத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்.

டிரம்பின் முட்டாள் தனமான முடிவால் அமெரிக்காவை காலி செய்கிறது ஹார்லி

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த முட்டாள் தனமான முடிவால் தொடர்ந்து அமெரிக்க இழப்புகளை சந்திக்கவுள்ளதாக பலர் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்தது பார்ப்போம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Donald Trump Slams Harley On Talks Of Moving U.S Production Base.Read in Tamil
Story first published: Tuesday, June 26, 2018, 18:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X