மாருதி வேகன் ஆரை விட குறைவான விலையில் 7 சீட்டர் கார்! மொத்த இந்தியாவையும் மிரள விட்ட வெளிநாட்டு நிறுவனம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி ரக கார்களில் (7 Seater MPV Cars) ஒன்றாகும். இதன் காரணமாக இந்திய சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் ரெனால்ட் ட்ரைபர் கார், சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. ரெனால்ட் ட்ரைபர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெனால்ட் நிறுவனம் வெறும் 1,545 ட்ரைபர் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

Renault Triber

ஆனால் இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,419 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இம்முறை 874 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 56.57 சதவீத வளர்ச்சி ஆகும். இது மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.

ரெனால்ட் ட்ரைபர் காரின் இந்த வளர்ச்சிக்கு, அது மிகவும் விலை குறைவானது என்பது மட்டும் காரணம் அல்ல. அதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல், கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Renault Triber

ரெனால்ட் ட்ரைபர் கார் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 17.78 செமீ டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் கூல்டு க்ளவ் பாக்ஸ் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

அத்துடன் இந்த காரில், 21 பாதுகாப்பு வசதிகள் (Safety Features) ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. அதாவது இந்த 21 பாதுகாப்பு வசதிகளும், ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படும். இதில், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

ஆனால் ரெனால்ட் ட்ரைபர் கார், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், மிகவும் விலை குறைவானது ஆகும். ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது 5 சீட்டர் காரான மாருதி சுஸுகி வேகன் ஆரின் மிட் வேரியண்ட்டான ZXi மேனுவல் வேரியண்ட்டை விட 20 ஆயிரம் ரூபாய் குறைவு ஆகும்.

மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ZXi மேனுவல் வேரியண்ட் 5.96 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ரெனால்ட் ட்ரைபர் காரின் டாப் வேரியண்ட்டும் கூட வெறும் 8.60 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது 7 சீட்டர் காரான மாருதி சுஸுகி எர்டிகாவின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான LXi மேனுவல் வேரியண்ட்டை விட 20 ஆயிரம் ஆயிரம் ரூபாய் குறைவு ஆகும்.

அதாவது மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை LXi மேனுவல் வேரியண்ட் 8.80 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே ரெனால்ட் மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, ரெனால்ட் ட்ரைபர் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமாக ஜப்பானை நாட்டை சேர்ந்த நிஸான் (Nissan) நிறுவனம் இருந்து வருகிறது.

இந்த கூட்டணியின் மூலம், ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில், வெகு சமீபத்தில் நிஸான் க்ராவைட் (Nissan Gravite) என்ற புத்தம் புதிய 7 சீட்டர் எம்பிவி காரை, நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.

Article Corrections

ரெனால்ட் நிறுவனம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தது என்பது, செய்தியின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 14, 2026, 18:59 [IST]
English summary
Renault triber sales report february 2026 57 per cent growth
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+