டிரைவிங் லைசன்ஸ் உடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு ஆலோசனை
இந்தியாவில் டிரைவிங் லைசன்ஸில் உள்ள குழறுபடிகளை போக்க டிரைவிங் லைசன்ஸ் உடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் மூலம் போலி டிரைவிங் லைசன்ஸ்களை நீக்கவும்,அல்லது விபத்து ஏற்படுத்தி
இந்தியாவில் டிரைவிங் லைசன்ஸில் உள்ள குழறுபடிகளை போக்க டிரைவிங் லைசன்ஸ் உடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் மூலம் போலி டிரைவிங் லைசன்ஸ்களை நீக்கவும்,அல்லது விபத்து ஏற்படுத்தி விட்டு தப்புபவர்களை பிடிக்கவும் எளிதான வழி பிறக்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேற விழிப்புணர்வுகளையும் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகளையும் தண்டனைகளையும் அதிகரித்தும் ஆண்டிற்கு ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் விபத்துக்கள் பெரும்பாலும் மது அருந்திவிட்டு விபத்தை ஏற்படுத்துவதால் தான் அதிகம் ஏற்படுகிறது. இது குறித்து அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் எதுவும் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை.

குறிப்பாக பெரு நகரங்களில் வார இறுதி நாட்களில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இவ்வாறாக விபத்தை ஏற்படுத்துபவர்களால் அதிக அளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இவ்வாறு விபத்தை ஏற்படுத்துபவர்கள் அந்த இடத்தில் நிற்காமல் தப்பி விடுகின்றனர். அவர்களை அடையாளம் காண சிரமமாகவுள்ளது. மேலும் சிலர் போலி லைசன்ஸ வைத்து தப்பித்து விடுகின்றனர். இந்த பிரச்சனை இந்தியா முழுவதும் நீடித்து வருகிறது.

சட்டத்துறையில் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்த சிக்கலை போக்க நாட்டில் உள்ள அனைவரும் தங்கள் டிரைவிங் லைசன்ஸ் உடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியார் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது ரவி சங்கர் பிரசாத் டிரைவிங் லைசன்ஸ் உடன் ஆதாரை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

தற்போது விபத்தை ஏற்பட்டுத்தி விட்டு பலர் தலைமறைவாகி விடுகின்றனர். வாகன எண்ணை கொண்டு வாகனத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டாலும், சரியான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.

அப்படியே கண்டு பிடித்தாலும் அவர்கள் போலியான லைசன்ஸை கொண்டு தப்பி விடுகின்றனர். பலர் இரண்டு லைசன்ஸ்களை வைத்துள்ளனர். இதனால் சட்டத்துறைக்கு வழக்குகளில் பெரும் குழப்பங்களும், பிரச்னைகளும் ஏற்படுகிறது.

இந்த பிரச்னைகளை சீர் செய்ய டிரைவிங் லைசன்ஸ்களில் எல்லாம் ஆதார் எண்களை இணைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் போலி டிரைவிங் லைசன்ஸ்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விடும். அதன் மூலம் ஒருவருக்கு ஒரு லைசன்ஸ் தான் இருக்கும்.

மேலும் அவர் வழக்கில் சிக்கி தலைமறவாகியிருந்தால் அதில் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்ணை கொண்டு அவரது வங்கி முதற்கொண்டு அனைத்தையும் முடக்க முடியும். மேலும் அந்த ஆதராருடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டை கண்டு அவர்கள் இருக்கும் இடத்தை கூட கண்டு பிடிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு டிரைவிங் லைசன்ஸ் உடன் ஆதாரை இணைப்பதற்கான காரணங்கள் குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதாரை டிரைவிங் லைசன்ஸ் உடன் இணைப்பது பல விதங்களில் நன்மை தான் என்றாலும் அதற்கான கால அவசாசம் மற்றும் இணைக்கும் முறை குறித்து அரசு இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இதை நடைமுறைபடுத்துவதாக கோரி மக்களை அலைக்கழிக்காமல் இருந்தால் சரி
டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
- ஒரு குடும்பத்தை மீட்க பொலிரோ காரில் ஆற்று வெள்ளத்தை கடந்த போலீஸ்! சாத்தியமானது எப்படி?
- ஏஎம்டி கார்ளை வாங்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 6 காரணங்கள்
- சவப்பெட்டியாக மாறிய பிஎம்டபிள்யூ கார்! இறந்த தந்தைக்கு மகன் நூதன மரியாதை!
- ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்
- காஸ்ட்லி கடவுளுக்கு காஸ்ட்லி கார் கொடுத்த சபாஷ் நாயுடு! இந்த கார் உள்ள உலகின் முதல் கோயில் திருப்பதி


Click it and Unblock the Notifications








