2018 ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஜாஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்

By Saravana Rajan

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய ஹோண்டா ஜாஸ் கார் கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

2018 ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

இந்தியாவின் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹோண்டா ஜாஸ் கார் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களால் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்த நெருக்கடியை போக்கி வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஜாஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2018 ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

கடந்த ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் சிறிய மாறுதல்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் இருக்கிறது. இந்த நிலையில், இந்த மாத இறுதியில் இந்த புதிய ஜாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

2018 ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் முன்புறத்தில் அகலமான ஏர்டேம் கொண்ட பம்பர் அமைப்புடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அண்மையில் வந்த புதிய ஹோண்டா அமேஸ் காரில் இருப்பது போன்ற டிசைனிலான புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் பின்புறத்தில் முக்கிய மாற்றமாக இருக்கிறது.

2018 ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக, கூடுதல் வசதிகளையும், எளிதான இயக்குதல் அனுபவத்தையும் ஓட்டுனர் பெற முடியும்.

2018 ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றமில்லை. தற்போது பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. டீசல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

2018 ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

பெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும். ஹோண்டா அமேஸ் டீசல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதேபோன்று, புதிய ஹோண்டா ஜாஸ் காரின் டீசல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வருமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், டீசல் மாடலில் சிவிடி ஆப்ஷன் இருக்காது என்று தகவல்கள் கூறுகின்றன.

2018 ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

இந்த மாத இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.6 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு நிச்சயம் புதிய மாடல் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 4, 2018, 10:29 [IST]
English summary
Honda is planning to launch the facelift version of its premium hatchback, Jazz in India, this month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+