காரை உற்பத்தி செய்யும் வேகத்தில் டெலிவிரி பண்ணிட்டு இருக்காங்க! டாடா அறிமுகம் செய்து 4 மாசம் கூட இன்னும் ஆகல!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனது புதிய சியரா (Sierra) எஸ்யூவி காரை வாடிக்கையாளர்களுக்கு 10,000 யூனிட்கள் டெலிவரி செய்து முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. 1990ஆம் காலக்கட்டத்தில் விற்பனையில் இருந்த சியரா சமீபத்தில் புதிய தோற்றத்தில் மீண்டும் விற்பனைக்கு வந்து சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது மறு அறிமுகம் செய்யப்பட்ட 'சியரா' பெயரின் மீதான வாடிக்கையாளர்கள் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மற்றும் பிரீமியம் அம்சங்களுடன் சியரா விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்கள் மத்தியில் சியராவுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு, அதன் வெற்றிகரமான மறுபிரவேசத்தைக் காட்டுவதாக டாடா மோட்டார்ஸ் பெருமிதம் கொள்கிறது. சியரா, டாடா நிறுவனத்தின் பிரபலமான எஸ்யூவி கார்களில் ஒன்றாகும்.

tata sierra cars delivery milestone

இது முதலில் 1990களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மேம்பட்ட வடிவமைப்பு, புதுப்பிக்கப்பட்ட ஸ்டைல் மற்றும் அதிநவீன அம்சங்களுடன் சியரா மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளது. இந்தக் காரின் 10,000 யூனிட்கள் டெலிவரி மைல்கல்லை, டாடா நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காருக்குள் நுழையும்போதும், வெளியேறும் போதும் ஒளிரும் விளக்குகளை புதிய சியரா கார் கொண்டுள்ளது.

மேலும், இது பிரீமியம் தரத்திலான கனெக்டட் எல்இடி டிஆர்எல்-கள் (DRLs) மற்றும் சூழ்நிலையை பொறுத்து செயல்படும் இண்டிகேட்டர்களையும் தனித்துவமான அம்சங்களாகக் கொண்டுள்ளது. சியராவின் தனிச்சிறப்புமிக்க வடிவமைப்பு அம்சங்களில், பழைய சியராவை போன்ற பின்பக்க கண்ணாடிக் குடில், சைகைக் கட்டுப்பாட்டுடன் கூடிய கிளாம்ஷெல் பின்பக்க கதவு, அதனுடன் இணைக்கப்பட்ட பின்பக்க வைப்பர் மற்றும் 19-இன்ச் ட்யூயல்-டோன் அலாய் சக்கரங்கள் ஆகியவை அடங்கும்.

tata sierra cars delivery milestone

உட்புற சிறப்பம்சங்களில், ஸ்கிரீன்-டு-ஸ்கிரீன் பனோரமிக் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, ரியல்-டைமில் விபரங்களை வழங்கும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), 360-டிகிரி கேமரா, டால்பி அட்மாஸ் (Dolby Atmos) வசதியுடன் கூடிய 8-ஸ்பீக்கர் ஜேபிஎல் (JBL) சவுண்ட் சிஸ்டம், மூட் லைட்டிங் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய லெதரெட் இருக்கைகள் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த காம்பாக்ட் எஸ்யூவி கார் மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், அதிகப்பட்சமாக 106 பிஎஸ் பவர் மற்றும் 145 என்.எம் டார்க் திறனை வழங்கக்கூடிய 1.5 லிட்டர் ரெவோட்ரான் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், அதிகப்பட்சமாக 160 பிஎஸ் பவர் மற்றும் 255 என்.எம் டார்க் திறனை வழங்கக்கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் அதிகப்பட்சமாக 118 பிஎஸ் பவர் மற்றும் 280 என்.எம் டார்க் திறனை வழங்கக்கூடிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளிட்டவை அடங்கும்.

இவற்றுடன், கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் 6-ஸ்பீடு மேனுவல், 7-ஸ்பீடு டிசிஏ (DCA) மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் (டர்போ வேரியன்ட்டிற்கு) ஆகியவை அடங்கும். பிரிவிலேயே முதல்முறையாக சூப்பர்கிளைட் சஸ்பென்ஷன், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், லெவல்-2 அடாஸ் (ADAS) பாதுகாப்பு தொகுப்பு மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) போன்ற பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

டாடா சியரா காரின் ஆரம்ப விலை ரூ.11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகவும், டாப்-எண்ட் வேரியன்ட் ரூ.21.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகவும் விற்கப்படுகிறது. இது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி அஸ்டர் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா போன்ற கார் மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 1990 சமயத்தில் பிரபலமாக இருந்த டாடா கார்களுள் சியராவும் ஒன்றாகும். இதனால் அதே பெயரில், கிட்டத்தட்ட அதே டிசைனில் புதிய மாடர்ன் காரை அறிமுகம் செய்ததும் அது மார்க்கெட்டில் உடனடியாக ஹிட் அடித்துள்ளது. இருப்பினும், இவ்வளவு குறுகிய காலத்திற்குள் 10,000 கார்கள் டெலிவிரி செய்யப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 4, 2026, 13:44 [IST]
English summary
Tata motors crossed 10000 sierra cars delivery within 4 months of launch check all details here
மேலும்... #tata motors #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+