35 கிமீ மைலேஜ்! அடிமாட்டு விலையில் கிடைக்கும் சிஎன்ஜி கார்களின் பட்டியல்! பைக்குக்கு பதிலா இதை வாங்கலாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்கும்போது, விலை (Price) மற்றும் மைலேஜ் (Mileage) ஆகிய 2 விஷயங்களுக்குதான் முக்கியத்துவம் வழங்குவார்கள். இதில், நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. இந்தியாவில் கிடைக்க கூடிய விலை குறைவான, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய மாருதி சுஸுகி நிறுவனத்தின் 3 சிஎன்ஜி கார்கள் (Cheapest Maruti Suzuki CNG Cars) குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso): மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரில் 2 சிஎன்ஜி வேரியண்ட்கள் (Variants) வழங்கப்படுகின்றன. அவை LXi (O) CNG மற்றும் VXi (O) CNG ஆகியவை ஆகும். இவற்றின் விலை முறையே 4.62 லட்ச ரூபாய் மற்றும் 5.12 லட்ச ரூபாயாக உள்ளது.

Maruti Suzuki S-Presso

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்களில் 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படுகிறது. இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மாருதி சுஸுகி ஆல்டோ கே 10 (Maruti Suzuki Alto K10): மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை போலவே, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரிலும் 2 சிஎன்ஜி வேரியண்ட்கள்தான் வழங்கப்படுகின்றன. அவையும் LXi (O) CNG மற்றும் VXi (O) CNG ஆகியவைதான். ஆனால் விலையில் வித்தியாசம் உண்டு.

Maruti Suzuki Alto K10 Interior

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் விலை முறையே 4.82 லட்ச ரூபாய் மற்றும் 5.32 லட்ச ரூபாயாக உள்ளது. அதாவது மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்களை விட, மாருதி சுஸுகி ஆல்டோ கே 10 காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் விலை தலா 20 ஆயிரம் ரூபாய் அதிகம்.

மாருதி சுஸுகி ஆல்டோ கே 10 காரின் சிஎன்ஜி வேரியண்ட்களிலும் 1.0 லிட்டர் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்படுகிறது. இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 33.40 கிலோ மீட்டர் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Celerio

மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio): மாருதி சுஸுகி செலிரியோ காரில் ஒரே ஒரு சிஎன்ஜி வேரியண்ட் மட்டும் வழங்கப்படுகிறது. அது VXi வேரியண்ட் ஆகும். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 ஆகிய கார்களை போலவே, மாருதி சுஸுகி செலிரியோ சிஎன்ஜி வேரியண்ட்டிலும், 1.0 லிட்டர் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்படுகிறது.

இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 34.43 கிலோ மீட்டர் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் விலை 5.98 லட்ச ரூபாயாக உள்ளது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மற்றும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள 3 கார்களும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு சில பிரீமியம் பைக்குகளை விட விலை குறைவானவை ஆகும். எனவே மிகவும் குறைவான விலையில், அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, இவை எல்லாம் மிகவும் சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Saturday, March 14, 2026, 13:18 [IST]
English summary
Cheapest maruti suzuki cng cars s presso alto k10 celerio price mileage
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X