ஒரு காலத்தில் அம்பாஸிடர் மாதிரி பிரபலமா இருந்த கார்! பல வருடங்களுக்கு பிறகு நாளை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) கார், நாளை (மார்ச் 17) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் வருகை, இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) செக்மெண்ட்டில் போட்டியை மிக கடுமையானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வசதிகள் (Features): புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பிஎம் 2.5 ஃபில்டர், சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகள் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதி உடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகளும், முன் பகுதியில் அட்ஜெஸ்ட் செய்ய கூடிய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பின் பகுதியில் 60:40 ஸ்பிளிட் இருக்கைகள் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு வசதிகள் (Safety Features): லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், முன் மற்றும் பின் பகுதிகளில் பார்க்கிங் சென்சார்கள், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் கொண்டுள்ளது.

இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options): புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும்.
முன்பதிவுகள் (Bookings): புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், ரெனால்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலமாகவோ அல்லது ரெனால்ட் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அதிகாரப்பூர்வமான விலை நாளைதான் அறிவிக்கப்படவுள்ளது.
மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), டாடா சியரா (Tata Sierra) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களுக்கு எல்லாம், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் வருகையால், விற்பனையில் நெருக்கடிகள் ஏற்படலாம்.
ஏனெனில் இது இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்றாகும். ஆனால் கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டது. இருப்பினும் இந்திய சந்தையில் ரெனால்ட் டஸ்டர் காருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர்களை எல்லாம் மனதில் வைத்துதான், ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரை மேம்படுத்தி, அதன் புதிய தலைமுறை மாடலாக இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.


Click it and Unblock the Notifications








