டியாகோ கட்டுமான தரத்தில் சமசரசம் செய்து கொள்ளாத டாடா... 4 உயிர்கள் தப்பியது!!

டாடா டியாகோ கார் பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அதற்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

டாடா டியாகோ கார் விபத்துக்குள்ளாவது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. கார் விபத்தில் சிக்கினாலும் பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வருவதே, இந்த செய்திகள் அதிக முக்கியத்துவம் பெறுவதற்கு காரணமாகி உள்ளன.

மீண்டும் ஒரு விபத்தில் பயணிகளை காத்தருளிய டாடா டியாகோ!

இந்த நிலையில், மீண்டும் ஒரு டாடா டியாகோ கார் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது. அண்மையில் கேரள மாநிலம், கொல்லம் நகர் அருகே சென்று கொண்டிருந்த டாடா டியாகோ கார் ஒன்று திடீரென சாலையில் பல்டி அடித்து கவிழ்ந்தது.

மீண்டும் ஒரு விபத்தில் பயணிகளை காத்தருளிய டாடா டியாகோ!

சாலையின் குறுக்கே திடீரென வந்த பாதசாரி மீது மோதாமல் இருப்பதற்காக, காரை திருப்பியபோது, கார் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக, அதன் உரிமையாளர் எமக்கு அளித்த தொலைபேசி தகவலில் தெரிவித்தார்.

மீண்டும் ஒரு விபத்தில் பயணிகளை காத்தருளிய டாடா டியாகோ!

இந்த பயங்கர விபத்தில் காரில் பயணித்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காரில் பயணித்த நான்கு பேரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், லேசான காயங்களுடன் விபத்துக்குள்ளான காரில் இருந்து வெளியேறி உள்ளனர்.

மீண்டும் ஒரு விபத்தில் பயணிகளை காத்தருளிய டாடா டியாகோ!

மேலும், கார் பல்டியடித்து கவிழ்ந்தாலும், காரின் கட்டுமானம் திடமாக இருந்ததும் காரில் இருந்தவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படவில்லை. இல்லையெனில், காரின் கூரை உள்ளிட்ட பகுதிகள் நசுங்கிவிடும்.

மீண்டும் ஒரு விபத்தில் பயணிகளை காத்தருளிய டாடா டியாகோ!

ஆனால், டாடாவின் புதிய கார்கள் சிறந்த கட்டுமான திடத்துடன் வருவதால், இதுபோன்ற விபத்துக்களில் பயணிகள் தப்புவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

Trending On DriveSpark Tamil:

Recommended Video

[Tamil] Tata Nexon Review: Specs
மீண்டும் ஒரு விபத்தில் பயணிகளை காத்தருளிய டாடா டியாகோ!

அதிக மைலேஜ் தரும் வகையில் கட்டமைப்பதற்காக, கார்களின் எடை வெகுவாக குறைக்கும் நுட்பத்தை பல கார் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

மீண்டும் ஒரு விபத்தில் பயணிகளை காத்தருளிய டாடா டியாகோ!

ஆனால், டாடா நிறுவனம் காரின் கட்டுமானம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை கருதி, எடை விஷயத்தில் சமசரம் செய்து கொள்வதில்லை. இதனால், இதுபோன்ற விபத்துக்களில் டாடா டியாகோ, ஹெக்ஸா உள்ளிட்ட கார்கள் பயணிகளின் உயிர்களுக்கு சற்று கூடுதல் உத்தரவாதம் அளிப்பதாக கருதலாம்.

மீண்டும் ஒரு விபத்தில் பயணிகளை காத்தருளிய டாடா டியாகோ!

கார் சிறப்பான கட்டுமானத் தரத்தை பெற்றிருந்தாலும், காரில் பயணித்த நான்கு பேரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததும், அவர்கள் உயிர் தப்பியதற்கு முக்கிய காரணம். இந்த சம்பவத்தின் மூலமாக சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தையும் கார் ஓட்டுனர்களும், பயணிகளும் உணர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

மீண்டும் ஒரு விபத்தில் பயணிகளை காத்தருளிய டாடா டியாகோ!

சிறந்த அடிப்படை வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்படுவதால், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மாடலாக இருக்கிறது. இதனால், சராசரியாக மாதத்திற்கு 7,000 கார்கள் என்ற எண்ணிக்கையில் விற்பனை செல்கிறது.

Via- Rushlane

Trending On DriveSpark Tamil:

English summary
Tata Tiago Built Quality Proved Again.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X