மிடில்-கிளாஸ் மக்களுக்கு ஏற்ற சைஸில் ஹூண்டாயின் புதிய எலெக்ட்ரிக் கார்! விலை 10 லட்சத்திற்கு மேல் இருக்காது!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்திய சந்தைக்கேற்ற அளவில் சிறியதான புதிய மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) கார் ஒன்றை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. மேலும், இந்த மைக்ரோ எஸ்யூவி காரை எலெக்ட்ரிக் வெர்சனிலும் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இப்படியொரு எலெக்ட்ரிக் காரை ஹூண்டாய் அறிமுகம் செய்ய உள்ளதே தற்போதுதான் உறுதியாகி உள்ளது.

இதனை உறுதிச்செய்யும் வகையில், இந்த புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் பொது வெளியில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்ட போது அடையாளம் காணப்பட்டுள்ளது. 'கார்எக்ஸ்பிளைன்' (Carxplain) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம், வாங்க.

new hyundai electric micro-suv spotted

இந்தியாவில் அளவில் சிறியதான கார்களுக்கே எப்போதும் நல்ல மார்க்கெட் உள்ளது என்பதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், பல நாட்களாக பட்ஜெட் போட்டு எப்படியாவது ஒரு காரை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் நம்மில் பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது. இதனாலேயே, மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai) போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் அளவில் சிறியதான, பட்ஜெட் விலையிலான கார் மாடல்களை விற்பனை செய்கின்றன.

இந்த வகையில், ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே எக்ஸ்டர் (Exter) என்கிற மைக்ரோ எஸ்யூவி கார் மாடல் விற்பனை செய்யப்படும் நிலையில், புதியதாக மேலும் ஒரு மைக்ரோ எஸ்யூவி காரை ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் களமிறக்குகிறது. இந்த புதிய ஹூண்டாய் கார் ஏற்கனவே மும்பையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டு இருந்தது.

new hyundai electric micro-suv spotted

இந்த நிலையில், இந்த புதிய ஹூண்டாய் காரின் எலெக்ட்ரிக் வெர்சனும் தற்போது கோவாவில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அதாவது, இந்த மைக்ரோ-எஸ்யூவி காரை பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி உடனும் ஹூண்டாய் அறிமுகம் செய்கிறது. இந்த புதிய ஹூண்டாய் கார் இந்த 2026ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், இதன் எலெக்ட்ரிக் வெர்சனின் அறிமுகம் எப்படியிருந்தாலும் 2027ஆம் ஆண்டில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டத்தில் கார் முழுவதுமாக மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காரின் பெட்டகம் வடிவிலான தோற்றத்தை பார்க்க முடிகிறது. மேலும், காரின் அலாய் சக்கரங்களின் டிசைனையும் காண முடிகிறது. அறிமுகம் செய்யப்படும்போது இதே டிசைனிலான அலாய் சக்கரங்கள் தான் இந்த காரில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஏனெனில், இதே டிசைனிலான அலாய் சக்கரங்கள் ஹூண்டாயின் எலெக்ட்ரிக் கார்கள் உள்பட மற்ற சில கார்களிலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி காரின் பின்பகுதி நன்கு பருத்த வடிவில் உள்ளதால், இந்த காரின் கேபினுள் அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம். அதேபோல், பொருட்களை வைத்து எடுத்துச் செல்லவும் அதிக இடவசதி இருக்கும்.

ஹூண்டாயின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் முழுவதுமாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்காக புதிய பிளாட்ஃபாரத்தை ஹூண்டாய் உருவாக்கும் என கூறப்படுகிறது. ஆனால், அந்த பிளாட்ஃபாரம் என்ன மாதிரியான பிளாட்ஃபாரம் ஆக இருக்கும் என்பது இன்னும் தெரியவரவில்லை. உட்புறத்தில் டாஷ்போர்டில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்டிற்கு என இரட்டை திரை செட்-அப் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

இவை மற்ற மாடர்ன் கார்களில் இருப்பதை போன்று வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை ஏற்கக்கூடியதாக இருக்கும். ஹூண்டாய் வென்யூ (Venue), வெர்னா (Verna) கார்களில் உள்ளதை போன்று புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரமும், அந்த ஸ்டீயரிங் சக்கரத்தில் ஹூண்டாய் லோகோவிற்கு பதிலாக நான்கு புள்ளிகளும் இடம்பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி கார் தொடர்ச்சியாக சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு இருப்பதில் இருந்து ஹூண்டாய் நிறுவனத்தின் முழு கவனமும் இந்த கார் மீதுதான் உள்ளது என்பதை அறிய முடிகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், ஹூண்டாயின் இந்த புதிய மைக்ரோ-எஸ்யூவி எலெக்ட்ரிக் கார் இந்திய மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 16, 2026, 17:21 [IST]
English summary
New hyundai micro suv electric car spotted in goa check all details here
மேலும்... #hyundai #suv car #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+