எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் லித்தியம் இயான் பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசு குறைத்துள்ளது.

By Balasubramanian

எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் லித்தியம் இயான் பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசு குறைத்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு வர அரசு இந்த நடவடிக்கைய எடுத்துள்ளது. இதனால் இந்தியாவில் விற்பனையாகும் மற்றும் விற்பனைக்கு வரவுள்ள எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

இந்தியாவில் கடந்தாண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை அமலுக்கு கொண்டு வந்தது. அதற்காக ஜிஎஸ்டி வரியை முடிவு செய்யும் கமிட்டி ஒருங்கிணைக்கப்பட்டு அந்த கமிட்டி மூலம் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்பதை முடிவு செய்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

மக்கள் மத்தியில் அதிகம் வாங்கப்படும் பொருட்கள் என்ன? அதில் அத்தியாவசியம் எது? ஆடம்பரம் எது? சாரியாக விற்பனையாகும் பொருட்கள் என்ன அதன் மதிப்பு எவ்வளவு, அதன் மூலம் வேலை வாய்ப்பை பெறுபவர்கள் என்பதை கணக்கில் கொண்டு அந்த பொருளுக்கான வரிவிதிப்பை அந்த கமிட்டி தீர்மானிக்கிறது,.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

ஒவ்வொரு முறை கமிட்டி கூடும்போது ஜிஎஸ்டி கட்டப்ட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் பணபரிவர்த்தனை குறித்த ஆவண சர்மிப்பை வைத்து ஒவ்வொரு பொருளுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பு மாற்றம் பெறுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

இதுவரையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பொருத்தப்படும் லித்தியம் இயான் பேட்டரிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக ஊக்குவித்து வரும் சூழ்நிலையில் மக்கள் மத்தியில் அதை வாங்குவதற்கு தயக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

அந்த தயக்கத்திற்கு அந்த காரின் விலையும் மிக முக்கிய காரணம். சாதாரண காரை விட எலெக்ட்ரிக் கார்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அதை அவ்வளவாக விருப்பவில்லை.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கண்டிப்பாக குறைத்தே ஆக வேண்டிய சூழ்நிலை அரசிற்கு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது தான் பெட்ரோல் டீசலுக்கான தேவையை குறைக்க முடியும். அதே சூழ்நிலையில் எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிகபட்ச செலவே அதில் பொருத்தப்படும் பேட்டரி தான்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

இதையடுத்து எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை ஊக்கு விக்கும் பொருட்டு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான லித்தியம் இயான் பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்துள்ளது. சுமார் 10 சதவீதம் வரை இதன் வரி குறைக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர் வாகன தயாரிப்பார்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் கார்களை பொருத்தவரை டாடாமோட்டார்ஸ், மஹிந்திரா எலெக்ட்ரிக், ஆகிய நிறுவனங்கள் டாடா டியாகோ, மஹிந்திரா இவென்டோ மஹிந்திரா இ2ஓ பிளஸ் ஆகிய கார்களை தயாரித்து வருகினற்னறர்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

தற்போது இந்த ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவிலேயே இந்த ரக பேட்டரிகளை தயாரிக்க ஊக்கு விக்கும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகளுக்கு 10 சதவீத இறக்குமதி வரி தான் இருந்தது. கடந்த 2018 பட்ஜெட்டில் தற்கான வரியை 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

தற்போது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் லித்தியம் இயான் பேட்டரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் தான் எலெக்டரிக் வாகனங்களை அதிக அளவிற்கு தயாரிக்க முடியும் என்ற நிலையில் இருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

தற்போது இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் லித்தியம் இயான் பேட்டரிகளுக்கு ஒரு கிலோவாட்டிற்கு இவ்வளவு என்று வெளிநாட்டு நிறுவனங்கள் வசூலிக்கிறது. இந்தியாவை பொருத்தவரை எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு கிலோ வாட் பேட்டரியை 225-250 அமெரிக்க டாலர் வரை மதிப்பிட்டு வாங்குகின்றனர்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

இதன் விலை கடந்த 8 ஆண்டுகளில் பல மடங்கு குறைந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இதன் விலை ஒரு கிலோ வாட் பேட்டரி 1000 அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனையானது தற்போது 250 அமெரிக்க டாலர் விலையில் விற்பனையாகிறது. இந்த பேட்டரிகள் வரும் 2026ம் ஆண்டு 100 டாலராக குறைக்கப்படும் என கூறப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைகிறது; பேட்டரிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு

பொதுவாக பேட்டரிகள் மீது அதை தயாரிக்கும் நிறுவனம் அதிகபட்ச லாபத்தை வைத்திருக்கிறார்கள் இவை தான் இந்த பேட்டரிகளின் விலையை இவ்வளவு அதிகமாக கொண்டு சென்றுள்ளது. இதனால் இந்தியாவில் இந்த பேட்டரி தயாரிப்பை ஊக்கு விக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
English summary
GST On Batteries For Electric Cars Reduced From 28 To 18 Per Cent. Read in Tamil
Story first published: Monday, July 23, 2018, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X