இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

உலகில் உள்ள மிகப்பெரிய டூவீலர் மார்க்கெட் இந்தியாதான். தனி சிறப்பு வாய்ந்த ஒரு சில பைக்குகள்தான், இந்திய டூவீலர் மார்க்கெட்டை செவ்வனே செதுக்கின.

By Arun

உலகில் உள்ள மிகப்பெரிய டூவீலர் மார்க்கெட் இந்தியாதான். தனி சிறப்பு வாய்ந்த ஒரு சில பைக்குகள்தான், இந்திய டூவீலர் மார்க்கெட்டை செவ்வனே செதுக்கின. இதனால் இன்று இந்திய டூவீலர் மார்க்கெட்டில், தரமான பல பைக்குகள் கிடைக்கின்றன. அப்படி இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த சிறப்பு வாய்ந்த பைக்குகள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

ஹூரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor)

இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பைக்குகளில் ஒன்று ஸ்பிளெண்டர். இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே அதிகம் விற்பனையான பைக்குகள் பட்டியலிலும் ஸ்பிளெண்டர் கம்பீரமாக இடம்பிடிக்கிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஸ்பிளெண்டர், 1994ம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

இந்தியாவில் 2 ஸ்ட்ரோக் பைக்குகள் (two-stroke) கொடி கட்டி பறந்த காலம் அது. 2 ஸ்ட்ரோக் ஆதிக்கம் நிறைந்த மார்க்கெட்டை தனி ஒருவனாக, 4 ஸ்ட்ரோக் (four-stroke) மார்க்கெட்டாக மாற்றிய பெருமை, ஸ்பிளெண்டர் பைக்கையே சாரும்.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

ஸ்பிளெண்டர் பைக் மிக சிறப்பான முறையில் இன்றளவும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பைக்கை பராமரிப்பதும் மிக மிக எளிதானதுதான். இந்திய டூவீலர் மார்க்கெட்டின் மிகப்பெரிய கேம் சேஞ்சர் என்றால், நிச்சயமாக அது ஸ்பிளெண்டர்தான்.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

யமஹா ஆர்டி 350 (Yamaha RD 350)

இந்தியாவின் முதல் உயர் செயல்திறன் (high-performance) பைக் என்றால், அது ஆர்டி 350தான். இதன் 346 சிசி, டிவின் சிலிண்டர், 2 ஸ்ட்ரோக் இன்ஜின், லோ டார்க் (low torque) வேரியண்ட்டில் 28 பிஎச்பி பவரையும், ஹை டார்க் வேரியண்ட்டில் (high torque variant) 32 பிஎச்பி பவரையும் வழங்கும்.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் முதல் உயர் செயல்திறன் பைக் என்ற பெருமையுடன் சேர்த்து, இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட முதல் டிவின் சிலிண்டர் பைக் என்ற பெருமையையும் யமஹா ஆர்டி 350 பெறுகிறது.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

யமஹா ஆர்எக்ஸ் 100 (Yamaha RX100)

பெர்ஃபார்மென்ஸை எதிர்பார்த்தவர்கள் மத்தியில், 2 ஸ்ட்ரோக் பைக்குகளை மிகவும் பிரபலப்படுத்தியது யமஹா ஆர்டி 350 பைக்தான். அதே நேரத்தில் யமஹா நிறுவனத்தின் மற்றொரு பைக்கான ஆர்எக்ஸ் 100, 2 ஸ்ட்ரோக் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளை மிகவும் மலிவானதாக மாற்றியது என்றால் மிகையல்ல.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

யமஹா ஆர்எக்ஸ் 100 பைக், 98.2 சிசி, 2 ஸ்ட்ரோக் இன்ஜின் உடன் விற்பனைக்கு வந்தது. இந்த இன்ஜின் 11 பிஎச்பி பவரை வெளிப்படுத்தி, சாலைகளில் சீறிப்பாயும் திறன் கொண்டதாக இருந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 100 கிலோ மீட்டர்களுக்கும் மேல். இதன் எடை வெறும் 96 கிலோ மட்டுமே.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

ராயல் என்பீல்டு புல்லட் (Royal Enfield Bullet)

ராயல் என்பீல்டு புல்லட், கடந்த 1931 முதல் உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும் ராயல் என்பீல்டு லைன் அப்பில், இன்றளவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றாக திகழ்கிறது. ஆரம்பத்தில் இந்தியாவிற்கு இறக்குமதியாகி கொண்டிருந்த புல்லட்டை, பின்னர் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய தொடங்கியது.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

ஹூரோ சிபிஇஸட் (Hero CBZ)

முதல் ஸ்போர்ட்டி 4 ஸ்ட்ரோக் மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை ஹூரோ சிபிஇஸட் பெறுகிறது. ஹூரோ சிபிஇஸட் லான்ச் செய்யப்பட்ட நேரத்தில்தான், இந்திய டூவீலர் மார்க்கெட் 2 ஸ்ட்ரோக்கில் இருந்து 4 ஸ்ட்ரோக்கிற்கு மெல்ல மெல்ல மாறி கொண்டிருந்தது.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

இந்த பைக்கில், 156 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 12.6 பிஎச்பி பவரை வழங்கவல்லது. இந்தியாவில் அதிகம் பேரை கவர்ந்த 4 ஸ்ட்ரோக் பைக் என்ற பெருமையையும் சிபிஇஸட் பெறுகிறது.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

ஹூரோ கரிஸ்மா (Hero Karizma)

ஹூரோ கரிஸ்மா 2003ம் ஆண்டில் லான்ச் செய்யப்பட்டது. அப்போதே அதன் விலை 1 லட்ச ரூபாய். ஆனால் ஸ்போர்ட்டி லுக், உயர்தரமான செயல்திறனை எதிர்பார்த்தவர்களின் மத்தியில், ஹூரோ கரிஸ்மா பைக் மிகவும் பிரபலமாகவே விளங்கியது.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

முதல் டூரிங் ப்ரெண்டலி செமி ஃபேர்டு 4 ஸ்ட்ரோக் மோட்டார் சைக்கிள் என்றாலும், அது ஹூரோ கரிஸ்மாதான். இந்த பைக்கின் 223 சிசி இன்ஜின், அதிகப்படியான பவரை வழங்கியது. ஹூரோ கரிஸ்மா பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 126 கிலோ மீட்டர்கள்.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

பஜாஜ் பல்சர் 180 (Bajaj Pulsar 180)

ஹூரோ கரிஸ்மா அதிக பவர்ஃபுல்லான மோட்டார் சைக்கிளாக இருந்த நேரத்தில், பஜாஜ் பல்சர் 180 பைக்கும் அதே அளவிலான செயல்திறனை வழங்கியது. பஜாஜ் பல்சர் 180தான், இந்தியாவின் முதல் மலிவான பெர்ஃபார்மென்ஸ் சார்ந்த 4 ஸ்ட்ரோக் மோட்டார் சைக்கிள்.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

ராயல் என்பீல்டு தண்டர்பேர்ட் (Royal Enfield Thunderbird)

ராயல் என்பீல்டு தண்டர்பேர்ட் பைக், கடந்த 2002ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் க்ரூய்ஸர் பைக் என்றால், அது ராயல் என்பீல்டு தண்டர்பேர்ட்தான். ஆரம்பத்தில், 350 சிசி AVL இன்ஜின் உடன் ராயல் என்பீல்டு தண்டர்பேர்ட் பைக் வந்தது.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

ஆனால் பின்னாளில் அதற்கு பதிலாக UCE மோட்டார் ரீப்ளேஸ் செய்யப்பட்டது. அத்துடன் பெரிய 500 சிசி மோட்டாரையும் தண்டர்பேர்ட் பெற்றது. இந்தியாவில் க்ரூய்ஸர் மோட்டார் சைக்கிள்களை பிரபலமாக்கிய பெருமை, ராயல் என்பீல்டு தண்டர்பேர்ட்டையே சாரும்.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan)

இந்தியாவின் முதல் அட்வென்ஜர் பைக் என்ற பெருமையை ராயல் என்பீல்டு ஹிமாலயன் பெறுகிறது. இந்த பைக்கில், 411 சிசி, லாங் ஸ்ட்ரோக், 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 24.5 பிஎச்பி பவர், 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

இந்திய டூவீலர் மார்க்கெட்டை கட்டமைத்த பைக்குகள்... இந்த பைக்குகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்...

கேடிஎம் டியூக் 390 (KTM Duke 390)

உலகத்தரம் வாய்ந்த பெர்ஃபார்மென்ஸ் மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான விலையுடன் வந்த பைக் கேடிஎம் டியூக் 390. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 373.3 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 43 பிஎச்பி பவர் மற்றும் 37 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
10 Motorcycles that have Shaped Indian Bike Market. Read in tamil
Story first published: Monday, July 23, 2018, 13:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X