10 லட்ச ரூபாய்க்குள் கிடைப்பதுதான் இந்த கார்களின் பிளஸ் பாயிண்ட்! பிப்ரவரியில் அதிக பேர் வாங்கியவை!

இந்தியாவில் எப்போதுமே விலை குறைவான கார்களுக்கே நல்ல வரவேற்பு உள்ளது. ஏனெனில், நம் நாட்டில் நிறைய பேர் பட்ஜெட் போட்டு கார் வாங்குபவர்களே ஆவர். இதனாலேயே ரூ.10 லட்சத்திற்குள் விற்கப்படும் கார்களுக்கு இந்தியாவில் மார்க்கெட் நன்கு பெரியதாக உள்ளது. அவ்வாறு ரூ.10 லட்சத்திற்குள் குறைந்த விலையில் கிடைக்கும் கார்களுள் கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): பழங்கால அம்பாசடர் காரின் வழித்தோன்றலாக கருதப்படும் டிசையர் இந்தியாவில் மிக பிரபலமான மாருதி கார்களுள் ஒன்றாக உள்ளது. கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் மட்டும் இது 19 ஆயிரத்து 326 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.6.25 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

affordable under 10 lakh rupee cars february 2026 sales

டாடா பன்ச் (Tata Punch): அளவில் சிறியதான மற்றும் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற பாதுகாப்பான காராக விளங்கும் பன்ச் கடந்த மாதத்தில் 18,748 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.6.20 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து விற்பனை செய்யப்படும் பன்ச் ஆனது பன்ச் இவி என எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR): வெறும் ரூ.5.78 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கும் இது உயரமான மாருதி ஹேட்ச்பேக் காராக விளங்குகிறது. உயரமான கார் என்பதினாலேயே உட்புறத்தில் அதிக இடவசதியை வழங்கும் வேகன்ஆர் கடந்த பிப்ரவரி மாதத்தில் 14,885 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

affordable under 10 lakh rupee cars february 2026 sales

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): மேலே கண்ட டிசையர் செடான் காரின் ஹேட்ச்பேக் வெர்சனான இதுவும் இந்திய மார்க்கெட்டில் மிக பிரபலமான கார்களுள் ஒன்றாக உள்ளது. டிசையரை விட குறைவாக ரூ.5.99 லட்சத்தில் இருந்து கிடைக்கும் ஸ்விஃப்ட், கடந்த பிப்ரவரி மாதத்தில் 14,833 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது, வேகன்ஆரை விட வெறும் 52 யூனிட்கள் மட்டுமே குறைவு.

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): மார்க்கெட்டில் பிரபலமான பலேனோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஃபிரான்க்ஸ் ரூ.6.85 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் போதிலும் மற்ற மாருதி கார்களுடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் சுமாரான விற்பனையையே பதிவு செய்து வருகிறது. இருப்பினும், கடந்த பிப்ரவரி மாதத்தில் 13,898 ஃபிரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Model Units Sold (Feb '26) Starting Price (Ex-Showroom)
Maruti Suzuki Dzire 19,326 ₹6.25 Lakh
Tata Punch 18,748 ₹6.20 Lakh
Maruti Suzuki Wagon R 14,885 ₹5.55 Lakh
Maruti Suzuki Swift 14,833 ₹5.78 Lakh
Maruti Suzuki Baleno 14,632 ₹5.99 Lakh
Maruti Suzuki Fronx 13,898 ₹6.85 Lakh
Maruti Suzuki Eeco 11,620 ₹5.21 Lakh
Hyundai Venue 10,494 ₹8.00 Lakh

மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco): மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேன் மாடலான இது பயணிகளை அழைத்து செல்வதற்கு மட்டுமின்றி, சுமைகளை கொண்டு செல்ல கமர்ஷியல் பயன்பாட்டிற்காகவும் கிடைக்கிறது. ரூ.5.21 லட்சத்தில் இருந்து கிடைக்கும் ஈக்கோ கடந்த மாதத்தில் 11,620 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): ஹூண்டாய் நிறுவனத்தின் சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார் மாடலான வென்யூவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8 லட்சத்தில் இருந்து உள்ளன. கடந்த மாதத்தில் 10,494 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள வென்யூவின் சில ஆரம்ப நிலை வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் பெரும்பாலானவை மாருதி சுஸுகி காராக இருப்பதை கவனிக்கலாம். ரூ.10 லட்சத்திற்குள் அதிக கார் மாடல்களை விற்பனை செய்வதினால்தான் மாருதி சுஸுகி ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்கிறது. இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள அனைத்து கார்களும் சிறந்தவை என்பதால், இவற்றுள் சிறந்த ஒன்றை தேர்வு செய்வது சற்று சிரமம்தான். இதில் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 15, 2026, 9:04 [IST]
English summary
Affordable under 10 lakh rupee cars that sold most in february 2026 maruti suzuki dzire on top
மேலும்... #car sales #cheap cars #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+