டாடா, மாருதிக்கு எமனாக மாறும் ஹூண்டாயின் புது கார்! 1 லட்சம் பேர் கண்ண மூடிட்டு புக்கிங் பண்ணியிருக்காங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் வெனியூ காரின் புதிய தலைமுறை மாடல், கடந்த 2025ம் நவம்பர் மாத தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. ஆனால் அதற்குள்ளாகவே புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரை 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் முன்பதிவு (Bookings) செய்து விட்டனர். ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதன் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில், புதிய வேரியண்ட் (Variant) ஒன்றை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அது HX8 டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஆகும். இதன் விலை 13.70 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை கப்பா 1.0 லிட்டர் GDi டர்போ பெட்ரோல், கப்பா 1.2 லிட்டர் MPi நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் U2 1.5 லிட்டர் CRDi டீசல் ஆகியவை ஆகும்.

அதே நேரத்தில் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன. அத்துடன் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகளையும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ கொண்டுள்ளது.
மேலும் பாஸ் பிரீமியம் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் ஸ்மார்ட் கீ போன்ற வசதிகளும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் (Safety Features) பஞ்சம் இல்லை.
இந்த காரின் பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், 16 வசதிகள் உடன் கூடிய லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அத்துடன் 4 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், ஆட்டோ ஹோல்டு உடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை 8 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.69 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான், ஹூண்டாய் வெனியூ காருக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது இந்திய சந்தையில், டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சொனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








