டாடா டிகோர் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டிகோர் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் விதத்தில், ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டாடா டிகோர் Buzz எடிசன் என்ற பெயரில் வந்துள்ள இந்த கார்

By Saravana Rajan

டாடா டிகோர் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் விதத்தில், ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா டிகோர் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டிகோர் Buzz எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டாடா டிகோர் காரின் XM என்ற நடுத்தர வகை வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இந்த Buzz எடிசன் விற்பனைக்கு வந்துள்ளது.

டாடா டிகோர் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டிகோர் Buzz எடிசன் மாடலில் கூரை பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு அழகு கூட்டப்பட்டு இருக்கிறது. இரட்டை வண்ண வீல் கவர்கள், கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள், முன்புற க்ரில் அமைப்பில் வண்ண அலங்காரம் மற்றும் பின்புறத்தில் பூட் லிட்டில் Buzz எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டாடா டிகோர் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்தில் சிறிய மாற்றங்கள் உண்டு. ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் சிவப்பு வண்ண அலங்காரம் இடம்பெற்றிருக்கிறது. புதிய ஃபேப்ரிக் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இது காரின் உட்புறத்தை மிக பிரிமியமாக காட்டுகிறது. இந்த மாடலில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இல்லை. ஹார்மன் நிறுவனத்தின் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டாடா டிகோர் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் மற்றும் 1.1 லிட்டர் டீசல் மாடல்களில் கிடைக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் 70 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் இந்த ஸ்பெஷல் எடிசன் கிடைக்கும்.

டாடா டிகோர் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டிகோர் காரின் சாதாரண XM வேரியண்ட்டின் பெட்ரோல் மாடல் ரூ.5.19 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.6.05 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த நிலையில், புதிய ஸ்பெஷல் எடிசன் XM வேரியண்ட்டின் பெட்ரோல் மாடல் ரூ.5.68 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.6.57 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

டாடா டிகோர் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

காம்பேக்ட் செடான் ரகத்தில் மிக குறைவான விலை மாடலாக டாடா டிகோர் கார் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களின் ஆதிக்கத்தால், எதிர்பார்த்த அளவு விற்பனை எண்ணிக்கையை பெறவில்லை என்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு குறையாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வாடிக்கையாளர்களை ஈரக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 13, 2018, 13:43 [IST]
English summary
Tata Motors has launched the limited edition variant of their sub-four-metre sedan, the Tigor.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+