செப்டம்பரில் அறிமுகமாகிறது புதிய மஹிந்திரா எம்பிவி கார்!!

வரும் செப்டம்பரில் புதிய மஹிந்திரா எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா யு321 என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய எம்பிவி கார் குறிப்பிடப்படுகிறது.

By Saravana Rajan

மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து புதிய எம்பிவி ரக காரை மஹிந்திரா விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த கார் வரும் செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

செப்டம்பரில் அறிமுகமாகிறது புதிய மஹிந்திரா எம்பிவி கார்!!

தற்போது மஹிந்திரா யு321 என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய எம்பிவி கார் குறிப்பிடப்பட்டு வருகிறது. அறிமுகம் செய்வதற்கு முதல் வாரத்தில் இந்த காரின் புதிய பெயரை வெளியிடுவதற்கு மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செப்டம்பரில் அறிமுகமாகிறது புதிய மஹிந்திரா எம்பிவி கார்!!

தற்போது மஹிந்திரா யு321 கார் தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் வைத்து இப்போது இறுதிக் கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன. எனவே, அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த காரின் முழுமையான தயாரிப்பு நிலை மாடல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பரில் அறிமுகமாகிறது புதிய மஹிந்திரா எம்பிவி கார்!!

தற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திரா ஸைலோ காரைவிட உருவத்தில் பெரியதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திராவின் பாரம்பரிய டிசைன் அம்சங்கள் க்ரில் முதல் டெயில் லைட் க்ளஸ்ட்டர் வரை பிரதிபலிக்கிறது.

செப்டம்பரில் அறிமுகமாகிறது புதிய மஹிந்திரா எம்பிவி கார்!!

புராஜெக்டர் ஹெட்லைட்டுகள், அலாய் வீல்கள், எல்இடி விளக்குகள் என பிரிமியம் அம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவைவிட குறைவான விலையில் வர இருக்கிறது. எனவே, எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது.

செப்டம்பரில் அறிமுகமாகிறது புதிய மஹிந்திரா எம்பிவி கார்!!

உட்புறத்திலும் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் ஏசி, மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட பல வசதிகளை எதிர்பார்க்கலாம். எல்லாவற்றையும் விட மிகச் சிறப்பான, சவுகரியமான இடவசதியை பயணிகளுக்கு அளிக்கும்..

செப்டம்பரில் அறிமுகமாகிறது புதிய மஹிந்திரா எம்பிவி கார்!!

இந்த புதிய எம்பிவி காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டுமே புத்தம் புதிய எஞ்சின்களாக உருவாக்கப்பட்டு இந்த காரில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

செப்டம்பரில் அறிமுகமாகிறது புதிய மஹிந்திரா எம்பிவி கார்!!

இந்த காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. இந்த காரின் புதிய எஞ்சின்கள் மிகச் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும்.

செப்டம்பரில் அறிமுகமாகிறது புதிய மஹிந்திரா எம்பிவி கார்!!

டாடா ஹெக்ஸா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய கார்களுக்கு இணையான அம்சங்களுடன் வர இருக்கிறது. மாருதி எர்டிகாவுக்கு இணையான ரகத்தில் இல்லாவிட்டாலும், 7 சீட்டர் கார் மார்க்கெட்டில் எர்டிகா மார்க்கெட்டையும் குறிவைத்து விலை நிர்ணயம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

செப்டம்பரில் அறிமுகமாகிறது புதிய மஹிந்திரா எம்பிவி கார்!!

இந்த பண்டிகை கால ரிலீசில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாடலாக புதிய மஹிந்திரா எம்பிவி காரை கூற முடியும். செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து மஹிந்திரா விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது.

Source: CarAndBike

More from DriveSpark

Article Published On: Monday, July 23, 2018, 14:52 [IST]
English summary
Rumour: Mahindra U321 MPV Launch In September.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+