வேட்டியை வரிந்து கட்டிய ஜப்பான் இன்ஜினியர்கள்! மாருதி சோலி முடின்ச்! ரோட்ல மர்மமா சுத்தீட்டு இருக்க கார் அதுவா

இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களும், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் நுழைந்து விட்டன. ஆனால் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா (Honda) நிறுவனம் மட்டும், இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை.

ஆனால் இந்திய சந்தைக்கான ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார், கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அது ஹோண்டா ஜீரோ ஆல்பா எலெக்ட்ரிக் கார் (Honda 0 Alpha EV) ஆகும். இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது.

Honda 0 Alpha EV

இந்திய சாலைகளில் ஹோண்டா ஜீரோ ஆல்பா எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் தற்போது தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் தபுகெரா (Tapukara) பகுதியில் அமைந்துள்ள ஹோண்டா நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து, ஹோண்டா ஜீரோ ஆல்பா எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் ஜீரோ ஆல்பா எலெக்ட்ரிக் காரை, உருமறைப்பு செய்து, இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் சோதனை செய்யவுள்ளது. அத்துடன் மழை, வெயில் மற்றும் குளிர் என பல்வேறு சீதோஷண நிலைகளிலும், ஹோண்டா ஜீரோ ஆல்பா எலெக்ட்ரிக் கார் சோதனை செய்து பார்க்கப்படும். இறுதியாக அடுத்த ஆண்டு (2027), ஹோண்டா ஜீரோ ஆல்பா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது.

Honda 0 Alpha EV Testing Commenced In India

ஹோண்டா நிறுவனம் ஜீரோ ஆல்பா எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனை அறிமுகம் செய்வதுடன் நிற்க போவதில்லை. கூடவே பல்வேறு வெளிநாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கான சந்தைகளுக்கும் தேவையான ஹோண்டா ஜீரோ ஆல்பா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தபுகெரா தொழிற்சாலையில்தான் ஹோண்டா ஜீரோ ஆல்பா எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்படும். அங்கு எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு என தனியாக புதிய 'பிளாண்ட்' ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்காக ஹோண்டா நிறுவனம் 1,200 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹோண்டா ஜீரோ ஆல்பா எலெக்ட்ரிக் காரில், 65 kWh மற்றும் 75 kWh என 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் அதிகபட்ச டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) சுமார் 500 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா ஜீரோ ஆல்பா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக 18-20 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் வருகை, இந்திய சந்தையில், மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara), மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6), ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric), டாடா கர்வ் இவி (Tata Curvv EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 18, 2026, 12:57 [IST]
English summary
Honda 0 alpha ev testing commenced in india viral video check all details here
மேலும்... #honda #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+