பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளின் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!!

அடுத்த வாரம் முதல் இந்த பைக்குகளின் டெலிவிரி துவங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முன்பதிவு செய்தவர்களின் வரிசை கிரமமப்படி டெலிவிரி கொடுக்கப்பட இருப்பதாக பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவன

By Saravana Rajan

அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய ஆரம்ப ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் டெலிவிரி கொடுக்கும் பணிகள் குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது. ஆவலோடு காத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்களின் கைகளில் இந்த பைக்குகள் எப்போது தவழ வருகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளின் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் மிக குறைவான விலை மாடல்களாக ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்கள் கடந்த 18ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் ரூ.2.99 லட்சத்திலும், ஜி 310ஜிஎஸ் என்ற சாகச ரக பைக் மாடல் ரூ.3.49 லட்சத்திலும் விற்பனைக்கு வந்தன. ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய எஞ்சினுடன் வந்த இந்த பைக்குகளின் விலை சற்றே அதிகம் என்ற கருத்தும் இருந்தது.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளின் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!!

ஆனால், பிஎம்டபிள்யூ என்ற பிரிமியம் பிராண்டுக்கான மதிப்புக்காக இந்த பைக்குகளுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் நல் ஆதரவு தந்துள்ளனர். இதுவரை 1,000 வாடிக்கையாளர்களுக்கு மேல் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு இந்த பைக்குகளின் டெலிவிரி எப்போது துவங்க இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளின் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!!

அடுத்த வாரம் முதல் இந்த பைக்குகளின் டெலிவிரி துவங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முன்பதிவு செய்தவர்களின் வரிசை கிரமமப்படி டெலிவிரி கொடுக்கப்பட இருப்பதாக பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளின் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!!

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் ஆகிய பைக்குகளில் 313சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின்தான் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளின் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!!

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் அதிகபட்சம் மணிக்கு 145 கிமீ வேகம் வரையிலும், பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ் பைக் மணிக்கு 143 கிமீ வேகம் வரையிலும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்குகள் லிட்டருக்கு சராசரியாக 30 கிமீ மைலேஜ் தரும் என்பது டீலர்களின் தரப்பு தகவலாக இருக்கிறது. நடைமுறையில் இன்னும் சற்றே குறையலாம்.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளின் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!!

இந்த பைக்குகளின் முன்புறத்தில் 41மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. சாகச பைக் மாடலாக வந்துள்ள ஜி 310ஜிஎஸ் பைக்கில் முன்புறத்தில் லாங் டிராவல் ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளின் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!!

இரண்டு பைக்குகளிலும் முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இரண்டு பைக்குகளிலுமே டியூவல் சேனல் எனப்படும் இரண்டு சக்கரங்களுக்குமான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர், ஜி 310ஜிஎஸ் பைக்குகளின் டெலிவிரி விரைவில் துவங்குகிறது!!

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் கேடிஎம் ட்யூக் 390, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் கவாஸாகி நின்ஜா 300 பைக்குகளுடன் போட்டி போடும். பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ் பைக் மாடலானது கவாஸாகி வெர்சிஸ் எக்ஸ்-300 பைக்குடன் நேரடியாக போட்டி போடும்.

Most Read Articles
English summary
BMW has now stated that the deliveries of the two motorcycles will begin from next week.
Story first published: Monday, July 23, 2018, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X