TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
தலையில் லாரி ஏறியும் எதுவும் ஆகவில்லை! ஹெல்மெட் போட்டதால் தப்பிய உயிர்..! பதற வைக்கும் வீடியோ..!
ஹெல்மெட் போட்டு சென்ற வெளிநாட்டினர் ஒருவர் விபத்தில் சிக்கும் போது தலையில் லாரி ஏறியும் அவருக்கு எதுவும் ஆகவில்லை. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்தாவது நம்மூரில் ஹெல்மெட் போடாமல் செல்லும் பலர் இனி ஹெல்மெட் போடுவார்களா?.
இந்தியாவில் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெரும் அளவிற்கு வரவில்லை. பலர் தொடர்ந்து ஹெல்மெட் போடாமலேயே பயணம் செய்துவருகின்றனர். இது குறித்து அரசு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும், சட்டங்கள் போட்டாலும் மக்கள் மத்தியில் அதன் அவசியம் புரியவில்லை.
சமீபகாலமாக இந்தியா முழுவதும் உள்ள போலீசார் ஹெல்மெட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தாலும். போலீசாரை ஏமாற்றவே மக்கள் முயல்கிறார்களே ஒழிய தொடர்ந்து எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஹெல்மெட் போட மறுக்கிறார்கள். சிலர் மட்டுமே அரசின் விதியை முறையாக கடைபிடிக்கின்றனர். சிலர் குறைந்த விலைக்கு தரமில்லாத ஹெல்மெட்டை அணிந்து அரசை ஏற்றியதாக எண்ணி தங்களை தாங்களே ஏமாற்றி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் போலீசார் ஹெல்மெட்டிற்காக பிடிப்பது வெகுவாக குறைந்து விட்டது. தமிழகத்தில் பல இடங்களில் ஹெல்மெட்போடாமல் பைக்கில் செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில்இருக்கிறது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஸ்கூட்டரில் சென்ற ஒருவர் ஹெல்மெட் போட்டு சென்றதால் தலையில் கண்டெய்னர் லாரி ஏறியுமே எதுவும் ஆகாத ஆச்சரிப்படும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ ஒரு காரின் டேஷ் போர்டில் உள்ள கேமராவில் பதிவாகிய வீடியோ இதில் அந்த காருக்கு முன்னே ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த காருக்கும் லாரிக்கும் இடையில் இரண்டு பைக்கில் தனித்தனியாக இரண்டு பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த வாகனங்கள் அனைத்தும் வலதுபுற லேனில் சென்று கொண்டிருந்தது.
அதில் ஒருவர் லாரியின் வலதுபுறமாக சென்று லாரியை ஓவர் டேக் செய்ய முயற்சி செய்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலையின் ஒரமாக இருந்த நடைபாதை மீது இவரது ஸ்கூட்டர் உரசி நிலத்தடுமாறி லாரியின் குறுக்கே விழுந்தார். நொடிப்பொழுதில் இந்த விபத்து நடந்ததால் லாரி டிரைவரால் லாரியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அவரது தலை மீது லாரி ஏறி இறங்கியது.
இந்த காட்சி அனைவருக்கும் நெஞ்சை பதற வைக்கும் விதமாக இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு தலையில் எதுவுமே ஆகிவில்லை. மாறாக ஹெல்மெட் மட்டுமே உடைந்தது. மேலும் அவரது இடது கையில் அடிபட்டது.
இச்சம்பவம் அங்கிருந்தவர்களையும் அந்த காட்சியை காண்பவர்களையும் அதிர்ச்சியில் உரைய வைத்தது. அதன் பின் லாரியில் டயர் தலையில் ஏறியவர் தானாக எழுந்து ஹெல்மெட்டை கழிட்டி கொண்டே தான் உயிர் தப்பிய மகிழ்ச்சியில் சிரித்து கொண்டு அருகில் இருந்த இடத்தில் உட்காந்து கொண்டார். இந்த வீடியோ காட்சியை நீங்கள் கீழே காணலாம்.
இதன் மூலம் ஹெல்மெட் என்பது பைக் ஓட்டும் போது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர முடியும். நாம் எதிர்பார்க்காத நேரங்களில் நொடிப்பொழுதில் நாம் என்ன நடக்கிறது என உணரும் முன்னரே பெரும் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் பைக்கில் செல்லும் போது ஹெல்மெட்டை உங்கள் உடலின் அங்கமாகவே நினைத்து அதை மறக்காமல் உங்களுடன் எடுத்து செல்லுங்கள்.
டிரைவ் ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
- புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'
- மோடி திறந்து வைத்த எக்ஸ்பிரஸ் ஹைவேயில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள்டியூக்,
- டோமினாருக்கு போட்டியாக களமிறங்கும் சென்னை பசங்க தயாரித்த எலக்ட்ரிக் பைக்!
- டுகாட்டி மான்ஸ்டர் 797+ சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்.... விலை ரூ 8.03 லட்சம்
- எலக்ட்ரிக் வாகன போட்டியில் சீனாவை விரட்டும் போதி தர்மர் மண்... சென்னை, கிருஷ்ணகிரியில் முதல் திட்டம்