நாட்டின் விலை குறைவான 7-சீட்டர் எலெக்ட்ரிக் கார்! கியா செய்த சிறிய மாற்றம், எகிற போகும் விற்பனை!
கியா இந்தியா (Kia India) நிறுவனம் அதன் கேரன்ஸ் கிளாவிஸ் இவி (Carens Clavis EV) எலெக்ட்ரிக் காரை புதிய 2026ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் செய்துள்ளது. காரில் மிக முக்கியமான மாற்றாக, இதுவரையில் 7 இருக்கைகளை கொண்ட காராக மட்டுமே கிடைத்துவந்த கேரன்ஸ் கிளாவிஸ் இவி, இனி 6-சீட்டர் ஆப்ஷனிலும் கிடைக்கும். இன்னும் புதியதாக வேறு என்னென்ன அப்கிரேட்கள் இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் 7 இருக்கைகளை கொண்ட எலெக்ட்ரிக் காராக கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி விளங்கி வந்த நிலையில், இன்னும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக 6 இருக்கைகள் உடனும் இந்த எலெக்ட்ரிக் கார் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இருக்கை இல்லையென்றாலும் பரவாயில்லை, மாறாக கூடுதல் சௌகரியமான பயணம் வேண்டும் என விரும்புவோருக்கு புதிய 6-சீட்டர் ஆப்ஷன் ஏற்றதாக இருக்கும்.

கேரன்ஸ் கிளாவிஸ் இவி 6-சீட்டர் ஆப்ஷனில், காரின் இரண்டாவது இருக்கை வரிசையில் கேப்டன் (Captain) இருக்கைகள் கிடைக்கும். இந்த புதிய 6-சீட்டர் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த கியா எலெக்ட்ரிக் காரின் வேரியண்ட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீட்டிக்கப்பட்ட ரேஞ்ச் (Extended Range) வேரியண்ட்டில் புதியதாக ஜிடி-லைன் (GT-Line) மற்றும் எக்ஸ்-லைன் (X-Line) என்கிற இரு ட்ரிம்கள் (Trims) சேர்க்கப்பட்டுள்ளன.
இவை இரண்டும் 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் என இரு விதமான இருக்கை ஆப்ஷன்களிலும் கிடைக்கும். இதில், ஜிடி-லைன் ட்ரிம்மில் ஜிடிஎக்ஸ் மற்றும் ஜிடிஎக்ஸ்+ என இரு விதமான ட்ரிம் நிலைகள் உள்ளன. இவை இரண்டும் ஸ்போர்டியான தோற்றத்தில் புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள், லைம் பிரேக் காலிபர்கள், உலோகத்திலான பெடல்கள் உள்ளிட்டவற்றுடன் கிடைக்கும்.

அதுவே, எக்ஸ்-லைன் ட்ரிம் நிலையில் கார் முழுவதும் அடர் கருப்பு நிறத்தில் வித்தியாசமான லுக்கில் கிடைக்கும். இந்த ட்ரிம்மில் காரின் வெளிப்புறம் முழுவதும் டார்க் கன் மெட்டல் மற்றும் அரோரா பிளாக் பேர்ல் என்கிற இரு விதமான கருப்பு நிறங்களில் கிடைக்கும். டிஜிட்டல் சாவி மற்றும் பேட்டரி ஹீட்டர் டெக்னாலஜி போன்ற அட்வான்ஸ்டு வசதிகள் புதிய ஜிடிஎக்ஸ்+ மற்றும் எக்ஸ்-லைன் ட்ரிம்களில் கிடைக்கும்; ஆனால் ஜிடிஎக்ஸ் வேரியண்ட்டில் வழங்கப்படவில்லை.
இந்த புதிய ட்ரிம்களின் அறிமுகத்துடன், கேரன்ஸ் கிளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் வேரியண்ட்டின் ட்ரிம்களிலும் பளபளக்கும் கருப்பு நிறத்தில் புதிய டிசைனிலான 16-இன்ச் ஏரோ அலாய் சக்கரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் உடன் புதிய 6-சீட்டர் ஆப்ஷன் ஆனது கேரன்ஸ் கிளாவிஸ் இவி காரின் எச்டிஎக்ஸ் (இ), எச்டிஎக்ஸ், எச்டிஎக்ஸ்+, புதிய ஜிடிஎக்ஸ், ஜிடிஎக்ஸ்+ மற்றும் எக்ஸ்-லைன் ட்ரிம்களில் கிடைக்கும்.
இந்த காரின் எலெக்ட்ரிக் மோட்டாரில் 42kWh அல்லது 51.4kWh திறன் கொண்ட பேட்டரியை பெறலாம். 42kWh பேட்டரி உடன் மோட்டார் அதிகப்பட்சமாக 99 கிலோவாட்ஸ் ஆற்றலையும், 51.4kWh பேட்டரி உடன் அதிகப்பட்சமாக 126 கிலோவாட்ஸ் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. அதேபோல், பேட்டரியை பொறுத்து காரின் ரேஞ்ச் 404கிமீ-இல் இருந்து 490கிமீ வரையில் கிடைக்கிறது. ஆனால், எந்த பேட்டரி உடன் வாங்கினாலும் மோட்டார் வெளிப்படுத்தும் அதிகப்பட்ச 255 என்.எம் டார்க் திறனில் எந்த மாற்றம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய எலெக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் மெல்ல மெல்ல கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி முன்னேற்றம் கண்டு வருகிறது. இவ்வாறான அப்கிரேட்கள் அந்த முன்னேற்றத்தை இன்னும் வேகப்படுத்தும். இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிய வாடிக்கையாளர்களின் பரிந்துரைக்கு ஏற்ப இந்த புதிய அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த அப்கிரேட்களினால் இந்த காரில் பயணம் சௌகரியம் மேம்பட்டுள்ளது என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications








