சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகிறது!

இந்தியாவில் புதிய 150சிசி ரக க்ரூஸர் மோட்டார்சைக்கிளை சுஸுகி இருசக்கர வாகன நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது, அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவின் விலை குறைவான க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் மாடலாக பஜாஜ் அவென்ஜர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது போட்டி இல்லாமல் சோலோவாக ஆடி வந்த பஜாஜ் அவென்ஜருக்கு நெருக்கடியை தரும் வகையில், புதிய க்ரூஸர் மாடலை சுஸுகி இருசக்கர வாகன நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

விரைவில் வருகிறது புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 !

சுஸுகி நிறுவனத்தின் புகழ்பெற்ற இன்ட்ரூடர் க்ரூஸர் மோட்டார்சைக்கிள் பிராண்டில் இந்த புதிய மாடல் வர இருக்கிறது. ஆம், சுஸுகி இன்ட்ரூடர் 150 என்ற இந்த மாடல் நவம்பர் 7ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

விரைவில் வருகிறது புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 !

இந்த மோட்டார்சைக்கிளின் படம், அறிமுக விபரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இந்த மோட்டார்சைக்கிளின் புரோஷரை Bike Adviceதளம் வெளியிட்டு இருக்கிறது.

விரைவில் வருகிறது புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 !

சுஸுகி இன்ட்ரூடர் எம்1800ஆர் மோட்டார்சைக்கிளின் பல டிசைன் தாத்பரியங்கள் இந்த மோட்டார்சைக்கிளிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால், சிறந்த பட்ஜெட்டில் மிகச் சிறந்த க்ரூஸர் மாடலாக இந்தியர்களின் ஆவலை தூண்டுவதாக இருக்கிறது.

விரைவில் வருகிறது புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 !

சுஸுகி ஜிக்ஸெர் பைக்கில் பயன்படுத்தப்படும், 154.9சிசி ஏர்கூல்டு எஞ்சின்தான் இந்த புதிய க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

Recommended Video

[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
விரைவில் வருகிறது புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 !

அதே நேரத்தில், க்ரூஸர் ரகத்திற்கு தக்கவாாறு ஆரம்ப நிலை மற்றும் நடுத்தர நிலையில் சிறந்த டார்க் திறனை வழங்கும் விதத்தில், எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Trending On DriveSpark Tamil:

  • விபத்துக்களில் ஆண்டவனுக்கு மேலாக அற்புதங்கள் நிகழ்த்தி வரும் டாடா டியாகோ கார்!
  • 20 ஆண்டு பழமையான காரை பயன்படுத்தும் உலகின் பெரும் பணக்காரர் ஜெஃப் பேசோஸ்!
  • தலை சுற்றவைக்கும் முகேஷ் அம்பானி கார் டிரைவரின் மாத சம்பளம்!
  • விரைவில் வருகிறது புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 !

    முரட்டுத்தனமான தோள்பட்டை அமைப்பு கொண்டதாக இருக்கும் வகையில், ஹேண்டில்பார், பெட்ரோல் டேங்க் வடிவமைப்புகள் உள்ளன. பெரிய அளவிலான ஹெட்லைட் அமைப்பும் வசீகரிக்கிறது. பக்கெட் ஸ்டைல் ஓட்டுனர் இருக்கை இதன் முக்கிய சிறப்பு.

    விரைவில் வருகிறது புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 !

    இந்த மோட்டார்சைக்கிளில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இரட்டை புகைப்போக்கி அமைப்பு, டிஸ்க் பிரேக்குகள், கருப்பு நிற அலாய் வீல்கள் போன்றவை முக்கிய சிறப்புகளாக இருக்கும்.

    விரைவில் வருகிறது புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 !

    பஜாஜ் நிறுவனத்தின் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 மற்றும் அவென்ஜர் க்ரூஸ் 220 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இது சற்று பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்படும் என்பதால், பஜாஜ் அவென்ஜர் மோட்டார்சைக்கிள்களை விட சற்றே விலை அதிகமாக நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

    விரைவில் வருகிறது புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 !

    இந்த மோட்டார்சைக்கிள் ரூ.1 லட்சத்தையொட்டிய எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் என்பது இப்போதைய கணிப்பு. வரும் 7ந் தேதி இந்த மோட்டார்சைக்கிள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

    Trending On DriveSpark Tamil:

More from DriveSpark

Article Published On: Tuesday, October 31, 2017, 11:25 [IST]
English summary
Japanese two-wheeler manufacturer Suzuki is all set to introduce a new cruiser motorcycle in the Indian market to rival the likes of Bajaj Avenger.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+