5 சீட்டர் கார் விலையில் 7 சீட்டர் கார்! இந்தியாவை மிரள விட்ட ஜப்பான் நிறுவனம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த நிஸான் மேக்னைட் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,230 நிஸான் மேக்னைட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,328 நிஸான் மேக்னைட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 98 நிஸான் மேக்னைட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 4.21 சதவீத வீழ்ச்சி ஆகும்.

வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, நிஸான் மேக்னைட் கார் விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளது. அதாவது நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,502 நிஸான் மேக்னைட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதன் பின் வந்த பிப்ரவரி மாதம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 2,230 நிஸான் மேக்னைட் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதாவது இம்முறை 272 நிஸான் மேக்னைட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 10.87 சதவீத வீழ்ச்சி ஆகும். இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக நிஸான் மேக்னைட் உள்ளது. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் வெறும் 5.62 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இது நிஸான் மேக்னைட் காரின் மிக முக்கியமான போட்டி மாடல்களான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகிய கார்களை விட குறைவான விலை ஆகும். இருப்பினும் நிஸான் மேக்னைட் கார் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஆனால் இது சிறிய அளவிலான வீழ்ச்சிதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே வரும் மாதங்களில் நிஸான் மேக்னைட் காரின் விற்பனை, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என உறுதியாக நம்பலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நிஸான் நிறுவனத்தை தூக்கி நிறுத்தி கொண்டுள்ள கார் மேக்னைட் மட்டுமே. ஆனால் அதற்கு பக்கபலமாக தற்போது நிஸான் க்ராவைட் (Nissan Gravite) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது 7 சீட்டர் கார் ஆகும். இருப்பினும் இதன் ஆரம்ப விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 5 சீட்டர் காரான மேக்னைட் காரின் விலையிலேயே 7 சீட்டர் காரான க்ராவைட்டும் களமிறக்கப்பட்டுள்ளது. எனவே வரும் மாதங்களில் நிஸான் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதில், மேக்னைட் காருக்கு, க்ராவைட் மிகவும் பக்கபலமாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் க்ராவைட் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய 2 கார்களும் ஒருங்கிணைந்து வரும் மாதங்களில் இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நம்புகிறது. இதுதவிர நிஸான் டெக்டான் (Nissan Tekton) காரும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
இது நாளை (மார்ச் 17) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-Gen Renault Duster) காரின், நிஸான் வெர்ஷன் ஆகும். அதாவது புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் அடிப்படையில்தான் நிஸான் டெக்டான் கார் உருவாக்கப்படவுள்ளது. ஜப்பானை சேர்ந்த நிஸான் மற்றும் பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் ஆகிய 2 நிறுவனங்களும் நீண்ட காலமாகவே கூட்டணியில் இருந்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








