என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

மும்பையில் அவசரத்தில் தவித்து கொண்டிருந்தவர்களுக்கு லிப்ட் கொடுத்து உதவிய நபர் மீது நடவடிக்கை எடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

By Arun

மும்பையில் அவசரத்தில் தவித்து கொண்டிருந்தவர்களுக்கு லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதர் மீது நடவடிக்கை எடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தி காரணமாக, உயரதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

மும்பை ஏர்ரோலி சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் நிதின் நாயர். கடந்த 18ம் தேதியன்று, காரில் அலுவலகம் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. பஸ்கள் அனைத்தும் கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்தன.

என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

இதனால் ஒரு முதியவர் உள்பட மூன்று பேர், அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டும் என்பதற்காக சாலையோரத்தில் நின்று லிப்ட் கேட்டு கொண்டிருந்தனர். அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்ட நிதின் நாயர் மூவரையும் தனது காரில் ஏற்றிக்கொண்டார்.

என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

ஆனால் செல்லும் வழியில், போலீஸ் கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் என்பவர் காரை நிறுத்தி விசாரணை நடத்தினார். தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுப்பது சட்ட விரோதம் எனக்கூறி, நிதின் நாயரின் லைசென்ஸை, கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் பறிமுதல் செய்து விட்டார்.

என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

இதனால் நிதின் நாயர் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார். எனினும் வேறு வழி இல்லாமல், கோர்ட்டிற்கு சென்று 1,500 ரூபாய் அபராதம் செலுத்திய பின்புதான், நிதின் நாயர் தனது லைசென்ஸை மீண்டும் பெற்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் செக்ஸன் 66ன் படி, எந்த ஒரு நபரும் தனியார் வாகனத்தை, பயணிகள் வாகனமாகவோ அல்லது சரக்கு வாகனமாகவோ பயன்படுத்த கூடாது. இந்த சட்டத்தின்படிதான் நிதின் நாயர், கோர்ட்டிற்கு இழுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

வரி கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, சிலர் T-பெர்மிட் பெறாத தங்கள் சொந்த வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் சட்ட விரோதமாக அவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர். இதை தவிர்ப்பதற்காகதான் இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

ஆனால் லிப்ட் கேட்ட மூவரிடமும் நிதின் நாயர் பணம் வாங்கவில்லை. அவர்கள் அவசரத்தில் தவித்து கொண்டிருந்ததால், உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நிதின் நாயர் லிப்ட் கொடுத்தார். எனினும் கெடுபிடியாக அவரை தண்டித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

நடந்த சம்பவங்களை எல்லாம் நிதின் நாயர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அந்த போஸ்ட்டில், ''நமது சக மக்களுக்கு நாம் உதவி செய்வதை, நம் நாடு விரும்புவது இல்லை'' என அவர் கிண்டலாக குறிப்பிட்டிருந்தார். இந்த போஸ்ட் பேஸ்புக்கில் வைரலாக பரவியது.

என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

நிதின் நாயர் மீது நடவடிக்கை எடுத்த கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல், வாசி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருகிறார். அவரின் இத்தகைய நடவடிக்கையால், சாலையில் இனி யாராவது உயிருக்கு போராடினால் கூட யாரும் உதவ முன்வர மாட்டார்கள் என்ற பேச்சு பரவலாக எழுந்தது.

என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

ஒரு நல்ல மனிதர் மீது நடவடிக்கை எடுத்ததால், கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் மீது போலீஸ் உயரதிகாரிகள் கூட அதிருப்தி அடைந்தனர். இதன் காரணமாக கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் தற்போது அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாதாரண நிர்வாக பிரிவுக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டு விட்டார்.

என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

அதுமட்டுமல்லாமல் நிதின் நாயர் மீது கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் நடவடிக்கை எடுத்ததற்கு வேறு ஏதேனும் மறைமுக காரணங்கள் உள்ளதா? என்பது குறித்த விரிவான விசாரணையை உடனடியாக தொடங்கும்படி, வாசி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!

எனினும் வெறுமனே பணியிட மாற்றத்துடன் நிறுத்தி கொள்ளாமல், கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் மீது இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai police constable who fined the Samaritan has been transferred to the administration section. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X