பெங்களூரில் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர் சந்திப்பு!

இந்த ஆண்டுக்கான ஜாவா யெஸ்டி உரிமையாளர் சந்திப்பு மற்றும் கண்காட்சி நிகழ்வுகள், வரும் 8ந் தேதி பெங்களூர் விட்டல் மல்லையா சாலையில் உள்ள செயிண்ட் ஜோசப் இந்தியன் பள்ளி மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்க இரு

By Saravana Rajan

ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்

பெங்களூரில் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர் சந்திப்பு!

ஆண்டுதோறும் ஜூலை இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச ஜாவா மோட்டார்சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, பெங்களூரை சேர்ந்த ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் கிளப் ஆண்டுதோறும் ஜாவா யெஸ்டி உரிமையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

பெங்களூரில் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர் சந்திப்பு!

அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜாவா யெஸ்டி உரிமையாளர் சந்திப்பு மற்றும் கண்காட்சி நிகழ்வுகள், வரும் 8ந் தேதி பெங்களூர் விட்டல் மல்லையா சாலையில் உள்ள செயிண்ட் ஜோசப் இந்தியன் பள்ளி மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்க இருக்கிறது.

பெங்களூரில் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர் சந்திப்பு!

ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 500 மோட்டார்சைக்கிள்களும், 1,000 ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர் சந்திப்பு!

இந்த ஆண்டு நிகழ்ச்சியில் பாரம்பரியம் மிக்க 50சிசி கோல்ட் மோட்டார்சைக்கிள், 125சிசி பெராக் மற்றும் 350 சிசி ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல்கள் காட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜாவா யெஸ்டி உரிமையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் சிறப்பான நிகழ்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர் சந்திப்பு!

செக்கோஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்த ஜாவா நிறுவனம் 1950ம் ஆண்டு இந்தியாவில் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது. கடந்த 1960ம் ஆண்டு இந்தியாவில் உற்பத்தி துவங்கப்பட்டது. 1996ம் ஆண்டு வரை இந்தியாவில் ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டன.

பெங்களூரில் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர் சந்திப்பு!

ஐடியல் ஜாவா நிறுவனத்தின் மூலமாக மைசூரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த மோட்டார்சைக்கிள்கள் இந்தியர்களின் மனதை வெகுவாக கவர்ந்தன.குறிப்பாக, இந்த நிறுவனங்களின் 250 சிசி 2 ஸ்ட்ரோம் எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியர்களை வெகுவாக ஈர்த்தன.

பெங்களூரில் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர் சந்திப்பு!

குறைவான பராமரிப்பு செலவு, நீடித்த உழைப்பு ஆகியவை இந்த மோட்டார்சைக்கிள்கள் மீதான ஈர்ப்பை அதிகரித்தன. மாசு உமிழ்வு பிரச்னை, நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் ஜாவா மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

பெங்களூரில் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் உரிமையாளர் சந்திப்பு!

எனினும், ஜாவா மோட்டார்சைக்கிள் பிராண்டை மஹிந்திரா கையகப்படுத்தியது. இதனால், மீண்டும் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. கூடிய விரைவில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் மீண்டும் இந்தியர்களின் கைகளில் தவழ இருக்கிறது.

Most Read Articles
English summary
Jawa Yezdi motorcycle meet to be held in Bangalore; the largest of its kind in the country. Hosted by Bangalore Jawa Yezdi Motorcycle Club (BJYMC), the event celebrates the 16th International Jawa Day. This year's Jawa Yezdi meet will be held on Sunday, 8th July 2018 at St. Joseph's Indian High School Grounds, Vittal Mallya Road, Bangalore. The celebrations will start at 10:30 AM.
Story first published: Wednesday, July 4, 2018, 11:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X