2021இல் விற்பனைக்கு வந்து இருசக்கர வாகன பிரியர்களின் மனதை கவர்ந்த பைக்குகள்! அட இத்தன அறிமுகமாகியிருக்கா!!

நடப்பாண்டு முடிவடைய இன்னும் ஒரு சில தினங்களே இருக்கின்றன. இந்த நிலையில் நடப்பாண்டை அலங்கரிக்கும் வகையில், மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டில் அறிமுகமாகிய இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021இல் விற்பனைக்கு வந்து இருசக்கர வாகன பிரியர்களின் மனதை கவர்ந்த பைக்குகள்! அட இத்தன அறிமுகமாகியிருக்கா!!

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வீரியத்தை நமக்கு காண்பித்துவிட்டு மிகவும் அமைதியான நிலையில் நம்மை விட்டுக் கடந்துக் கொண்டிருக்கின்றது நடப்பு 2021ம் ஆண்டு. இன்னும் வெகு சில நாட்களில் நடப்பாண்டு, கடந்த ஆண்டாக மாற இருக்கின்றது. இந்த ஆண்டில் கசப்பான மற்றும் புதியது என பல விதமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றது.

2021இல் விற்பனைக்கு வந்து இருசக்கர வாகன பிரியர்களின் மனதை கவர்ந்த பைக்குகள்! அட இத்தன அறிமுகமாகியிருக்கா!!

அந்தவகையில், இருசக்கர வாகன உலகைக் கலக்கும் வகையில் நடப்பாண்டு தனது தரிசனைத்தை வழங்கிய இருசக்கர வாகனங்களை பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். பிரத்யேக இருசக்கர வாகன பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த தகவல் வெளியிடப்படுகின்றது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021இல் விற்பனைக்கு வந்து இருசக்கர வாகன பிரியர்களின் மனதை கவர்ந்த பைக்குகள்! அட இத்தன அறிமுகமாகியிருக்கா!!

ராயல் என்பீல்டு

நிறுவனம் இந்தியாவில் பல புதுமுக வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர ஆயத்தமாக செயல்பட்டு வருகின்றது. நிறுவனம் மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதன் 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் இந்த ஆண்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆகையால் நிறுவனத்தின் மிக முக்கியமான அறிமுகமாக இது அமைந்தது. கணிசமான மாற்றங்களுடன் 2021 கிளாசிக் 350 பைக் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தகுந்தது. இதன் அறிமுகம் குறித்த மேலும் முக்கியமான தகவல்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

2021இல் விற்பனைக்கு வந்து இருசக்கர வாகன பிரியர்களின் மனதை கவர்ந்த பைக்குகள்! அட இத்தன அறிமுகமாகியிருக்கா!!

பஜாஜ் பல்சர்

இது பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்தானா? என்று கேட்குமளவிற்கு முற்றிலும் புதுமையான தோற்றத்தில் விற்பனைக்கு வந்தன புதிய என்250 மற்றும் எஃப்250 மோட்டார்சைக்கிள்கள். தற்போது பல்சர் வரிசையில் விற்பனைக்குக் கிடைத்து வரும் தேர்வுகளை சற்றே அதிகரிக்கும் வகையில் இந்த இரட்டையர்கள் நமது இந்திய சந்தையில் மிக சமீபத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்திய இளைஞர்களைக் கவரும் வகையில் அறிமுகமாகியிருக்கும் இந்த பைக்குகள் பற்றிய முழுமையாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

2021இல் விற்பனைக்கு வந்து இருசக்கர வாகன பிரியர்களின் மனதை கவர்ந்த பைக்குகள்! அட இத்தன அறிமுகமாகியிருக்கா!!

கேடிஎம் ஆர்சி 125 மற்றும் ஆர்சி200

கேடிஎம் நிறுவனம் இந்த ஆண்டை அலங்கரிக்கும் வகையில் ஆர்சி 125 மற்றும் ஆர்சி 200 ஆகிய இரு புதிய மோட்டார்சைக்கிளை இந்திய இருசக்கர வாகன பிரிவில் விற்பனைக்குக் களமிறக்கியது. புதிய சேஸிஸ் மற்றும் புதிய விதமான தோற்றம் என அட்டகாசமான வசதிகளுடன் இப்பைக்குகள் இந்தியா வந்திருக்கின்றன. இதில், ஆர்சி 125 பைக்கை பற்றிய அறிய இங்கே க்ளிக் செய்யவும். ஆர்சி 200 பைக்கை பற்றிய இங்கு க்ளிக் செய்யவும்.

2021இல் விற்பனைக்கு வந்து இருசக்கர வாகன பிரியர்களின் மனதை கவர்ந்த பைக்குகள்! அட இத்தன அறிமுகமாகியிருக்கா!!

ஹீரோ

ஹீரோ நிறுவனம் நடப்பாண்டிற்காக இந்திய இருசக்கர வாகன சந்தையில் அதன் புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கை அறிமுகப்படுத்தியது. இப்பைக்கில் புதிய அம்சமாக 4 வால்வ் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டது. இது ஆஃப்ரோடர் இருசக்கர வாகனத்திற்கு மிக சிறந்த திறன் வெளிப்பாட்டை வழங்க உறுதுணையாக இருக்கின்றது.

2021இல் விற்பனைக்கு வந்து இருசக்கர வாகன பிரியர்களின் மனதை கவர்ந்த பைக்குகள்! அட இத்தன அறிமுகமாகியிருக்கா!!

இது மட்டுமின்றி ஹீரோ நிறுவனம் எக்ஸ்டெக் எனும் தேர்வையும் இந்த பைக்கில் வழங்குகின்றது. இத்தேர்வில் ப்ளூடூத் இணைப்பு வசதி மற்றும் திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன.

2021இல் விற்பனைக்கு வந்து இருசக்கர வாகன பிரியர்களின் மனதை கவர்ந்த பைக்குகள்! அட இத்தன அறிமுகமாகியிருக்கா!!

டிவிஎஸ்

டிவிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டில் பன்முக புதுமுக இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு இருக்கின்றது. அப்பாச்சி ஆர்ஆர்310, டிவிஎஸ் ரைடர் மற்றும் ஜூபிடர் 125 ஆகிய இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் 2021-லேயே விற்பனைக்கு வந்தன. இதில், ரைடருக்கு தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இது மலிவு விலையில் கிடைக்கும் ரேஸ் தோற்றம் கொண்ட பைக் மாடலாகும். இந்த பைக் பற்றிய மேலும் விபரங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

2021இல் விற்பனைக்கு வந்து இருசக்கர வாகன பிரியர்களின் மனதை கவர்ந்த பைக்குகள்! அட இத்தன அறிமுகமாகியிருக்கா!!

யமஹா

யமஹா நிறுவனம் அதன் ஏரோக்ஸ் 155 சிசி ஸ்கூட்டரை இந்திய இருசக்கர வாகன பிரியர்களை ஈர்க்கும் வகையில் நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்திய இளைஞர்கள், குறிப்பாக ஸ்கூட்டர்கள் பிரியர்கள் மத்தியில் இந்த இருசக்கர வாகனத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

2021இல் விற்பனைக்கு வந்து இருசக்கர வாகன பிரியர்களின் மனதை கவர்ந்த பைக்குகள்! அட இத்தன அறிமுகமாகியிருக்கா!!

இந்த நிலையிலேயே ஏரோக்ஸ் 155 நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி, 2021இல் யமஹா நிறுவனம் புதிய ஒய்இசட்எஃப் ஆர்15 மாடலையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக் மாடலில் மிக சமீபத்தில் விலை குறைவான ஓர் தேர்வை நாட்டில் களமிறக்கியது. அதுகுறித்த முக்கிய தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

2021இல் விற்பனைக்கு வந்து இருசக்கர வாகன பிரியர்களின் மனதை கவர்ந்த பைக்குகள்! அட இத்தன அறிமுகமாகியிருக்கா!!

ஓலா மின்சார ஸ்கூட்டர்

ஓலா நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய இரு தேர்வுகளில் மின்சார ஸ்கூட்டர்களை நாட்டில் அறிமுகப்படுத்தியது. இதற்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டநிலையில் மிக விரைவில் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட இருக்கின்றன. இதற்கான பணிகளில் நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக ஒற்ற முழுமையான சார்ஜில் 181 கிமீ தூரம் பயணிக்கும் திறனுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is the list of two wheeler launched in 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X