ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்
ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் சிறப்பு பதிப்பு மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த கார்களில் பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கதவுகளில் கீழ்புறத்தில
ஃபோக்ஸ்வேகன் போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதத்தில், தொடர்ந்து ஸ்பெஷல் எடிசன் மாடல்களை வெளியிட்டு வருகிறது ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம். அந்த வகையில், தற்போது போலோ, அமியோ, வென்ட்டோ கார்களின் சிறப்பு பதிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இந்த மூன்று கார்களின் கவர்ச்சியை கூட்டும் விதத்தில் சில ஸ்டிக்கர் வேலைப்பாடுகளுடன் இந்த கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. ஸ்போர்ட் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல்கள் வந்துள்ளன.

போலோ, அமியோ, வென்ட்டோ கார்களில் பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கதவுகளில் கீழ்புறத்தில் கருப்பு வண்ண கோடுகள் வசீகரத்தை அதிகப்படுத்துகின்றன. கருப்பு வண்ண ரியர் ஸ்பாய்லர் மற்றும் கார்பன் ஃபினிஷ் ரியர் வியூ கண்ணாடிகளும் இந்த காரின் விசேஷ அம்சங்களாக இருக்கின்றன.

வெளிப்புறத்தில் மட்டுமே இந்த அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிறப்பு பதிப்பு மாடல்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஃபோக்ஸ்வேகன் டீலர்களிலும் கிடைக்கும். இந்த சிறப்பு மாடல்களுக்கு கூடுதல் விலை இல்லை என்பதும் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் மற்றொரு சிறப்புத் திட்டத்தையும் ஃபோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது. #BeASport என்ற பெயரில் சிறப்புப் பரிசு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, இந்த மூன்று கார்களை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாடிக்கையாளர், அந்த அனுபவத்தில் சிறப்பான பின்னூட்டத் தகவலை எழுதும் வாடிக்கையாளர் ஒருவருக்கு கார் பரிசாக பெறும் வாய்ப்புள்ளது.

கிரிக்கெட், கால்பந்து என விளையாட்டு ஜுரம் ரசிகர்களை தொற்றிக் கொண்ட இந்த வேளையில், ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கான இந்த விசேஷ பரிசுத் திட்டமும், சிறப்பு பதிப்பு மாடல்களும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








