விலை குறைவான தேர்வாக Yamaha R15S V3 இந்தியாவில் அறிமுகம்! ஸ்டைலும், திறன் வெளிப்பாடும் வேற லெவல்! முழு விபரம்!

யமஹா நிறுவனம் ஆர்15எஸ் வி3 (Yamaha YZF-R15S V3.0) எனும் புதிய இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் விலை மற்றும் பிற முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

விலை குறைவான தேர்வாக Yamaha R15S V3 இந்தியாவில் அறிமுகம்... ஸ்டைலும், திறன் வெளிப்பாடும் வேற லெவல்!இதோ முழு விபரம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா மோட்டார், இந்திய இருசக்கர வாகன புதிய மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. யமஹா ஒய்இசட் ஆர்15எஸ் வி3 (Yamaha YZF-R15S V3.0) மாடலையே நிறுவனம் இந்தியாவில் புதிதாக களமிறக்கியிருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் ஆர்15 வி4 மாடலின் விலைக் குறைவான மாடலாக இது விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

விலை குறைவான தேர்வாக Yamaha R15S V3 இந்தியாவில் அறிமுகம்... ஸ்டைலும், திறன் வெளிப்பாடும் வேற லெவல்!இதோ முழு விபரம்!

இப்பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 1.57 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்15 வி4 ரூ. 1.71 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இதைவிட குறைந்த விலைக் கொண்ட வாகனமாகவே புதிய ஆர்15எஸ் வி3 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை குறைவான தேர்வாக Yamaha R15S V3 இந்தியாவில் அறிமுகம்... ஸ்டைலும், திறன் வெளிப்பாடும் வேற லெவல்!இதோ முழு விபரம்!

ஆர்15 வி4 மாடலுக்கு மாற்றாக குறைந்த விலையில் இருசக்கர வாகனங்களை தேடும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் பொருட்டு இவ்வாகனம் இந்தியா கொண்டு வரப்பட்டிருக்கின்றது. மேலே கூறப்பட்ட விலை டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஆன்-ரோடில் இதைவிட சில ஆயிரங்கள் கூடுதலாக விற்பனைக்குக் கிடைக்கும்.

விலை குறைவான தேர்வாக Yamaha R15S V3 இந்தியாவில் அறிமுகம்... ஸ்டைலும், திறன் வெளிப்பாடும் வேற லெவல்!இதோ முழு விபரம்!

அதிக விலை கொண்ட ஓர் பைக்கை களமிறக்கும்போது நிறுவனம் அதே மாடலை ஒத்த விலைக் குறைவான தேர்வை (மாடலை) களமிறக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றது. பட்ஜெட் இரு சக்கர வாகன பிரியர்களைக் கவரும் பொருட்டு குறைவான அம்சங்களுடன் அது களமிறக்கப்படும்.

விலை குறைவான தேர்வாக Yamaha R15S V3 இந்தியாவில் அறிமுகம்... ஸ்டைலும், திறன் வெளிப்பாடும் வேற லெவல்!இதோ முழு விபரம்!

இதே யுக்தியையே ஆர்15 வி4 விஷயத்திலும் நிறுவனம் மேற்கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே விலைக் குறைவான ஆர்15எஸ் வி3 இந்தியாவில் களமிறக்கப்பட்டிருக்கின்றது. இந்த பைக்கில் 155சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய 4 ஸ்ட்ரோக், லிக்யூடு கூல்டு, எஸ்ஓஎச்சி, 4 வால்வு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

விலை குறைவான தேர்வாக Yamaha R15S V3 இந்தியாவில் அறிமுகம்... ஸ்டைலும், திறன் வெளிப்பாடும் வேற லெவல்!இதோ முழு விபரம்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 18.6 பிஎஸ் பவரை 10 ஆயிரம் ஆர்பிஎம்மிலும், 14.1 என்எம் டார்க்கை 8,500 ஆர்பிஎம்மிலும் ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இத்துடன், இந்த மோட்டாரில் வேரியபிள் வால்வ் ஆக்சுவேசேன் (Variable Valve Actuation) வசதிக் கொண்ட ப்யூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

விலை குறைவான தேர்வாக Yamaha R15S V3 இந்தியாவில் அறிமுகம்... ஸ்டைலும், திறன் வெளிப்பாடும் வேற லெவல்!இதோ முழு விபரம்!

இந்த தொழில்நுட்பம் மிக அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவும். இந்த மோட்டார் 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இத்துடன், பன்முக சிறப்பு வசதிகள் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் (கியர்ஷிஃப்ட் இன்டிகேட்டர் வசதி உடன்), ட்யூவல் சேனல் ஏபிஎஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச், சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் எஞ்ஜினை ஆஃப் செய்யும் தொழில்நுட்பம், டெல்டா பாக்ஸ் ஃப்ரேம், அலுமினியம் ஸ்விங்கர்ம் மற்றும் சூப்பர் ஒய்ட் 140/70-R17 டயர்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

விலை குறைவான தேர்வாக Yamaha R15S V3 இந்தியாவில் அறிமுகம்... ஸ்டைலும், திறன் வெளிப்பாடும் வேற லெவல்!இதோ முழு விபரம்!

இருசக்கர வாகனத்தின் அளவுகள், புதிய ஆர்15எஸ் வி3 பைக் 1,990 மிமீ நீளத்தையும், 725 மிமீ அகலத்தையும், 1,135 மிமீ உயரத்தையும் கொண்டிருக்கின்றது. வீல் பேஸுடன் இதன் உயரம் 1,325 மிமீட்டராக இருக்கின்றது. மேலும், இதன் ஒட்டுமொத்த எடை 292 கிலோவாக இருக்கின்றது.

விலை குறைவான தேர்வாக Yamaha R15S V3 இந்தியாவில் அறிமுகம்... ஸ்டைலும், திறன் வெளிப்பாடும் வேற லெவல்!இதோ முழு விபரம்!

யமஹா ஆர்15எஸ் வி3 பைக் ரேசிங் ப்ளூ எனும் ஒற்றை நிற தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. யமஹா நிறுவனம் அதன் ஆர்15 வி4 பைக் மாடலை கடந்த செப்டம்பர் 21ம் தேதி அன்றே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மேலும், இதன் விலையை அறிமுகத்திற்கு பின்னர் முதல் முறையாக கடந்த 12 (நவம்பர்) அன்று உயர்த்தியது.

விலை குறைவான தேர்வாக Yamaha R15S V3 இந்தியாவில் அறிமுகம்... ஸ்டைலும், திறன் வெளிப்பாடும் வேற லெவல்!இதோ முழு விபரம்!

இந்த நிலையிலேயே புதிய விலைக் குறைவான ஆர்15எஸ் வி3யை நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இதன் வருகை குறித்து நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவர் மோட்டோஃபுமி ஷிதாரா கூறியதாவது, "ஒய்இசட்எஃப் ஆர்15 வி4 (YZF-R15 V4)க்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதே டிஎன்ஏ அம்சங்களுடன் குறைந்த விலை இருசக்கர வாகனத்தை வாடிக்கையாளர்கள் விரும்புவதாக எங்கள் ஆராய்ச்சி காட்டியது. எங்கள் வாடிக்கையாளரின் இந்த கோரிக்கையை பூரத்தி செய்யும் வகையில் ஆர்15எஸ் வி3 களமிறக்கப்பட்டிருக்கின்றது" என்றார்.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha launches all new yzf r15s V3 0 with a unibody seat
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X