இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் செயல்படும் சுங்கசாவடி கட்டணத்தை ரத்து செய்ய முடியாது எனவும், ரோட்டை தரமானதாக பராமரிக்கவும், பயணிகளுக்கு உரிய சேவைகளை வழங்கவும் சுங்கசாவடி வசூல் என்பது கட்டாயமாகிறது. மேலும

By Balasubramanian

இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் செயல்படும் சுங்கசாவடி கட்டணத்தை ரத்து செய்ய முடியாது எனவும், ரோட்டை தரமானதாக பராமரிக்கவும், பயணிகளுக்கு உரிய சேவைகளை வழங்கவும் சுங்கசாவடி வசூல் என்பது கட்டாயமாகிறது. மேலும் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கைய குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த தொழிலளர் சங்கத்தினருடன் நடந்த கூட்டம் ஒன்றில் பேசினார்.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

அவர் பேசுகையில் : "இந்தியாவில் உள்ள சுங்க சாவடிகளை எல்லாம் அகற்ற வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் சுங்கசாவடிகள் என்றும் மூடப்படாது. சிறந்த சேவைகள் பெற வேண்டும் என்றால் டோல் கட்டணம் செலுத்தி தான் ஆக வேண்டும்.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

சமீபகாலமாக நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடந்து வருகிறது. அதை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. மக்களின் பாதுகாப்பான பயணமே அரசிற்கு மிகவும் முக்கியம் தற்போது சுங்க சாவடிகளில் விபத்து ஏற்பட்டால் அதை மீட்பதற்காக பல்வேறு சேவைகள் எப்பொழுதும் தயார் நிலையில் உள்ளது.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு மட்டும் 4.60 லட்சம் விபத்துக்கள் நடக்கிறது. அதில் 1.46 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையை ஒவ்வொரு ஆண்டு குறைத்து கொண்ட வர வேண்டும். அதற்கு தரமான ரோடுகள் மற்றும் அவற்றின் பராமரிப்பு மிகவும் அவசியமாகிறது.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

மஹாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை ராஜ் தாக்கரே தலைமையிலான நவ்நிர்மான் சேனா மற்றும் சில என்ஜிஓ அமைப்புகள் சுங்கசாவடி வசூலை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். அதற்கு அரசு தகுந்த காரணங்களுடன் பதில் அளித்து வருகிறது. " என கூறினார்.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

இந்தியாவில் இருக்கும் பெரும் பிரச்னையாக இந்த சுங்கசாவடி வசூல் பார்க்கப்படுகிறது. இந்த வசூலால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் இதனால் அந்த சுங்க சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

மத்திய அரசிற்கு ஆண்டு தோறும் இந்த சுங்க சாவடி மூலம் ஆண்டிற்கு ரூ 4000 கோடி வரை வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இதை அவர்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

சமீபகாலமாக இந்தியாவில் அமைக்கப்படும் ரோடுகள் நன்றாக தரம் வாய்ந்த ரோடுகளாகவே இருக்கிறது. இதை பராமரிக்க வேண்டியது நிச்சயம் அரசின் கடமையாக உள்ளது.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

மத்திய அமைச்சர் கூறுவதை வைத்து பார்க்கும் போது இவைகளை செய்ய சுங்க சாவடி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற காரணம் சரியாக தான் இருக்கும். ஆனால் உண்மையிலயே மிக நியாமான விலைதான் சுங்கசாவடிகளில் வசூலிக்கப்படுகிறதா? அங்கு தரமான சேவைகள் இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

சுங்கசாவடிகளின் பராமரிப்பை காட்டிலும் அதிகமான தொகை தான் அங்கு வசூலிக்ப்படுவதாகவும் சில சுங்கசாவடிகளில் பொதுமான சேவைகள் வழங்கப்படுவதில்லை எனவும், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

பல சுங்க சாவடிகளில் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடந்தால் உடனடியா மீட்பு பணிக்கு செல்ல ஆம்புலன்ஸ்கள் கூட இல்லை. மேலும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக சுங்க சாவடிகளில் கழிப்பறைகள் முக்கியமான பெண்களுக்கான கழிப்பறை வசதிகள் இல்லை. இவ்வாறு மக்கள் கூறும் குற்றச்சாட்டுகள் மீது அரசு பெரிய அளவில் நடவடிக்கை எடுத்தாக தெரியவில்லை.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

இந்தியா முழவதும் இன்று 400க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகள் செயல்படுகிறது. சாலைகளை பராமரிக்க வேண்டும், மற்றும் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என அரசு கூறும் காரணங்கள் முக்கியமானதாக கொண்டாலும் அதிக பணம் வசூல் மக்களுக்கு மிக பாரமாக இருக்கிறது.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

அதே நேரத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் இது மாதிரியான சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு மக்கள் பணிக்க வரி வசூல் செய்யப்படுகிறது. அதன் மூலம் அந்த ரோடு சிறப்பாகவும், சிறந்த சேவையை வழங்கும் வகையிலும் பராமரிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் டோல் கேட் கட்டணம் ரத்து?

இதை கருத்தில் கொண்டு சுங்க சாவடிகளில் வசூல் செய்யும் பணத்தை அளவை குறைக்க வேண்டும் என்றும், அனைத்து சுங்கசாவடிகளில்லும் போதுமான சேவைகள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதோடு, அவ்வாறு நடக்க வில்லை என்றால் அந்த சுங்கசாவடியை நடத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்!!
  2. விற்பனையில் இமாலய சாதனை படைத்த பிரெஸ்ஸாவின் வெற்றி ரகசியம் இதுதான்... ஃபோர்டு, மஹிந்திரா அதிர்ச்சி..
  3. மாருதி கார்களுக்கு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் அறிவிப்பு
  4. பெங்களூரில் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர் சந்திப்பு!
  5. 2018 ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

More from DriveSpark

Article Published On: Wednesday, July 4, 2018, 13:44 [IST]
English summary
Nitin Gadkari rules out stopping highway toll collection.Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+