பிஎஸ்-6 மாசு உமிழ்வு கருவிகளுடன் ஹூண்டாய் ஐ30 கார்!!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்தை கண்டறிவதற்கான கருவிகளுடன் ஹூண்டாய் ஐ30 கார் சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. எனவே, இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்ப

By Saravana Rajan

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்தை கண்டறிவதற்கான கருவிகளுடன் ஹூண்டாய் ஐ30 கார் சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் விபரங்களை இப்போது காணலாம்.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு கருவிகளுடன் ஹூண்டாய் ஐ30 கார்!!

ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் ஐ30 கார் இந்தியாவில் ரகசியமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. சோதனை செய்யப்படும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. ஆனால், இந்த கார் இந்திய மார்க்கெட்டிற்கு விலை அடிப்படையில் ஒத்து வராது என்ற கருத்தும் பரவலாக இருந்து வருகிறது.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு கருவிகளுடன் ஹூண்டாய் ஐ30 கார்!!

இந்த நிலையில், 2020ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கும் பாரத் ஸ்டேஜ்- 6 மாசு உமிழ்வு தரத்தை கண்டறிவதற்கான கருவிகள் பொருத்தப்பட்ட ஹூண்டாய் ஐ30 கார் புனே நகரில் உள்ள அராய் சோதனை மையம் அருகே தென்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட படங்களும் வெளியாகி இருக்கின்றன.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு கருவிகளுடன் ஹூண்டாய் ஐ30 கார்!!

இதனால், இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான சாத்திக்கூறுகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது. ஹூண்டாய் எலைட் 20 காரைவிட வடிவத்திலும், வசதிகளிலும் மிகவும் பிரிமியம் மாடல் ஹூண்டாய் ஐ30 கார்.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு கருவிகளுடன் ஹூண்டாய் ஐ30 கார்!!

இந்த கார் 4,340 மிமீ நீளமும், 1,795 மிமீ அகலமும், 1,455 மிமீ உயரமும் கொண்டது. அதாவது, தற்போது இந்தியாவில் உள்ள ஹேட்ச்பேக், காம்பேக்ட் செடான் கார்கள் 4 மீட்டருக்குள் இருக்கும் நிலையில், இந்த கார் 4.34 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. 1,316 கிலோ எடையுடையது. 16 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு கருவிகளுடன் ஹூண்டாய் ஐ30 கார்!!

இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் 2.0 என்ற வடிவமைப்பு கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறுகோண வடிவ க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல் நேர விளக்குள், எல்இடி டெயில் லைட்டுகள் இதன் முக்கிய அம்சங்கள்.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு கருவிகளுடன் ஹூண்டாய் ஐ30 கார்!!

ஹூண்டாய் வெர்னா காரில் பயன்படுத்தப்படும் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது மிகவும் பிரிமியமான ஹேட்ச்பேக் கார் மாடல் என்பதுடன், இந்தியாவில் இதற்கு நிகரான ரக மாடல் இப்போது இல்லை.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு கருவிகளுடன் ஹூண்டாய் ஐ30 கார்!!

எனினும், தனித்துவமான வாடிக்கையாளர் வட்டத்தை பெறும் முயற்சியில் இந்த காரை இந்தியாவில் ஹூண்டாய் களமிறக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இங்கிலாந்தில் 17,000 பவுண்ட் விலையில் (இந்திய மதிப்பில் ரூ.15.70 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கலாம்.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு கருவிகளுடன் ஹூண்டாய் ஐ30 கார்!!

ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் க்ரெட்டா எஸ்யூவி மாடல்களுக்கு இடையிலான விலை ரகத்தில் இந்த புதிய ஐ30 காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிலைநிறுத்தும் வாய்ப்புகள் உள்ளன. அண்மையில் ஃபோக்ஸ்வேகேன் கோல்ஃப் காரும் பெங்களூரில் மாசு உமிழ்வு கருவிகளுடன் சோதனை செய்யப்பட்ட படங்கள் வெளியானது. இதனால், தற்போது பிரிமியம் ஹேட்ச்பேக் ரக மார்க்கெட் பக்கம் கார் நிறுவனங்கள் தங்களது கவனத்தை திருப்பி இருப்பதாக கருதப்படுகிறது.

Source: Forum Autocarindia

Most Read Articles
English summary
Hyundai i30 has spotted near ARAi center in Pune.
Story first published: Wednesday, June 27, 2018, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X