CD 110 ட்ரீம் DX பைக்கின் புதிய எடிசனை லான்ச் செய்தது ஹோண்டா.. குறி வைப்பது இவர்களைதான்..

CD 110 ட்ரீம் DX பைக்கின் 2018ம் ஆண்டு எடிசனை ஹோண்டா நிறுவனம் லான்ச் செய்துள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Arun

CD 110 ட்ரீம் DX பைக்கின் 2018ம் ஆண்டு எடிசனை, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இன்று லான்ச் செய்தது. இதன் விலை 48,272 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

CD 110 ட்ரீம் DX பைக்கின் புதிய எடிசனை லான்ச் செய்தது ஹோண்டா.. குறி வைப்பது இவர்களைதான்..

CD 110 ட்ரீம் DX பைக்கின் புதிய எடிசன், கவர்ச்சிகரமான கோல்டு கிராபிக்ஸ், க்ரோம் மப்ளர் ப்ரொடெக்டர் ஆகியவற்றுடன் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹெவி டியூட்டி ரியர் கேரியரும் (லக்கேஜ் கேரியர்) இடம்பெற்றிருப்பதாக ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.

CD 110 ட்ரீம் DX பைக்கின் புதிய எடிசனை லான்ச் செய்தது ஹோண்டா.. குறி வைப்பது இவர்களைதான்..

இந்த பைக்கின் நீளமான இருக்கை மற்றும் வீல் பேஸ் ஆகியவை சௌகரியமான பயணத்தை உறுதி செய்கின்றன. அதே நேரத்தில், வலுவான மற்றும் நீண்ட நெடுங்காலம் உழைக்க கூடிய சஸ்பென்ஸன், மன அழுத்தம் இல்லாத சுகமான பயணத்திற்கு வழிவகை செய்யும்.

CD 110 ட்ரீம் DX பைக்கின் புதிய எடிசனை லான்ச் செய்தது ஹோண்டா.. குறி வைப்பது இவர்களைதான்..

ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட மாற்றங்கள் தவிர மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் இந்த பைக்கில் செய்யப்படவில்லை. வழக்கமான 109.19 சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் புதிய எடிசனிலும் பொருத்தப்பட்டுள்ளது.

CD 110 ட்ரீம் DX பைக்கின் புதிய எடிசனை லான்ச் செய்தது ஹோண்டா.. குறி வைப்பது இவர்களைதான்..

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.42 பிஎஸ் பவரையும், 9.09 என்எம் டார்க் திறனையும் 5,000 ஆர்பிஎம்மில் வழங்கவல்லது. CD 110 ட்ரீம் DX பைக்கில் பொருத்தப்பட்டுள்ள HET (Honda Eco Technology) இன்ஜின், சக்தி மற்றும் மைலேஜ் ஆகியவற்றுக்கு இடையேயான பேலன்ஸை உருவாக்கும்.

CD 110 ட்ரீம் DX பைக்கின் புதிய எடிசனை லான்ச் செய்தது ஹோண்டா.. குறி வைப்பது இவர்களைதான்..

புதிய வெர்ஷன் குறித்து, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் மூத்த துணை தலைவர் யாத்விந்தர் சிங் குலேரியா கூறுகையில், ''புகழ்பெற்ற CD பிராண்டு, 1966 முதல் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்று வருகிறது'' என்றார்.

CD 110 ட்ரீம் DX பைக்கின் புதிய எடிசனை லான்ச் செய்தது ஹோண்டா.. குறி வைப்பது இவர்களைதான்..

யாத்விந்தர் சிங் குலேரியா மேலும் கூறுகையில், ''அந்த மரபில் இருந்து வரும் 2018 CD 110 ட்ரீம் DX பைக்கும், அதே அளவிலான நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை வழங்கும். இந்த புதிய எடிசனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்'' என்றார்.

CD 110 ட்ரீம் DX பைக்கின் புதிய எடிசனை லான்ச் செய்தது ஹோண்டா.. குறி வைப்பது இவர்களைதான்..

பஜாஜ் பிளாட்டினா கம்போர்டெக் (47,405 ரூபாய்), யமஹா சல்யூட்டோ RX (48,721 ரூபாய்) மற்றும் ஹீரோ HF டீலக்ஸ் (44,000 ரூபாய்) உள்ளிட்ட பைக்குகளுடன் CD 110 ட்ரீம் DX போட்டியிடும். அடைப்பு குறிக்குள் வழங்கப்பட்டுள்ள அனைத்தும், டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

CD 110 ட்ரீம் DX பைக்கின் புதிய எடிசனை லான்ச் செய்தது ஹோண்டா.. குறி வைப்பது இவர்களைதான்..

புதிய பிளாக் உடனான கேபின் கோல்டு, பிளாக் உடனான க்ரீன் மெட்டாலிக், பிளாக் உடனான கிரே சில்வர் மெட்டாலிக், பிளாக் உடனான ரெட், பிளாக் உடனான ப்ளூ மெட்டாலிக் ஆகிய கவர்ச்சிகரமான வண்ணங்களில் 2018 சிடி 110 ட்ரீம் டிஎக்ஸ் பைக் கிடைக்கும்.

CD 110 ட்ரீம் DX பைக்கின் புதிய எடிசனை லான்ச் செய்தது ஹோண்டா.. குறி வைப்பது இவர்களைதான்..

முதல் முறையாக மோட்டார் சைக்கிள் வாங்கும் வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில் CD 110 ட்ரீம் DX வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 48,272 ரூபாய் என்ற டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து தொடங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!
  2. ஊழியரை தாக்கி முட்டி போட வைத்து அவமானப்படுத்திய கொடுமை.. ரிசார்ட்டில் பதுங்கிய ஹூண்டாய் டீலர்..
  3. வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் ஆவி உலாவுகிறது.. அமானுஷ்யம் நிறைந்த சத்தி வனச்சாலையில் திகில் பயணம்..

More from DriveSpark

Article Published On: Tuesday, July 10, 2018, 16:38 [IST]
English summary
New version of Honda CD 110 Dream DX launched today. Read in tamil
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+