எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம் சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

எலெக்ட்ரிக் வாகனதுறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டு வரும் சன் மொபிலிட்டியும் மைக்ரோசாஃப்ட் நிர்வாகமும் சேர்ந்து கூட்டு முயற்சியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஸ்மார்ட் நெட்வோர்க்கை உருவாக

By Balasubramanian

எலெக்ட்ரிக் வாகனதுறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டு வரும் சன் மொபிலிட்டியும் மைக்ரோசாஃப்ட் நிர்வாகமும் சேர்ந்து கூட்டு முயற்சியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஸ்மார்ட் நெட்வோர்க்கை உருவாக்கவுள்ளது. இது சாத்தியப்பட்டால் இனி எலெக்ட்ரிக் காரிலேயே இந்தியா முழுவதும் சுற்றலாம். பெட்ரோலுக்கு ஆகும் செலவை விட மிக மிக குறைந்த செலவில் இதை மேற்கொள்ளலாம்.

எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம்; சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் புதிய தொழிற்நுட்பத்தை புகுத்தி மார்கெட்டை பிடிக்க கடுமையாக முயன்று வரும் நிறுவனம் தான் சன் மொபிலிட்டி, எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள குறைகளை எல்லாம் களையும் வண்ணம் இவர்களது தொழிற்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம்; சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

எலெக்ட்ரிக் வாகனம் என்றாலோ பலரும் கேட்பது நடுவீதியில் சார்ஜ் இல்லாமல் நின்று விட்டால் என்ன செய்வது, நீண்ட தூரம் பயணிக்கமுடியாமல் போகும், அப்படியே நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி சார்ஜ் ஏற்ற அதிக நேரம் தேவைப்படும்.

எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம்; சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

இவ்வாறு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க காரணங்களை மக்கள் அடுக்கி கொண்டே போகின்றனர். இந்த பிரச்னைகள் எலெக்ட்ரிக் வாகனங்களில் இருப்பது உண்மைதான். அதனால் அவர்கள் கூறும் காரணங்களும் நியாயம் தான். இதை எப்படி சரி செய்வது என்பது குறித்து பலர் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம்; சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

இதை சரி செய்யும் விதத்தில் சன் மொபிலிட்டி என்ற நிறுவனம் எலெக்ட்ரிக்வாகனங்களுக்கான புதிய தொழிற்நுட்பம் ஒன்றை வடிவமைத்து இதை சந்தை படுத்தி வருகிறது.

எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம்; சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

அதாவது பெட்ரோல் பங்குகளிலோ சாலை ஓரங்களிலோ குவிக் இன்டர்சேஞ்ச் ஸ்டேஷன் என்ற அமைப்பை நிறுவ இருக்கிறது. இந்த ஸ்டேஷனில் பேட்டரிகள் சோலார் பவர் மூலம் சார்ஜ் ஏற்றப்பட்டு கொண்டே இருக்கும். உங்கள் காருக்கு பேட்டரி தேவை என்றால் நீங்கள் நேரடியாக சார்ஜிங் ஸ்டேஷனிற்கு சென்று உங்களது சார்ஜ் இல்லாத பேட்டரியை கொடுத்துவிட்டு முழுமையாக சார்ஜ் ஏற்றிய பேட்டரியை வாங்கி கொள்ளலாம்.

எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம்; சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

இதற்காக சார்ஜ் ஏற்றும் கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும் இது பெட்ரோல் விலையை காட்டிலும் மிக மிக குறைவாக இருக்கும். மேலும் இது சோலார் பவர் மூலம் சார்ஜ் ஆவதால் சுற்றுசுழுலுக்கு மாசு ஏற்படுத்தான வண்ணம் இருக்கும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால் எலெக்ட்ரிக் வாகனத்தில் நீண்ட தூரம் பயணிக்கலாம். தொழிற்நுட்ப கோளாறையும் எளிதாக சரி செய்யலாம். இதை அந்நிறுவனம் ஸ்மார்ட் நெட்வோர்க்காக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம்; சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

இதை சந்தைப்படுத்துவதில் ஒரு சிக்கல் என்ன என்றால் அந்நிறுவன ம் வழங்கும் பேட்டரி ஹோண்டர் பொருத்தப்பட்ட கார்களில் தான். இதை பொருத்தமுடியும். தற்போது அந்நிறுவனம் சாஃப்ட்வேர் மூலமாக பயணாளிகளுக்கு மேலும் பல வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம்; சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

அதற்காக அந்நிறுவனம் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி சன் மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ள ஸ்மார்ட் நெட்வோர்க் சிஸ்டர்த்திற்கான எல்லாவித ஹார்டுவேர்களை சன் மொபிலிட்டி நிறுவனம் வழங்கும் என்றும் சாஃப்ட்வேர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம்; சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

இதில் மைக்ரேசாஃப்ட் நிறுவனம் அந்த நெட்வோர்க்குடன் சன்மொபிலிட்டியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கான மொபைல் ஆப்பையும் டிசைன் செய்யவிருக்கிறது. முற்றிலும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் முறையில் தயார் செய்யப்படும் இந்த ஆப் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் டிசைன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம்; சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

இந்த ஆப் மூலம் வாகனத்தில் உள்ள பேட்டரியின் அளவு, அருகில் உள்ள க்யூஐஎஸ் மையம், அதற்கு செல்லும் வழி, வழியில் உள்ள டிராபிக், க்யூஐஎஸ் மையத்தில் தற்போது கையிருப்பில் உள்ள பேட்டரிகள், பேட்டரிகளை நாம் செல்வதற்கு முன்னர் மற்றவர்கள் வாங்கி செல்வதை தடுக்க அதை புக் செய்யும் வசதி ஆகிய கொண்டு வரப்படுகின்றன.

எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம்; சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

இந்த சாஃப்ட்வேர் பேட்டரியின் கையிருப்பு, அது எவ்வளவு நேரம்/ தூரம் செயல்படும். பேட்டரியை மாற்ற சரியான நேரம் எது என்பனவற்றை இந்த ஆப்பே சரியாக கணித்து தகவல்களை வழங்கும்.

எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம்; சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

தற்போது சன் மொபிலிட்டி நிர்வாகம் கார்களுக்கு மட்டும் அல்லாமல் பைக்குகள், ஆட்டோக்கள், பஸ்கள் ஆகியவற்றிற்கு இந்த பேட்டரிகளை பொருத்தும் வண்ணம் இதை டிசைன் செய்துள்ளது. இந்த திட்டம் சிறப்பாக இருந்தாலும் இதை வெற்றி என்பது இதை பல்வேறு இடங்களில் நிறுவுவது தான். எவ்வளவு அதிக இடங்களில் நிறுவப்படுகிறதோ அவ்வளவு வெற்றியை இந்த திட்டம் பெறும்.

எலெக்ட்ரிக் காரில் இந்தியாவையே சுற்றலாம்; சன் மொபிலிட்டி - மைக்ரோசாஃப்ட் கூட்டணியால் புதிய வாய்ப்பு

இந்தியா முழுவதும் இந்த குவிக் இன்டர்சேஞ்சிங் ஸ்டேஷன்கள் வந்து விட்டால் இனி எலெக்ட்ரிக் காரிலேயே இந்தியா முழுவதும் பெட்ரோலுக்கு ஆகும் செலவை விட குறைந்த செலவிலேயே சுற்ற அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. அடேங்கப்பா..! 4x4 கார்களில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?
  2. செப்டம்பரில் அறிமுகமாகிறது புதிய மஹிந்திரா எம்பிவி கார்!!
  3. இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...
  4. பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளின் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!!
  5. வரும் 2019 ஜன.,15 முதல் ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டாது, சொட்டை விழாது; மத்திய அரசு புதிய உத்தரவு
Most Read Articles
English summary
Sun Mobility partners with Microsoft for new electric vehicle. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X