புதிய மாருதி எர்டிகா காரின் ஸ்பை படங்கள் மற்றும் விபரம்!!

இரண்டாம் தலைமுறை அம்சங்களுடன் புதிய மாருதி எர்டிகா கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், இந்த கார் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

எம்பிவி ரக கார்களில் போதுமான இடவசதி, விலை, வசதிகள் என அனைத்து விதத்திலும், மாருதி எர்டிகா கார் இந்தியர்களின் முக்கிய சாய்ஸாக விளங்குகிறது. இந்த நிலையில், விற்பனைக்கு வந்தது முதல் அதிக மாற்றங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், முற்றிலும் புதிய மாடலாக மேம்படுத்தப்படுகிறது.

புதிய மாருதி எர்டிகா காரின் ஸ்பை படங்கள் மற்றும் விபரம்!!

அண்மையில் இந்த புதிய எர்டிகா கார் இந்தோனேஷியாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான ஆயத்தப் பணிகளில் மாருதி கார் நிறுவனம் மும்முரமாக உள்ளது.

புதிய மாருதி எர்டிகா காரின் ஸ்பை படங்கள் மற்றும் விபரம்!!

இதற்காக, இறுதிக் கட்ட சாலை சோதனைகளுக்கு புதிய மாருதி எர்டிகா கார் உட்படுத்தப்பட்டு இருக்கிறது. வெளிப்புற டிசைன் மற்றும் உட்புற டிசைன்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, க்ரில் அமைப்பு, டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன.

புதிய மாருதி எர்டிகா காரின் ஸ்பை படங்கள் மற்றும் விபரம்!!

உட்புறத்தில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வருகிறது புதிய எர்டிகா கார்.

புதிய மாருதி எர்டிகா காரின் ஸ்பை படங்கள் மற்றும் விபரம்!!

புதிய மாருதி எர்டிகா காரில் முக்கிய மாற்றமாக 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 102 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். டீசல் மாடலில் 1.3 லிட்டர் எஞ்சின்தான் தொடரும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் தயாரிப்பு பணிகள் இன்னமும் முழுமை பெறவில்லை.

புதிய மாருதி எர்டிகா காரின் ஸ்பை படங்கள் மற்றும் விபரம்!!

புதிய மாருதி எர்டிகா காரில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வர இருக்கின்றன. டீசல் மாடலிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் சற்று தாமதமாக அறிமுகம் செய்யவும் மாருதி திட்டமிட்டுள்ளது.

புதிய மாருதி எர்டிகா காரின் ஸ்பை படங்கள் மற்றும் விபரம்!!

புதிய மாருதி எர்டிகா காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெற இருக்கின்றன.

புதிய மாருதி எர்டிகா காரின் ஸ்பை படங்கள் மற்றும் விபரம்!!

வரும் பண்டிகை காலத்தில் புதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.6.5 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 13, 2018, 14:32 [IST]
English summary
The 2018 Maruti Suzuki Ertiga facelift has been spotted recently. Images from Autocar India, showcase a completely camouflages MPV undergoing its final testing ahead of its expected launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+