வெறும் 5 லட்சத்துக்கு எலெக்ட்ரிக் கார்! இந்தியாவை மிரள விட போகும் பிரான்ஸ் நிறுவனம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான கார்களில் (Most Affordable Cars On Sale In India) ஒன்றாகும். ஆனால் சமீப காலமாக ரெனால்ட் க்விட் காரின் விற்பனை மந்தமாக உள்ளது.

இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. ரெனால்ட் க்விட் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 375 ரெனால்ட் க்விட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Renault Kwid E-Tech Side Design

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 698 ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 323 ரெனால்ட் க்விட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 46.28 சதவீத வீழ்ச்சி ஆகும். வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டை போல், மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும், ரெனால்ட் க்விட் கடுமையான வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது.

அதாவது நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 503 ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த பிப்ரவரி மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி வெறும் 375 ரெனால்ட் க்விட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது இந்த வகையில் பார்த்தால் 128 ரெனால்ட் க்விட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Renault Kwid

இது 25.45 சதவீத வீழ்ச்சி ஆகும். ரெனால்ட் க்விட் மட்டுமல்லாது, இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான விலை குறைவான கார்களின் விற்பனை தற்போது மிகவும் மந்தமாகதான் உள்ளது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது ரெனால்ட் க்விட் மற்றும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ போன்ற ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் கார்களை பெரிதும் விரும்புவது இல்லை. அதற்கு பதிலாக எஸ்யூவி ரக கார்களைதான் அதிகம் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே ரெனால்ட் க்விட் போன்ற கார்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து கொண்டே வருகிறது.

விற்பனையில் தடுமாறினாலும் கூட, ரெனால்ட் க்விட் மிகவும் விலை குறைவானது ஆகும். ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 4.30 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் கார்களுக்கு எல்லாம், ரெனால்ட் க்விட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக மிக நீண்ட காலமாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அதன் ஆரம்ப விலை வெறும் 5 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, March 15, 2026, 12:11 [IST]
English summary
Renault kwid sales report february 2026 46 per cent down
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+