பிரபல சிமெண்ட் கம்பெனியின் முதல் கார்! சீனா காரை அப்படியே கொண்டுவருவது தான் திட்டமா!

இந்தியாவின் மிக பெரும் தனியார் குழுமங்களுள் ஒன்றான ஜே.எஸ்.டபிள்யூ (JSW), சீனாவை சேர்ந்த SAIC குழுமத்தின் கீழ் செயல்படும் பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார் (MG Motor) உடன் இணைந்து செயல்பட ஆரம்பித்த பிறகு இந்திய கார்கள் மார்க்கெட்டில் புதிய புரட்சியை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக, எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் இந்த கூட்டணி நிறுவனம் முனைப்புக் காட்டி வருகிறது.

இதனால், இந்த இரு நிறுவனங்கள் இணைந்து இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் மேலும் பல புதிய புரட்சிகளை நிகழ்த்த உள்ளன என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம் தனியாகவும் கார்கள் விற்பனையில் ஈடுப்பட ஆரம்பித்துள்ளது. இதற்கு அந்த நிறுவனம் உதவிக்கு அழைத்து இருக்கும் நிறுவனம், செர்ரி என அழைக்கப்படும் செவ்ரோலெட்(Chevrolet) ஆகும்.

jsw cherry jetour t2 plug-in hybrid car patent

மேலும், இதற்காக ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் என தனியாக இரு நிறுவனத்தை துவங்கவிருக்கும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் செவ்ரோலெட்டின் உதவியுடன் மார்க்கெட்டிற்கு கொண்டுவர உள்ள முதல் காரின் டீசரை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் செய்தித்தாளில் வெளியிட்டது. இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ ஒரு முக்கியமான நிறுவனம் என்பதால், அதன் முதல் கார் என்பதினாலேயே இந்த டீசர் பலத்த கவனத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஜேடூர் டி2 (Jetour T2) என்கிற பெயரில் பிளக்-இன் ஹைப்ரீட் (Plug-in Hybrid) கார் ஆக கொண்டுவரப்படும் இதன் வடிவமைப்பிற்கான காப்புரிமையை ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் பெற்றுள்ளது. இதற்கான அனுமதியை கேட்டு கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில், அதற்கான உரிமம் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் கிடைத்துள்ளது.

jsw cherry jetour t2 plug-in hybrid car patent

இதுதொடர்பான ஆவணம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பார்க்கும்போது, ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸின் ஜேடூர் டி2 நாம் எதிர்பார்ப்பதை போலவே பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் வர உள்ளது. இதனால், இந்த பிளக்-இன் ஹைப்ரீட் கார் பார்ப்பதற்கு லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) கார் போன்று இருக்கும்.

பெட்டகம் வடிவிலான தோற்றம் என்பதால், அதற்க்கேற்ப செவ்வக வடிவ ஹெட்லைட்கள், கருப்பு நிற கிரில் மற்றும் முரட்டுத்தனமான வடிவம் கொண்ட பம்பர் உள்ளிட்டவற்றை முன்பக்கத்தில் எதிர்பார்க்கலாம். காரின் பக்கவாட்டில் சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள், வழக்கமான டிசைனிலான கதவு கைப்பிடிகள், ரன்னிங் போர்ட்ஸ், டர்ன் இண்டிகேட்டர்கள் உடன் செவ்வக வடிவ ORVMs, ரூஃப் ரெயில்கள் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா உள்ளிட்டவை இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் காப்புரிமை படத்தில் காரில் அலாய் சக்கரங்களின் டிசைன் ஆனது சீனாவில் விற்பனையில் உள்ள செர்ரி ஜேடூர் டி2 காரில் உள்ளதை போன்றே இருக்கிறது. பின்பக்கத்தில் டெயில்லைட்கள் செங்குத்தான டிசைனிலும், டி2 பேட்ஜ் உடன் தட்டையான பின்பக்க கதவும் மற்றும் ஸ்போர்டியான டிசைனிலான பம்பரும் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

பின்பக்கத்தில் டெயில்கேட் முழுவதும் மறைக்கப்பட்ட ஸ்பேர் சக்கரத்துடன் இடம்பெறவுள்ளது. காருக்கு உள்ளே 15.6-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் இண்டெலிஜென்ட் வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை வெளிநாட்டு சந்தைகளில் கொண்டுள்ளது. மேலும், லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம், பிரீமியம் 12-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்டவையும் இந்தியாவில் ஜேடூர் டி2 காரில் வழங்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீன ஆட்டோமொபைல் குழுமத்தின் கீழ் செயல்படும் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்ததன் மூலம் சீனாவில் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்துகிறது. அதன் வெளிப்பாடே, சீனாவை சேர்ந்த செவ்ரோலெட் நிறுவனத்தின் காரை இந்தியாவிற்கு ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் கொண்டு வருவதாகும். இந்தியாவில் இந்த ஹைப்ரீட் காருக்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்டு இருப்பினும், அதே பெயரில் இந்தியாவிற்கு இந்த கார் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, March 5, 2026, 12:43 [IST]
English summary
Jsw motors received patent for jetour t2 plug in hybrid car in india check all details here
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+