காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

இந்தியாவின் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சாதாரண மக்களுடன் சேர்த்து, புகழ்பெற்ற பிரபலங்கள் பலரும் ராயல் என்பீல்டு பைக்குகளை விரும்புகின்றனர்.

By Arun

இந்திய நிறுவனமான ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. சாதாரண மக்களுடன் சேர்த்து, புகழ்பெற்ற பிரபலங்கள் பலரும் ராயல் என்பீல்டு பைக்குகளை விரும்புகின்றனர். அப்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், ராயல் என்பீல்டு பைக்குகளை சொந்தமாக வைத்திருக்கும் பிரபலங்கள் குறித்த சுவாரசிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

நானா படேகர்

சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா படத்தில், வில்லனாக நடித்தவர் நானா படேகர். காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு உதவும் ஹூரோ என நானா படேகர் புகழப்படுகிறார்.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

நானா படேகர் சமீபத்தில், ராயல் என்பீல்டு டெசர்ட் ஸ்ட்ரோம் 500 பைக்கை மும்பை தெருக்களில் ஓட்டியதை பார்க்க முடிந்தது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விலை உயர்ந்த பைக்குகளில் ஒன்று டெசர்ட் ஸ்ட்ரோம். இந்த பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 1.81 லட்ச ரூபாய்.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

ஸ்பெஷல் கலருடன் டெசர்ட் ஸ்ட்ரோம் பைக் வருகிறது. டெசர்ட் ஸ்ட்ரோம் பைக்கில், 500 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27.2 பிஎச்பி பவர் மற்றும் 41.3 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

மோகன்லால்

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் என போற்றப்படுபவர் மோகன்லால். கேரளா மட்டுமல்லாது, தென் இந்தியா முழுவதும் மோகன்லாலுக்கு ரசிகர்கள் உள்ளனர். ராயல் என்பீல்டு கிளாசிக் 500 க்ரோம் பைக்கை, மோகன்லால் சொந்தமாக வைத்துள்ளார். சமீபத்தில்தான் இந்த பைக்கை அவர் வாங்கினார்.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு கிளாசிக் 500 க்ரோம் பைக்கின் இன்ஜின் ஸ்பெஷிபிகேஷன், இதர 500 சிசி கிளாசிக் மாடல் பைக்குகளை போன்றே உள்ளது. இது 27.2 பிஎச்பி பவர், 41.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். கேரள மார்க்கெட்டில், ராயல் என்பீல்டு பைக்குகள் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

ஜான்டி ரோட்ஸ்

ஜான்டி ரோட்ஸை தெரியாத கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது. தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரரான ஜான்டி ரோட்ஸ், தனது சிறப்பான பீல்டிங் திறனால் உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கி வருபவர்.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

ஐபிஎல் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும் ஜான்டி ரோட்ஸ் இருந்துள்ளார். இந்தியா வரும்போதெல்லாம், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கை ஜாலியாக ஓட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஜான்டி ரோட்ஸ்.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

பில்லி ஜோயல்

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பாடல் ஆசிரியர் பில்லி ஜோயல். வின்டேஜ் ராயல் என்பீல்டு பைக் ஒன்றை பில்லி ஜோயல் சொந்தமாக வைத்துள்ளார். இசை தொடர்பான அனைத்து பயணங்களின்போதும், தனக்கு மிகவும் விருப்பமான இந்த பைக்கில்தான் பில்லி ஜோயல் பயணிப்பார்.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

ஜே லெனோ

கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் குறித்த பிரபலமான டாக் ஷோ நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் மிகவும் புகழ் பெற்றவர் ஜே லெனோ. இதுதவிர காமெடியன், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என ஜே லெனோவிற்கு பல முகங்கள் உண்டு. இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

ராயல் என்பீல்டு 500 க்ரோம் பைக்கை, ஜே லெனோ சொந்தமாக வைத்துள்ளார். ஜே லெனோவின் கேரேஜில், மிகவும் பிரபலமான பல பைக்குகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ராயல் என்பீல்டு 500 க்ரோம். பல நிகழ்ச்சிகளுக்கு, இந்த பைக்கில்தான் ஜே லெனோ வந்து சென்றுள்ளார்.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

வருண் தவான்

பாலிவுட் திரையுலகில் மிகவும் வேகமாக புகழ்பெற்று வரும் நடிகர்களில் ஒருவர் வருண் தவான். ராயல் என்பீல்டு யூசிஇ (UCE) 500 சிசி புல்லட்டை வருண் தவான் சொந்தமாக வைத்துள்ளார். இந்த பைக், ஆலிவ் பச்சை நிறத்தில் பிரத்யேகமாக பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

குல் பனாக்

பாலிவுட் திரையுலகின் சில வழக்கத்திற்கு மாறான படங்களில் குல் பனாக்கை காண முடியும். நடிகை என்பதையும் கடந்து மாடல் என்ற முகமும் அவருக்கு உள்ளது. மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டிகளிலும், குல் பனாக் பங்கெடுத்துள்ளார்.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

கார் மற்றும் பைக்குகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் குல் பனாக். ராயல் என்பீல்டு எலக்ட்ரா 350 பைக்கை, குல் பனாக் ஓட்டுவதை அடிக்கடி பார்க்க முடிந்திருக்கிறது. இந்த பைக்கில் நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வதையும் குல் பனாக் வழக்கமாக வைத்துள்ளார்.

காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு

ஆதித்யா ராய் கபூர்

பாலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவர் ஆதித்யா ராய் கபூர். ராயல் என்பீல்டு பைக்குகள் என்றால், ஆதித்யா ராய் கபூருக்கு கொள்ளை பிரியம். இவரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகள் உள்ளன. குறிப்பாக ஏவிஎல் (AVL) இன்ஜின் பொருத்தப்பட்ட ராயல் என்பீல்டு மச்சிஸ்மோ 500 பைக்குடன் ஆதித்யா ராய் கபூரை பல முறை பார்க்க முடிந்திருக்கிறது.

Source:Cartoq

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு
  2. சபாஷ்.. சரியான போட்டி.. பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கை கிண்டலடிக்கும் கவாஸாகி விளம்பரத்தால் பரபரப்பு
  3. எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம் சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

More from DriveSpark

Article Published On: Tuesday, July 24, 2018, 11:13 [IST]
English summary
8 Celebrities Who Own Royal Enfield Bikes. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+