டொயோட்டாவில் முக்கால்வாசி பேர் வாங்கும் 6 கார்கள்! ஜப்பான் கார் கம்பெனிக்கு பில்லர் மாதிரி!

டொயோட்டா (Toyota), ஜப்பானை சேர்ந்த பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவிலும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் உதவியுடன் கணிசமான எண்ணிக்கையிலான கார்களை ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2026 பிப்ரவரி மாதத்திலும் இந்தியாவில் டொயோட்டா கார்களின் விற்பனை 30 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் டொயோட்டா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 30,737 ஆகும். அதுவே, 2025 பிப்ரவரி மாதத்தில் 26,414 கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் டொயோட்டா கார்களின் விற்பனை 16% அதிகரித்து இருப்பதற்கு காரணமான டாப்-6 டொயோட்டா கார் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

toyota sales february 2026

டொயோட்டா ஹைரைடர் (Hyryder): டொயோட்டா நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார் மாடலான ஹைரைடர், ஸ்ட்ராங்-ஹைப்ரிட் (Strong Hybrid) வெர்சனில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹைப்ரீட் கார்களுக்கு தொடர்ந்து அதிகரித்துவரும் வரவேற்பு தான் ஹைரைடரின் விற்பனையையும் அதிகரித்துள்ளது. 2025 பிப்ரவரியில் 4,314 ஹைரைடர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் 9,359 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா + ஹைகிராஸ் (Innova + Hycross): இந்தியாவில் இன்னோவா கார்களுக்கு எப்போதுமே வரவேற்பு உள்ளது. இதனாலேயே இன்னோவா க்ரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் என இரு விதமான இன்னோவா கார்களை டொயோட்டா விற்பனை செய்கிறது. இவை இரண்டும் சேர்த்து கடந்த பிப்ரவரி மாதத்தில் 8,703 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025 பிப்ரவரியில் இதைவிட 254 இன்னோவா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

toyota sales february 2026

டொயோட்டா க்ளான்ஸா (Toyota Glanza): இந்திய மார்க்கெட்டில் பிரபலமான பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரான மாருதி சுஸுகி பலேனோவின் ரீபேட்ஜ்டு வெர்சனாக க்ளான்ஸா டொயோட்டா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் இதன் விற்பனை வழக்கத்தை விட குறைந்துள்ளது. 2025 பிப்ரவரியில் 4,596 க்ளான்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் வெறும் 3,212 க்ளான்ஸா கார்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Fortuner): இன்னோவை விட பிரபலமான டொயோட்டா காராக அனைவரும் வாங்க துடிக்கும் ஃபார்ச்சூனரின் விலை அதற்கேற்ப கொஞ்சம் அதிகமாகவும் உள்ளது. இருப்பினும், கடந்த மாதத்தில் 3,076 ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டு இருந்த ஃபார்ச்சூனர் கார்களின் எண்ணிக்கை 2,876 யூனிட்கள் மட்டுமே ஆகும்.

Model Feb 2026 Feb 2025 YoY (%)
Hyryder 9,359 4,314 117%
Innova + Hycross 8,703 8,449 3%
Glanza 3,212 4,596 -30%
Fortuner 3,076 2,876 7%
Taisor 2,854 3,604 -21%
Rumion 2,817 2,099 34%
Hilux 321 248 29%
Camry 203 209 -3%
Vellfire 145 19 663%
LC300 47 0 0%
Total 30,737 26,414 16.3%

டொயோட்டா டைசர் (Taisor): மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிரான்க்ஸ் (Fronx) காரின் ரீபேட்ஜ்டு வெர்சன் தான், டைசர் ஆகும். 2025 பிப்ரவரி மாதத்தில் அறிமுகமான சமயத்தில் 3,604 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த டைசரின் விற்பனை எண்ணிக்கை கடந்த மாதத்தில் 2,854 யூனிட்களாக குறைந்துள்ளது.

டொயோட்டா ரூமியன் (Rumion): மாருதி சுஸுகி பலேனோவை போன்று மாருதி சுஸுகி எர்டிகா காரின் ரீபேட்ஜ்டு வெர்சனாக விளங்கும் ரூமியன் கடந்த பிப்ரவரி மாதத்தில் 2,817 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான ரூமியன் கார்கள் தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், 2025 பிப்ரவரியில் 2,099 ரூமியன் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டாவில் இருந்து தற்போதைக்கு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் முதல் 6 கார்கள் இவை ஆகும். அதாவது, இவற்றின் விற்பனை தான் பெரிய அளவில் டொயோட்டாவுக்கு பங்களிக்கிறது. இவை இல்லாமல், ஹிலுக்ஸ் (Hilux), வெல்ஃபையர் (Vellfire), எல்சி300 (LC300) கார் மாடல்களும் டொயோட்டா பிராண்டில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, March 13, 2026, 5:00 [IST]
English summary
Top 6 most sold toyota cars in february 2026 in india hyryder innova top on list
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+