20 லட்ச ரூபாய் தான் உங்க பட்ஜெட்ன்னா... இந்த மூன்றில் ஒரு 7-சீட்டர் காரை வாங்குவது நல்ல முடிவு!

இந்தியாவில் சமீப காலமாக 7 இருக்கைகள் உடன் அளவில் பெரியதான கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கார் வாங்குவது என முடிவெடுத்த பின் நன்கு பெரிய காரை வாங்கலாம் என்பதுதான் பலரது யோசனையாக உள்ளது. ஏனெனில், 7-சீட்டர் காரில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது மட்டுமின்றி, தேவையென்றால் சுமைகளையும் அதிகமாக கொண்டு செல்லலாம்.

அதேநேரம் மறுப்பக்கம், எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் மெல்ல மெல்ல விரிவடைந்து வருகிறது. 7-சீட்டர் காரை எலெக்ட்ரிக்கில் வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்ப குறைந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் 7-சீட்டர் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

cheapest 7 seater electric cars

கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி (Kia Carens Clavis EV): 3 வரிசைகளில் இருக்கைகளை கொண்ட லேட்டஸ்ட் கியா எலெக்ட்ரிக் கார் இதுவாகும். மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் அடங்கிய கொரியன் காரான இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.17.99 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

7-சீட்டர் எலெக்ட்ரிக் காரை ரூ.20 லட்சத்திற்குள் வாங்க விரும்புபவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். 42kWh மற்றும் 51.4kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரில் பனோராமிக் சன்ரூஃப், லெவல்-2 அடாஸ் மற்றும் வெண்டிலேட்டட் இருக்கைகள் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

cheapest 7 seater electric cars

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9s): இந்தியன் ஸ்டைலில் 7-சீட்டர் எலெக்ட்ரிக் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏற்றது. ரூ.19.95 லட்சத்தில் இருந்து துவங்கும் இந்த எலெக்ட்ரிக் காரின் முரட்டுத்தனமாக ஸ்டாண்டிங் பொசிஷன் (Standing Position) மார்க்கெட்டில் விரைவாகவே வெகு கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் கடந்த 2024ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில்தான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

மஹிந்திராவின் லேட்டஸ்ட் இன்ங்லோ (INGLO) பிளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த எலெக்ட்ரிக் காரில் 12.3 இன்ச்சில் டாஷ்போர்டு ஸ்க்ரீன் மற்றும் 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படும் நிலையில், இந்த எலெக்ட்ரிக் கார் 59kWh மற்றும் 79kWh பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

cheapest 7 seater electric cars

பிஒய்டி இமேக்ஸ் 7 (BYD eMAX 7): கொரியன் ஸ்டைல் மற்றும் இந்தியன் ஸ்டைல் எலெக்ட்ரிக் கார்களை பார்த்துவிட்டோம். இது சீன ஸ்டைல் எலெக்ட்ரிக் கார் ஆகும். சீனாவில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு நம் தமிழ்நாட்டில் வைத்துதான் இது முழு காராக உருவாக்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.26.90 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

சீனாவின் உலக தரத்திலான தொழிற்நுட்ப வசதிகள் உடன் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் காரான இது, முன்னதாக விற்பனையில் இருந்த இ6 எலெக்ட்ரிக் காரின் அப்கிரேட் வெர்சன் ஆகும். 6 மற்றும் 7-சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும் இமேக்ஸ் 7 காரின் ரேஞ்ச் (பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் காரை இயக்கிச் செல்லக்கூடிய தொலைவு) மேலே கூறப்பட்ட இரு கார்களுக்கு இடையே போதுமானதாக உள்ளது.

Model Ex-Showroom Price (Approx.) Claimed Range (ARAI/NEDC)
கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி ₹17.99 - ₹24.49 Lakh 404 - 490 km
மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் ₹19.95 - ₹30.20 Lakh 521 - 679 km
பிஒய்டி இமேக்ஸ் 7 ₹26.90 - ₹29.90 Lakh 420 - 530 km

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள எலெக்ட்ரிக் கார்கள் மூன்றும் மார்க்கெட்டில் கடந்த சில வருடங்களில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் கார்கள் ஆகும். இதில் எங்களது சாய்ஸ் எதுவென்று கேட்டால், நிச்சயமாக மஹிந்திரா எக்ஸ்இவி 9இ தான். மிகவும் குறைவாகவும் இல்லாமல், அதிகமாகவும் இல்லாமல் இடைப்பட்ட விலையில் அதிக ரேஞ்சை வழங்கக்கூடிய எலெக்ட்ரிக் காராக இது உள்ளது. பெரும்பாலான மக்களின் சாய்ஸும் இதுதான் என்பது ஒவ்வொரு மாத விற்பனை எண்ணிக்கைகளிலும் தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 14, 2026, 14:26 [IST]
English summary
Cheapest 7 seater electric cars in india kia carens clavis ev and mahindra xev 9s and byd emax7
மேலும்... #electric car #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X