இந்தியாவின் சிறந்த காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியலை இந்த பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. முதன்மை தர வரிசையில் சிறந்த காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் விலை, தொழில்நுட்ப விபரம் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே பெறலாம்.
கியா செல்டோஸ் எஸ்யூவி இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் கனவு எஸ்யூவி மாடலாக வலம் வருகிறது. அட்டகாசமான டிசைன் அம்சங்களுடன் பிரிமீயம் அம்சங்களுடன் கூடிய இன்டீரியர் மிகச் சரியான விலையில் கிடைக்கிறது. இதனால், தொடர்ந்து தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெற்று அசத்தி வருகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி தனது ஆளுமையானத் தோற்றம், இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மாடலாகவும் இருக்கிறது. அனைத்து விதத்திலும் காம்பேக்ட் எஸ்யூவி வாங்குவோரின் எதிர்பார்ப்புகளை சரியாக பூர்த்தி செய்யும் மாடலாக கூறலாம்.
அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே மிகப்பெரிய அதிர்வலைகளை சந்தையில் ஏற்படுத்திய கியா சொனெட், எதிர்பார்த்தது போலவே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. சொக்க வைக்கும் டிசைன், மூன்றுவிதமான எஞ்சின் தேர்வுகள், வசதிகளுடன் மிகச் சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால் விற்பனையிலும் கலக்கி வருகிறது. அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.
சத்தமில்லால் சந்தையில் சாதித்து வரும் மாடலாக ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியை கூறலாம். ஹோண்டா ஜாஸ் அடிப்படையிலான க்ராஸ்ஓவர் எஸ்யூவியாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் தனித்துவமான காம்பேக்ட் எஸ்யூவியை வாங்க விரும்புவோரின் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இடவசதி, நம்பகமான சிறந்த எஞ்சின் தேர்வுகளுடன் காம்பேக்ட் எஸ்யூவி வாங்க விரும்புவோரின் தேர்வு பட்டியலில் முக்கிய இடத்தை வகிக்கிறது.
இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி மார்க்கெட்டில் முதலாவதாக வந்த மாடல் என்ற பெருமையை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெற்றுள்ளது. மிகவும் வலுவான கட்டமைப்புத் தரம், இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் அழகானத் தோற்றத்துடன் வசீகரித்து வருகிறது. இந்த காரில் அவசர கால உதவி கோரும் தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது.
இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர்-1 மாடலாக இருந்து வருகிறது. டிசைன், இடவசதி, தொழில்நுட்ப வசதிகளில் அசத்தலான மாடலாக இருப்பதுடன், விலையிலும் வாடிக்கையாளர்களை சமரசப்படுத்திவிடுகிறது. எஸ்யூவி வாங்குவோரின் முதல் தேர்வாக ஹூண்டாய் க்ரெட்டா இருந்து வருகிறது.
இந்தியாவின் மிகச் சிறந்த காம்பேக்ட் எஸ்யூவி தேர்வாக வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது டாடா நெக்ஸான். இளம் தலைமுறையினரை கவரும் டிசைன், சிறந்த எஞ்சின் தேர்வுகளுடன் சரியான பட்ஜெட்டில் கிடைக்கிறது. பாதுகாப்பு தர மதிப்பீட்டிலும் சிறந்த கார் மாடல் என்ற பெயரை பெற்றிருப்பதால், வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி இருக்கிறது.
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது. மிக நேர்த்தியான டிசைன் அம்சங்கள், சிறப்பான இடவசதியுடன் காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய தேர்வாக மாறி இருக்கிறது. ஸ்கோடா பிரியர்களின் எதிர்பார்ப்புகளை மிக கச்சிதமாக பூர்த்தி செய்கிறது.