சீன எலெக்ட்ரிக் கார் வாங்கினால் சார்ஜர் இலவசம்! எல்லாருக்கும் இல்ல, முதல் 1,100 பேருக்கு மட்டுமே!

பிஒய்டி இந்தியா (BYD India) நிறுவனம் இந்தியாவில் சீலயன் 7 (Sealion 7) எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து 1 வருடமாகி விட்டது. இதனை கொண்டாடும் விதமாக முதலாம் ஆண்டு சிறப்பு ஆண்டுநிறைவு எடிஷன் (Anniversary Edition)-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.70,000 முன்தொகை உடன் முன்பதிவு (Booking) துவங்கப்பட்டுள்ள இந்த புதிய பிஒய்டி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் நிறுவனமான பிஒய்டி இந்தியாவிலும் அதன் சந்தையை விரிவுப்படுத்தி கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த காலக்கட்டத்தில் பல புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ள இந்த நிறுவனம், அவ்வாறு கடந்த 2025ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் சீலயன் 7 என்கிற சொகுசு எலெக்ட்ரிக் செடான் காரை அறிமுகப்படுத்தியது.

byd sealion 7 anniversary edition launch

இந்த வகையில் பார்த்தால், சீலயன் 7 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டு 1 வருடங்கள் ஆனதை தொடர்ந்து, அதன் ஆனிவர்சரி எடிஷனை பிஒய்டி தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. வழக்கமான பிஒய்டி சீலயன் 7 காருக்கும், புதிய ஆனிவர்சரி எடிஷனுக்கும் பவர்டிரெயினில் எந்த வித்தியாசமும் இல்லை; மாறாக ஆனிவர்சரி எடிஷனில் தோற்றத்தில் காஸ்மெட்டிக் அப்டேட்கள் (Cosmetic Updates) கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன் முக்கியமாக, புதிய சீலயன் 7 ஆனிவர்சரி எடிஷனில் சில பிரத்யேகமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வீட்டிலேயே பயன்படுத்தக்கூடிய 11 கிலோவாட்ஸ் சார்ஜர், 2 வருடத்திற்கான சர்வீஸ் மற்றும் 8 வருடத்திற்கான உத்தரவாதம் (Warranty) உள்ளிட்டவற்றை இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் காரை வாங்குபவர்கள் பெறலாம்.

byd sealion 7 anniversary edition launch

இந்த சலுகைகளை அனைவராலும் பெற முடியாது; சீலயன் 7 ஆனிவர்சரி எடிஷனை பெறும் முதல் 1,100 வாடிக்கையாளர்கள் மட்டுமே பெற முடியும். அவர்களும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் காரை முன்பதிவு செய்ய வேண்டும். விலையை பொறுத்தவரையில், வழக்கமான சீலயன் 7 கார் வேரியண்ட்களுக்கும், புதிய ஆனிவர்சரி எடிஷனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

பிஒய்டி சீலயன் 7 எலெக்ட்ரிக் கார் ஆனது பிரீமியம் (Premium) மற்றும் பெர்ஃபார்மன்ஸ் (Performance) என்கிற இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரும் விலைகள் (Ex-Showroom Prices) முறையே ரூ.49.40 லட்சம் மற்றும் ரூ.54.90 லட்சமாக உள்ளன. இதே விலைகளில் தான் புதிய சீலயன் 7 ஆனிவர்சரி எடிஷனும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெயருக்கேற்ப, இதில் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் ஆனது செயல்திறன்மிக்கதாக கிடைக்கும். புதிய ஆனிவர்சரி எடிஷன் புதிய தஹிடி நீலம் (Tahiti Blue) நிற கேபின் உடன் கிடைக்கும். இந்த நிறத்தால், சீலயன் 7 காரின் வழக்கமான கேபினை காட்டிலும் புதிய ஆனிவர்சரி எடிஷனின் கேபின் பிரீமியம் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

செயல்படுதிறனை பொறுத்தவரையில், சீலயன் 7 எலெக்ட்ரிக் காரில் 82.56kWh திறன் கொண்ட பிளேட் பேட்டரி பொருத்தப்படுகிறது. செல்-டூ-பாடி கட்டமைப்பில் இண்டெலிஜென்ட் டார்க் அடாப்ஷன் கண்ட்ரோல் (iTAC) தொழிற்நுட்பத்துடன் காரில் பொருத்தப்படும் இந்த பேட்டரி ஆனது பிரீமியம் வேரியண்ட்டில் 567கிமீ வரையிலான ரேஞ்சையும், பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்டில் 542கிமீ வரையிலான ரேஞ்சையும் வழங்கக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையுயர்ந்த பிஒய்டி எலெக்ட்ரிக் காராக இருப்பினும் இந்தியாவில் இதுவரையில் 2,500க்கும் அதிகமான சீலயன் 7 எலெக்ட்ரிக் கார்கள் கடந்த ஒரு வருடத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த அளவிற்கு அதிகப்படியான விற்பனையின் காரணமாகவே இந்த எலெக்ட்ரிக் காரின் ஓர் ஆண்டு நிறைவை புதிய ஸ்பெஷல் எடிஷன் உடன் பிஒய்டி கொண்டாடுகிறது. மற்றவர்களின் சீலயன் 7 கார்களில் இருந்து தனித்த, சிறப்புமிக்க சீலயன் 7 காரை வாங்க விரும்புபவர்களுக்கு புதிய ஆனிவர்சரி எடிஷன் ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 18, 2026, 10:32 [IST]
English summary
Byd introduces sealion 7 electric car first anniversary edition price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+