ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

Written By:

இந்தியாவில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகளுக்கு தான் பெரும் கவலை. பல லட்சம் போட்டு காரையும் வாங்கி விட்டு மீண்டும் பெட்ரோலுக்காக அதிகமாக செலவு செய்ய வேண்டியது உள்ளதே என அலுத்து கொள்கின்றனர்.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

இந்தியாவில் குறைந்த விலை கார்கள், முதல் பல கோடி மதிப்புள்ள கார்கள் வரை விற்பனையாகி தான் வருகின்றன. ஆனால் இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்துவது ரூ 10 லட்சத்திற்கும் குறைவான கார்களை தான். பெரும்பாலன இந்தியர்களின் பொருளாதார நிலைமை அதற்குள் தான் அடங்குகிறது.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

இந்த வகையில் இந்தியாவில் விற்பனையாகும் ரூ 10 லட்சத்திற்கும் குறைவான கார்களில் அராய் சான்றின் படி சிறந்த மைலேஜ் தரும் கார்களை பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் புதிதாக கார் வாங்க போவதாக இருந்தால் இதை கருத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

மாருதி சுஸூகி ஸிப்ட் மற்றும் டிசையர் - மைலேஜ் : 28.4 கி.மீ.

ஸிப்ட் மற்றும் டிசையர் இந்த இரண்டு கார்களும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்கள் தான். இவைகள் தான் இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்களாகவும் உள்ளன. இதன் மூலமே நாம் தெரிந்து கொள்ளலாம் இந்தியர்கள் அதிக மைலேஜ் தரும் கார்களை தான் விரும்புகின்றனர்.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

மாருதி நிறுவனம் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் இன்ஜின் உடன் குறைந்த எடையுள்ள காரை வடிவமைத்தன் சிறப்பு தான் 28.4 கிமீ. வரை மைலேஜை கிடைக்க வைப்பது. இந்தியர்களுக்கு பிடித்தவகையில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளதும் இதன் முக்கிய சிறந்த அம்சம். ஸிப்ட் டீசல் கார் விலை ரூ 5.99 லட்சத்தில் துவங்குகிறது. டிசையரின் டீசல் வேரினயட் கார் விலை ரூ 6.56 லட்சத்தில் துவங்குகிறது.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

மாருதி சியஸ் - மைலேஜ் : 28.05 கி

நடுத்தர செடன் கார்களில் சியஸ் கார் அடுத்த முக்கிய இடத்தில் இருக்கிறது. ஹோண்டா சிட்டி, ஹீண்டாய் வெர்னா உடன் போட்டி போடும் இந்த கார் இந்திய வாடிக்கையாளர்களை அதன் விலை மற்றும் மைலேஜால் அதிகம் ஈர்க்கிறது.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

இந்த கார் ஸ்மார்ட் ஹைபிரிட் வாகனமாக வருகிறது. இதன் டீசல் இன்ஜின் தான் சிறந்த ஆப்ஷனாக இருக்கிறது. இந்த காரின் விலை டில்லி எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 9.5 லட்சம் ஆகும்.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

மாருதி பெலேனோ - மைலேஜ்: 27.39 கி.மீ.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தையும் மாருதி பெலேனோ தான் பெறுகிறது. இதன் மூலம் நாம் மாருதி நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களை எந்த அளவிற்கு புரிந்து வைத்து கொண்டு கார்களை தயாரிக்கிறது என்பதை நாம் உணரலாம். இந்த கார் நேரடியாக ஹூண்டாய் ஐ 20 மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

இந்த காரின் லுக்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. அதே நேரத்தில் இந்த மைலேஜூம் இதற்கு பெரிய பிளஸ் தான். இந்த பெலேனோ காரின் டீசல் வேரியன்டை பொருத்தவரை டில்லி எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 6.51 லட்சத்திற்கு விற்பனையில் உள்ளது.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

ஹோண்டா ஜாஸ் - மைலேஜ் 27.3 கி.மீ

1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட காரை லிட்டருக்கு 27.3 கிமீ மைலேஜ் கிடைக்கும் வகையில் டிசைன் செய்வது அவ்வளவு எளிதல்ல ஆனால் ஜப்பான் காரர்களால் எல்லாம் முடியும் என்பது போல ஹோண்டா நிறுவனம் அதையும் சாதித்துள்ளது. அதே நேரத்தில் ஹோண்டா நிறுவனத்தின் ஸ்டைலான உறுதி மற்றும் கம்போர்ட்டையும் இந்த கார் வழங்குகிறது. இந்த ஹோண்டா ஜாஸ் காரின் டீசல் வேரியன்ட் விலை ரூ 7.36 லட்சத்தில் துவங்குகிறது.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

டாடா டியாகோ - மைலேஜ்: 27.28 கிமீ

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் மனதை இந்த காரை அவர்கள் கண்ணில் காண்பித்தே மாற்றிவிட்டது. முதன்முதலாக இம்பேக்ட் டிசைன் தத்துவத்தில் இந்த மாடல் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்த விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த காரின் டீசல் வேரியன்ட்டின் பேஸ் மாடல் டில்லி எக்ஸ் ஷோரூம் விலை ரூ 4.16 லட்சத்தில் ஆரம்பமாகிறது.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

மாருதி இக்னிஸ்

மாருதி நிறுவன தயாரிப்புகளின் இளைஞர்கள் கவனத்தை அதிகம் ஈர்த்த கார் இந்த மாருதி இக்னிஸ் கார் தான். இந்த கார் ரோட்டில் செல்லும் போது மற்ற எல்லோரையும் ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இதன் வடிவமைப்பு இருக்கும். இந்த கார் 26.8 கி.மீ. மைேலஜ் தரக்கூடியது. இந்த காரின் டீசல் பேஸ் வேரியன்ட்டின் டில்லி எக்ஸ் ஷோரூம் விலை ரூ 6.32 லட்சம்

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

ஃபோர்டு பிகோ - மைலேஜ் : 25.83 கிமீ

ஃபோர்டு பிகோ கார் ஒரு சிறந்த காராக பெயர் பெற்றது. இதன் இட வசதி மற்றும் சொகுசிற்காக மட்டும் அல்ல இதன் பாதுகாப்பிலும் இது சிறந்த கார் தான். இதன் டாப் மாடலில் 6 ஏர் பேக் வசதிகள் உள்ளது.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

இந்த காரில் 1.5 லிட்டர் டிடிசிஐ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 99 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இதன் டீசல் இன்ஜின் கார் லிட்டருக்கு 25.83 கி.மீ. மைலேஜை தருகிறது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ 6.48 லட்சம்

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

ஃபோர்டு அஸ்பயர் - 25.83 கி.மீ

காம்பெக்ட் செடன் காரான ஃபோர்டு அஸ்பயர் காரும் சிறந்த மைலஜ் காராக இருக்ககிறது. இந்த கார் ஃபோர்டு பிகோ வின் அதே மைலேஜ், இன்ஜின், இன்டீரியர் என அப்படியே இருப்பதால் இது அந்த காரின் செடன் ரக கார் என்றே நாம் எடுத்துக்கொள்ளலாம். இந்த காரின் ஆரம்ப விலை ரூ 6.82 லட்சம்

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

ஹோண்டா அமேஸ் - மைலேஜ் : 25.8 கி.மீ.

ஆட்டோ எக்ஸ்போ 2018ல் அறிமுகமான இந்த ஹோண்டா அமேஸ் கார் அதிக இட வசதியுடன் கூடிய கேபின் மற்றும் பல வசதிகளுடன் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் டு-டிடெக் எர்த் டிரீம்ஸ் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ 6.70 லட்சத்தில் துவங்கி ரூ 9 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.

ரூ 10 லட்சத்திற்குட்பட்ட டாப் 10 மைலேஜ் கார்கள்

ஹோண்டா டபிள்யூஆர்-வி - மைலேஜ் : 25.5 கிமீ

ஹோண்டா நிறுவனத்தின் காம்பெக்ட் எஸ்யூவி கார் தான் இந்த டபிள்யூஆர் - வி கார். இது இந்திய வாடிக்கையார்கள் கண்களை நிச்சயம் கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. காஸ்ட்லி கடவுளுக்கு காஸ்ட்லி கார் கொடுத்த சபாஷ் நாயுடு! இந்த கார் உள்ள உலகின் முதல் கோயில் திருப்பதி
  2. புதிய மாருதி எர்டிகா காரின் ஸ்பை படங்கள் மற்றும் விபரம்!!
  3. டாடா டிகோர் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!
  4. உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து..!
  5. ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

English summary
Top 10 Fuel Efficient cars under 10 lakh. Read in Tamil
Story first published: Wednesday, June 13, 2018, 16:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more