Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 7 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 9 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- News
ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!
புதிய கார் வாங்கி முதல் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் தேனிலவு காலம்தான். எந்த பிரச்னையும் இல்லாமல் கார் உங்களது துணைவி போல துணை நிற்கும். அதற்கு பிறகு சரியான பராமரிப்பில் இல்லை என்றால் காலை வாரிவிட்டுவிடும்.

முதல் மூன்று ஆண்டுகள் வரை சரியான இடைவெளியில் எஞ்சின் ஆயில், கூலண்ட் மாற்றுவது, வீல் அலைன்மென்ட், வீல் பேலன்சிங் செய்வதுடன், பிரேக் சிஸ்டம், ஏசி சிஸ்டத்தை பரிசோதிப்பது போன்ற வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிருக்கும். இந்த பராமரிப்பு செலவுகள் பெரும்பாலும் தெரிந்த விஷயம் என்பதாலும், கை கடிக்கும் அளவுக்கு பட்ஜெட் இருக்காது.

ஆனால், கார் 35,000 கிமீ தூரம் ஓடிய பிறகு நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் காரின் டயர்கள். இது சற்று அதிக செலவு வைக்கும் விஷயம் என்பதால், பலர் அக்கறை காட்ட தவறுகின்றனர். இது அவர்களின் உயிருக்கும், குடும்பத்தாரின் உயிருக்கும் உலை வைத்துவிடும் விஷயமாகிவிடுகிறது.

காரின் டயர்களை மாற்றுவதற்கான அவசியத்தை தெரிந்து கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. ஓட்டுபவர் பிரேக் பிடிக்கும் முறை மற்றும் சாலை நிலையை பொறுத்து 35,000 கிமீ முதல் 40,000 கிமீ தூரத்திற்குள் காரின் டயர்களை மாற்றுவதற்கான அவசியம் ஏற்படும்.

பொதுவாக, பார்த்தவுடனே சிலர் காரின் டயர் தேய்மானத்தை கண்டறிந்து விட முடியும். ஆனால், புதிய கார்களில் சிலவேளை, பட்டன்கள் அதிகம் தேய்ந்து போயிருக்காது. ஆனால், கைகளை வைத்து தேய்க்கும்போது தோசைக்கல் போல வழுவழுப்பாக இருக்கும்.

இதுபோன்ற டயர்களை வைத்து ஓட்டும்போது விபத்து அபாயம் அதிகம் ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றுதான். பிரேக் பிடிக்கும்போது டயர்களுக்கும் சாலைக்கும் சரியான பிடிப்பு இல்லாமல் வழுக்கிக் கொண்டு சென்று விபத்தில் சிக்கிவிடும்.

வேகமாக செல்லும்போது பிரேக் பிடிக்கும்போது கார் நிற்கும் தூரமானது 20 மீட்டர் வரை அதிகமாகும். இதனால், வேகத்தில் செல்லும்போது நிச்சயம் விபத்தில் சிக்கும் வாய்ப்பை கொடுத்துவிடும்.

அதுமட்டுமல்ல, காரின் பட்டன்கள் அதிக தரைப்பிடிப்பை வழங்குவதோடு, டயர் இடுக்கில் காற்றோட்டதையும் வழங்குகிறது. இதனால், டயர்கள் வெப்பமடைவது குறைக்கப்படும். ஆனால், தோசைக்கல் டயர்களில் பட்டன்கள் இடைவெளி இல்லாமல் காற்றோட்டம் இல்லாமல் சீக்கிரமாக சூடாகி வெடிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

பொதுவாக டயர்களில் பட்டன்கள் 1.5 மிமீ இருக்கும்போதே டயர் மாற்றிவிடுவது பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். குறிப்பாக மழை காலங்களில், 1.5 மிமீ அளவுக்கு குறைவான பட்டன்கள் கொண்ட டயர்கள் போதிய பிடிப்பை அளிக்காது.

அதுமட்டுமின்றி, ஸ்டீயரிங் சிஸ்டத்தின் திருப்புதல் திறனிலும் பாதிப்பு ஏற்படும். இதனால், கார் கட்டுப்பாட்டை இழக்கும் வாய்ப்பும் உள்ளது. டயர் மாற்றுவதன் அவசியத்தை காரை ஓட்டும்போது ஒரு எளிய விஷயத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம். நெடுஞ்சாலையில் செல்லும்போது ஸ்டீயரிங் வீலின் திருப்புதல் திறன் துல்லியமாக இல்லாதது போல உணர்ந்தால், தோசைக்கல் டயர்களால் கூட இருக்கலாம்.

மேலும், ஸ்டீயரிங் வீலில் சிறிய அளவில் அலைபாய்வது போல ஒரு உணர்வு தோன்றினாலும் டயர்களை பரிசோதிப்பது நல்லது. உங்களது கார் டயர்கள் நன்றாக இருந்தால் மட்டுமே அது ஸ்டீயரிங் சிஸ்டத்தில் பிரச்னை இருப்பதாக எடுத்துக் கொண்டு பரிசோதிப்பது நல்லது.

கார் ஓடிக்கொண்டிருக்குபோது அதிக உதறல்கள், அதிர்வுகள் தெரிந்தாலும் டயர்களை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்து கொள்ளுங்கள். டயரில் லேசாக பட்டன் இருக்கிறது, கொஞ்சம் ஓட்டியபிறகு மாற்றலாம் என்று நினைப்பது தவறாக முடிந்துவிடும்.

தோசைக்கல் டயர்கள் கொடுக்கும் குடைச்சல் காரணமாக ஸ்டீயரிங் சிஸ்டத்தின், திருப்புதல் திறனை அளிக்கும் உதிரிபாகங்களில் பாதிப்பு வரும். அத்துடன், சஸ்பென்ஷன் சிஸ்டத்திற்கும் பாதிப்புகளை தரும். தான் மட்டுமின்றி, புற்றுநோய் போல கொஞ்சம் கொஞ்சம் பிற பாகங்களிலும் பாதிப்புகள் புரையோடிப் போகும் ஆபத்து உள்ளது.

காரின் பராமரிப்புப் பணிகளில் எப்போதுமே கவனமாக இருங்கள். குறிப்பாக, டயர் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். கார்கள் 35,000 கிமீ முதல் 40,000 கிமீ வரையிலான காலத்தில் டயர்களை மாற்றலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால், சில கார்கள் குறைவாக பயன்படுத்தும்போது அதிக தூரம் ஓடியிருக்காது.

கார் வாங்கி 5 ஆண்டுகள் ஆன நிலையில் வெறும் 25,000 கிமீ தூரம் வரை மட்டுமே பயன்படுத்தி இருப்பார்கள். அதுபோன்ற கார்களிலும் டயரில் அதிக தேய்மானம் இல்லாவிட்டாலும், ஆயுட்காலத்தை தெரிந்து கொண்டு மாற்றிவிடுவது அவசியம்.

மேலும், சைடு வால் எனப்படும் டயரின் பக்கவாட்டு சுவர் பகுதிகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டு இருந்தால் அது அதிக தேய்மானம் இல்லாத டயராக இருந்தாலும், உடனடியாக மாற்றிவிடுவது அவசியம். டயர்களில் தயாரிப்பு குறைபாடு இருந்தால் வாரண்டியில் மாற்றிவிடலாம். பொதுவாக இரண்டு ஆண்டுகள் டயர்களுக்கு வாரண்டி பீரியட் இருக்கும்.

விலை குறைவாக இருக்கிறதே என்று தரமற்ற டயர்களை வாங்கி மாட்ட வேண்டாம். தரமான, நீடித்த உழைப்பை தரக்கூடிய டயர்களை வாங்கி பொருத்துங்கள். ஏனெனில், இது உயிருடன் விளையாடும் விஷயமாகிவிடும்.

இந்த செய்தியை படித்தவுடனே உங்களது காரின் டயரை பரிசோதித்து விடுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்கள் அல்லது டயர் விற்பனை நிலையங்களை அணுகி உங்களது டயர்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.