மாருதிக்கு அடுத்து இனி டாடா மோட்டார்ஸ் தான்... புதிய கார்களினால் ஒரே வருடத்தில் கை மேல் பலன்!
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன லிமிடெட் (Tata Motors Passenger Vehicles Limited) நிறுவனம், நடந்து முடிந்த 2026 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 63,331 யூனிட் கார்களை விற்பனை செய்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியில் விற்பனையான 46,811 டாடா கார்களுடன் ஒப்பிடுகையில் 35% அதிகரிப்பாகும்.
இதில், உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை 34% உயர்ந்து 62,329 யூனிட்களாகவும், வெளிநாட்டு ஏற்றுமதி 167% அதிகரித்து 1,002 யூனிட்களாகவும் பதிவாகியுள்ளது. டாடா மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை (உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் சேர்த்து), 2026 பிப்ரவரியில் 57% வளர்ச்சி கண்டு 8,385 யூனிட்களை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இது 5,343 யூனிட்களாக மட்டுமே பதிவாகி இருந்தது. இது, டாடா பயணிகள் வாகன எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் விற்பனை செய்தது ஆகும். 180 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் ஒரு பகுதியான இந்த டாடா பயணிகள் வாகன எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம், 2025 அக்டோபர் 13 முதல் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.
| Business Units/Segments | Feb'26 | Feb'25 | Growth/Decline |
| PV Domestic | 62,329 | 46,435 | 34% |
| PV IB | 1,002 | 376 | 167% |
| PV Total (includes EV) | 63,331 | 46,811 | 35% |
| EV IB + Domestic | 8,385 | 5,343 | 57% |
பயணிகள் வாகனப் பிரிவில் மட்டுமல்லாமல், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாரி, பேருந்து உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கமர்ஷியல் வாகனப் பிரிவும் 2026 பிப்ரவரியில் மொத்த விற்பனையில் 2025 பிப்ரவரியை விட 32% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 42,940 டாடா கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே, 2025 பிப்ரவரியில் 32,533 டாடா கமர்ஷியல் வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டிருந்தன. டாடா கமர்ஷியல் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 32.8% உயர்ந்து 40,893 யூனிட்களாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி 17.9% அதிகரித்து 2,047 யூனிட்களாகவும் கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் அமைந்துள்ளது. பிரிவு வாரியாகப் பார்க்கும்போது, டாடா மோட்டார்ஸின் கனரக கமர்சியல் வாகன (HCV) லாரிகளின் விற்பனை 37.1% அதிகரித்து 13,559 யூனிட்களை எட்டியுள்ளது.
இன்டர்மீடியட் & இலகுரக கமர்சியல் வாகன (ILCV) லாரிகளின் விற்பனை 34.1% உயர்ந்து 7,577 யூனிட்களாகவும், பயணிகள் செல்லும் டாடா கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை 27.4% அதிகரித்து 5,548 யூனிட்களாகவும் கடந்த மாதத்தில் பதிவாகி உள்ளது. மேலும், பிக்-அப் டிரக்குகள் அடங்கிய சிறிய ரக டாடா கமர்சியல் வாகன (SCV) விற்பனை 30.4% உயர்ந்து 14,209 யூனிட்களை எட்டியுள்ளது.
| Category | February 2026 | February 2025 | Growth (Y-o-Y) |
| HCV Trucks | 13,559 | 9,892 | 37.1% |
| ILMCV Trucks | 7,577 | 5,652 | 34.1% |
| Passenger Carriers | 5,548 | 4,355 | 27.4% |
| SCV cargo and pickup | 14,209 | 10,898 | 30.4% |
| Domestic Sales | 40,893 | 30,797 | 32.8% |
| International Business | 2,047 | 1,736 | 17.9% |
| Total | 42,940 | 32,533 | 32.0% |
Tables Source: Tata Motors Official Press Release
டாடா மோட்டார்ஸின் மீடியம் மற்றும் கனரக கமர்சியல் வாகன (MH&ICV) உள்நாட்டு விற்பனை 34.4% உயர்ந்து 21,423 யூனிட்களாகப் பதிவாகி உள்ளது. கடந்த மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவையும் சேர்த்தால், மொத்தமாக 22,512 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டை விட 34.9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புள்ளி விவரங்கள், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை ஆதிக்கத்தையும், பல்வேறு வாகனப் பிரிவுகளில் அதன் தொடர்ச்சியான வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக கார்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மற்ற கார் நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கைகளையும் பார்த்தால், கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த இரண்டாவது நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki)-க்கு அடுத்து டாடா மோட்டார்ஸ் இடம்பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications








