டுகாட்டி மான்ஸ்டர் 797+ சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்.... விலை ரூ 8.03 லட்சம்

By Balasubramanian

டுகாட்டி நிறுவனத்தின் மான்ஸ்டர் 797+ என்ற பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் மான்ஸ்டர் 797 என்ற பைக்கின் அப்டேட்டட் வெர்ஷனாக இருந்தாலும் அதன் விலை அதே ரூ 8.03 லட்சத்தில் தான் விற்பனைக்கு வருகிறது.

டுகாட்டி மான்ஸ்டர் 797+ சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்.... விலை ரூ 8.03 லட்சம்

டுகாட்டி இந்தியா நிறுவனம் மான்ஸ்டர் 797+ என்ற சூப்பர் பைக்கை இந்தியாவிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்துவரும் மான்ஸ்டர் 797 பைக்கில் இரண்டு புதிய அம்சங்களை புகுத்தி அந்த பைக்கின் பெயருடன் + என்ற குறியீடை சேர்த்து மான்ஸ்டர் 797+ என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797+ சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்.... விலை ரூ 8.03 லட்சம்

இந்த பைக்கில் ஹெட்லைட்டில் சிறிய மாற்றமும், பைக் சீட்டின் பின்புறம் உள்ள மேட்ச் பில்லன் சீட் பகுதியின் கலரிலும்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தவிர டுகாட்டி மான்ஸ்டர் 797+ பைக் பழைய மான்ஸ்டர் 797 பைக்கில் உள்ள அதே அம்சங்கள் தான் இதிலும் உள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797+ சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்.... விலை ரூ 8.03 லட்சம்

டுகாட்டி மான்ஸ்டர் 797+ பைக்கின் விலை மான்ஸ்டர் 797 பைக்கை விட அதிகமாக இல்லை இரண்டும் ஒரு விலையில் தான் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் இந்த இரண்டு பைக்குகளும் டில்லி எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 8.03 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

டுகாட்டி மான்ஸ்டர் 797+ சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்.... விலை ரூ 8.03 லட்சம்

மேலும் 797+ பைக் ரூ 30 ஆயிரம் மதிப்பிலான அக்ஸசரீஸ்களை இலவசமாக பெறுகிறது. டுகாட்டி நிறுவனத்தின் மான்ஸ்டர் ரக பைக்குகள் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில் இந்த ஆஃபரை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது 797+ பைக்கிற்கு மட்டும் பொருத்தும்.

டுகாட்டி மான்ஸ்டர் 797+ சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்.... விலை ரூ 8.03 லட்சம்

மான்ஸ்டர் ரக பைக்கில் வெளியாகியிருக்கும் இந்த 797+ மற்றும் 797 டுகாட்டி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பைக்குகளில் உலகளவில் அதிகமாக விற்பனையாகும் பைக்காக உள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797+ சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்.... விலை ரூ 8.03 லட்சம்

இந்த பைக் 803 சிசி எல் டுவின் ஏர் கூல்டு இன்ஜினுடன் 8250 ஆர்பிஎம்மில் 72 பிஎச்பி பவரையும், 5750 ஆர்பிஎம்மில் 67 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இரண்வு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 797+ சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்.... விலை ரூ 8.03 லட்சம்

இந்த பைக்கின் சஸ்பென்ஸன் ஆப்ஷனை பொருத்தவரை முன்பக்கம் அப்சைடு டவுன் போக்ஸ், பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஸன்கள் பொருத்தப்பட்டுள்ளன. டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் அதிக பவர்புல் மான்ஸ்டர் வெர்சன்களை வெளியிடுகிறது.

டுகாட்டி மான்ஸ்டர் 797+ சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்.... விலை ரூ 8.03 லட்சம்

டுகாட்டி நிறுவனம் மான்ஸ்டர் ரக பைக்கை முழுமையாக கட்டமைக்கப்பட்ட வடிவிலேயே இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. டுகாட்டி நிறுவனம் ஸ்கிரம்பிளர் ரக பைக் முதற்கொண்டு அத்தனை பைக்குகளையும் இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட வடிவிலேயே இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.

டுகாட்டி மான்ஸ்டர் 797+ சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்.... விலை ரூ 8.03 லட்சம்

ஆனால் இந்த பைக்கிற்கு விற்பனைக்கு பின் பராமரிப்பு செலவு அதிகமாக இருக்கிறது. இந்த பைக் முழுவதும் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் விலை அதிகமாக இருக்கிறது. இந்நிறுவனம் உதிரிபாகங்களை மற்றும் இறக்குமதி செய்து இங்கு வைத்து அதை பொருத்தி விற்பனை செய்தால், பராமரிப்பு செலவு குறைவாக இருக்கலாம். அப்படி நடந்தால் டுகாட்டி பைக்கின் விற்பனையும் இந்தியாவில் அதிகமாகலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

01. டிராக்டர் ஸ்டண்டில் மிரட்டும் 10 வயது சிறுவன்!!! 90's கிட்ஸ் மீம்ஸ் போட ஒரு டாபிக்!!!

02. பைக்கில் டூர் செல்ல ஏற்ற டாப் 5 பைக்குகள்

03. தற்கொலை செய்யப்போகிறதா டாடா நேனோ கார்?

04. ரஜினியின் காலாவுக்காக கார்களில் அரங்கேறும் சட்ட விரோதம்? வேற லெவல் ரசிகர்களுக்கு சிக்கல்?

05. பாரிசாலனுக்கு வேலூர் பஜாஜ் சர்வீஸ் சென்டரில் உண்மையில் நடந்தது என்ன? இலுமினாட்டிகளின் சதியா?

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Monster 797+ superbike launched in India. Read in Tamil
Story first published: Monday, June 11, 2018, 11:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X