முதல்முறையாக கார் வாங்கும்போதுதான் நிறைய பேர் இந்த தவறு செய்றாங்க! கார் மட்டும் வாங்குனா பத்தாது!

கார் வாங்குவது என்பது நம்மில் நிறைய பேருக்கு வாழ்நாள் இலட்சியம் ஆகும். சொந்த பணத்திலோ அல்லது கடனுதவி பெற்றாவதோ எப்படியாவது கார் ஒன்றை வாங்கிவிட வேண்டும் மனம் அள்ளாடும். அந்த அளவிற்கு, இன்றைய மாடர்ன் உலகில் வீட்டிற்கு குறைந்தப்பட்சம் ஒரு கார் ஆவது அவசியமாகிவிட்டது. ஆனால், நம்மில் பலர் முதல்முறையாக கார் வாங்கும்போது, அதனுடன் சேர்த்து, செலவோடு செலவாக என்னென்ன ஆக்ஸஸரீகள் (Accessories)-ஐ வாங்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம். முதல்முறையாக கார் வாங்குபவர்களுக்கு அத்தியாவசியமான அத்தகைய ஆக்ஸஸரீகளுள் முக்கியமானவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டாஷ்கேம் (Dashcam): இந்த 2026ஆம் காலக்கட்டத்தில் காரில் இருக்க வேண்டிய மிகவும் அத்தியாவசியமான ஆக்ஸஸரீ இதுவாகும். மோசடி வழிப்பறிப்புகளை தடுத்து, பல நீதிமன்ற வழக்குகளில் டாஷ்கேமில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் முக்கிய சாட்சியாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. எதிர்பாராத விபத்துகளின்போது இன்ஸ்சூரன்ஸ் (Insurance) பணத்தை விரைவாக பெற்றுத்தரவும் இது பயன்படுகிறது.

must-have car accessories

அவசரகால உபகரணங்கள்: இப்போதுதான் காரை ஓட்ட ஆரம்பித்துள்ளீர்கள் என்றால், காரை பற்றியும், அதன் மெக்கானிசத்தை பற்றியும் பெரிய அளவில் தெரியாமல் போகலாம். ஆதலால், அவசர காலத்திற்கு காரில் எப்போதும் சார்ஜ் காலியான பேட்டரிகளை மற்ற வாகனங்களில் இருந்து சார்ஜ் செய்ய ஜம்பர் கேபிள்கள் (Jumper Cables), காரின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியேற சுத்தியல், கார் சாலையில் இயங்காமல் திடீரென நிற்கும்போது நேரத்தில் வேறு எந்த வாகனமும் உங்களது கார் மீது மோதிவிடாமல் இருக்க ஒளி எதிரொலிப்பான் உள்ளிட்டவை காரில் இருக்க வேண்டியது அவசியம்.

must-have car accessories

முதலுதவி பெட்டி: அவசர மருத்துவ உதவி எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம் என்பதால் பேண்டேஜ்கள் (Bandages), ஆண்டி-செப்டிக் (Antiseptic) திரவம் மற்றும் அடிப்படை வலி நிவாரணி உள்ளிட்டவை அடங்கிய முதலுதவி பெட்டி காரில் இருத்தல் வேண்டும். அடிக்கடி முடியவில்லை என்றாலும், அவ்வப்போது முதலுதவி பெட்டியில் தேவையானவை இருப்பு உள்ளதா என்பதை செக் செய்துக் கொள்ளவும்.

தீ அணைப்பான்: கார் என்ஜினில் இருந்து புகை கசிவது மற்றும் மின்கசிவுகள் பல காரணிகளால் ஏற்படுகின்றன. அவற்றை பெரிய தீ விபத்தாக மாற்றாமல் தடுக்க குறைந்தப்பட்சம் சிறிய அளவிலாவது தீ அணைப்பான் அவசியமாகும். அதுமட்டுமின்றி, அந்த தீ அணைப்பான் உங்களது காருக்கு மட்டும்தான் தேவைப்படும் என்றில்லை, பயணத்தின்போது வழிநெடுகிலும் எங்கு வேண்டுமென்றாலும் தேவைப்படலாம்.

must-have car accessories

டயர் காற்று வழங்கி & பஞ்சர் பழுது பார்ப்பதற்கான கிட்: பயணத்தின்போது டயரில் காற்று குறைந்தாலோ அல்லது பஞ்சர் ஆகினாலோ அதனை சமாளிக்க டயருக்கு காற்றை வழங்கும் மெஷின் காரில் எப்போதும் இருக்க வேண்டும். பஞ்சர் பெரியதாக இருந்தால், அதனை சரிச்செய்ய பஞ்சர் ரிப்பேர் கிட்டும் காரில் இருத்தல் அவசியம்.

அடிப்படை மெக்கானிக்கல் உபகரணங்கள்: ஸ்க்ரூடிரைவர் (Screwdriver), கட்டிங் பிளேடு (Cutting Blade), மின்சாரம் வருவதை காட்டும் டெஸ்டர் (Tester) உள்ளிட்டவை காரினுள் செய்ய வேண்டி இருக்கும் சிறிய அட்ஜெஸ்மெண்ட்களை செய்யவும், தளர்வடையும் போல்ட்களை இறுக்கமாக்கவும் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும். அதுபோல், மென்மையான துணி மற்றும் ஸ்பான்ச் ஒன்று காரில் இருப்பதும் நல்லது.

உட்புற கேபின் ஆக்ஸஸரீஸ்: அனைத்து வானிலைக்கும் ஆன 3டி அல்லது ரப்பர் மேட்கள் காரில் உற்பத்தி நிறுவனத்தால் வழங்கப்படும் கார்பெட்டை தூசி, சகதி மற்றும் நீரில் இருந்து பாதுகாக்கும். இதனுடன், பிளாஸ்டிக் அல்லது துணியால் ஆன சீட் கவர்கள், ஸ்மார்ட்போனை பொருத்தும் ஹேங்கர், பல முனைகளை கொண்ட கார் சார்ஜர், சூரிய ஒளியை காருக்குள் வராமல் தடுத்து நிறுத்தும் சன்ஷேட் உள்ளிட்டவற்றையும் கூடுதல் ஆக்ஸஸரீயாக வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கூடுதல் ஆக்ஸஸரீ என்பது காரின் விலையில் இல்லாமல், தனியாக கூடுதல் தொகையை செலுத்தி பெறுபவை ஆகும். இருப்பினும், இந்த தொகுப்பில் கூறப்பட்டுள்ளவை எல்லாம் சில ஆயிர ரூபாய்களில் பெறக்கூடியவை. நீங்கள் வாங்கும் காருக்கு ஏற்றவை எவை என்பதை பார்த்து வாங்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. முக்கியமாக முதல்முறையாக கார் வாங்குபவர்கள் தங்களது காருடனான பிணைப்பை பலப்படுத்திக் கொள்ள இவை உதவும்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 8, 2026, 5:00 [IST]
English summary
Must have car accessories that every first time buyer in india needs
மேலும்... #car accessories #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X